கேட்கத்தோன்றும் சில 'ஏன்'கள்
_ லதா ராமகிருஷ்ணன்
ஒரு திரைப்படம் வெளியானால் அதை பல்வேறு காரணங்களுக்காக – வெளிப்படையானவை யும் மறைமுகமானவையும் – பாராட்டியும் தூற்றி யும் எழுதவும், பார்க்கவேண்டிய படம் என்று விளம்பரப் பதாகைகள் வைப்பதாய் அறிவிப்புகள் தரவும் பல இலக்கியவுலகப் படைப்பாளிகள் வரிந்துகட்டிக் கொண்டுவருவதுபோல் ஒரு புத்தகம் – கவிதைத் தொகுப்போ, சிறுகதைத்தொகுப்போ, புதினமோ, அ-புனைவு எழுத்தோ – திரைப்படத் துறையினர் வருவதில்லையே ஏன்?
ஏன்? - 2
Sub-ext என்பது இலக்கியப்பிரதிக்கு மட்டுமே உரித் தானதா? திரைப்படங்களில் அதைத் தேடித் துழாவ வேண்டியதில்லையா?
Sub-Text என்பது பிரதிக்கு உள்ளே மட் டும் இருப்பதா? தேடவேண்டி யதா?
பிரதிக்கு வெளியே இருக்காதா?
தேடக் கூடாதா?
ஏன்? - 3
பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என்றெல்லாம் முழங்கும், போராடும் அரசியல் கட்சிகள் மாற்றுக் கருத்தைச் சொல்லக்கூட வழியற்ற, அப்படியே சொல்வதற்கான இடமிருந்தாலும் அப்படிச் சொல்பவர் கட்டங்கட்டப்படுவதான சூழலையே தத்தமது கட்சிக்குள் நியமமாய்க் கொண்டிருப்பது ஏன்?
ஏன்..? - 4
JACK OF ALL TRADESஆகக்கூட இல் லாத சிலர் அல்லது பலர்
தம்மை MASTER OF ALL ஆக பாவித்துக் கொண்டு சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும்
பற்றி மிக மிக மேம்போக்காக, பொத்தாம்பொதுவாக, NON-STOPஆகப் பேசிக்கொண்டேயிருக் கிறார்களே, ஏன்?
சில பிரபலங்களின் சில வாசகங்களை மட்டும் தேர்ந்தெடுத்துத் திரும்பத்திரும்பச் சொல்லி சக மனித மனங்களில் உருவேற்றப் பார்ப்பவர்கள் அதையே இன்னொருவர் செய்தால் பதறிப்போய் பழிப்பதும், பழிசொல்வதும் ஏன்?
ஏன்? - 6
ஏன்? - 6
No comments:
Post a Comment