LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 20, 2022

சமீபத்தில் கேட்கக் கிடைத்த அருமையான சொற்பொழிவு. _ லதா ராமகிருஷ்ணன்

 சமீபத்தில் கேட்கக் கிடைத்த அருமையான சொற்பொழிவு.

 _ லதா ராமகிருஷ்ணன்

https://youtu.be/p8g24gcKCF8

https://www.youtube.com/watch?v=hXMNCqZAcSE


அவரவர் கட்சியை உயர்த்திப் பிடிப்பதையே, எதிர்க்கட்சிகளை எத்தனைக் கெத்தனை தரக்குறைவாகத் தாழ்த்திப் பேசுவதையே நோக்கமாகக் கொண்டு, அல்லது,  நிலவும் சமூகச் சீர்கேடுகளுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் காரணமாகக் காட்டிக்காட்டி வன்மம் நிறைந்த வார்த்தைகளால் அவதூறு பேசுவதையே முழுநேர வேலையாகக் கைக்கொண்டு கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி யபடி,    கையில் பிடித்திருக்கும் தாளையே பார்த்தபடி  படித்தபடி, அவ்வப் போது தலையை நிமிர்த்தியபடி நடத்தப்படும் சொற்பொழிவுகளையே தமிழ்ச்சூழலில் சமீபகாலமாக அதிகம் கேட்க நேர்கிறது. 

ஆனால், ETHICS (விழுமியங்கள்என்ற பொதுவான கருப் பொருளில் தமிழக பா.. தலைவர் திருஅண்ணாமலை MEGA CA STUDENTS CONFERENCE – 2022 என்ற நிகழ்வில் மாணாக்கர்களிடையே CREDENCE என்ற தலைப்பில் ஆற்றொழுக்காக ஆற்றியிருக்கும் இந்தச் சொற்பொழிவு அத்தனை அருமையாக இருக்கிறது.

யாரையும் நக்கலாகப் பேசுவதோ குத்தலாகப் பேசுவதோ இல்லை. மாணவர்களிடையே உரையாடக் கிடைத்த மேடையை அரசியல் முழக்கங் களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முயலாமல் In all seriousness கையிலுள்ள கருப்பொருள் குறித்து அத்தனை இயல்பாக, சரளமாக அவர் ஆற்றியிருக்கும் இந்த உரை போல் கேட்டு வெகு நாட்களாயிற்று.

 யாம் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப விருப்பமுள்ள வர்கள் கேட்டுப் பயனடையட்டும் என்று இந்த உரையின் காணொளியை (ஒருவேளை காணொளியை இங்கே சரிவர காண இயலாவிட்டால் அதைக் காண உதவியாய் அதன் லிங்க்கையும் இங்கே தந்துள்ளேன். 

https://youtu.be/p8g24gcKCF8

https://www.youtube.com/watch?v=hXMNCqZAcSE

என்னை சங்கி என்று கூறுபவர்கள் கூறுங்கள். MONKEY என்றுகூட கூறுங் கள். பாதகமில்லை. ஆனால் இந்தக் காணொளியை திறந்த மனதோடு முழுவதும் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்!

No comments:

Post a Comment