எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...
//எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. //
பத்து வார்த்தைகளுக்குள் எத்தனை பெரிய வாழ்வுப் பாடத்தைச் சொல்லி விட்டார் வள்ளுவர்!
ஆனால் அவர் குறட்பாக்கள் எழுதியதைத் தன்னுடைய ‘சாதனை’யாக எண்ணியிருந்திருக்க மாட்டார்; பிரகடனம் செய்திருக்க மாட்டார்; அப்படி மற்றவர்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே தோன்றுகிறது.
சாதனை என்ற வார்த்தையை ‘செய்ய முடியாததைச் செய்தல்’ என்று பொருள் கொள்ளலாமா?
லிப்கோ தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதியில் காரியம் முடித்தல் – accomplishment of a work, இடைவிடாத பயிற்சி – steady practice , என்ற அர்த்தங்களோடு பொய் - Falsehood என்ற அர்த்தமும் தரப்பட்டிருக்கிறது.
Winslow தமிழ் _ ஆங்கில அகராதியில் சாதனை என்ற வார்த்தைக்கு கீழ்க்காணும் அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. *சாதனை , s. W. p. 916.
SA'DHANA. Steady and persevering practice, unwearied application, steady zeal,
constancy, persistence in an opinion; steadfast maintenance of doctrines,
&c., விடாதமுயற்சி. 2. Perfect imitation of
life, appearance of reality–as in dramatic actions, நடித்துக் காட்டுகை. 3. Retaining malice, சலஞ்சாதிக்கை. 4. Dissimulation, misrepresentation, falsehood...
ஆக, சாதனை என்ற சொல்லுக்கு காரியம் முடித்தல் என்ற அர்த்தமும் இருக்கிறதுதான். ஆனால், அவ்வப் போது படிக்கக்கிடைக்கும் சில சாதனகளை – கின்னஸ் சாதனை உட்பட – படித்தால் சாதனை என்ற வார்த்தைக் கான பொருள் குறித்து நிறைய கேள்விகள் மனதில் எழுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒருவர் இருபதே நிமிடங்களில் இருநூறு முட்டைகளை விழுங்கினால் அது சாதனை எனப்படுகிறது. இது எவ்வளவு தூரம் சரி?
ஒரு தனிமனிதனின் அளப்பரிய ஆற்றலை இத்தகைய செயல்கள் அடிக் கோடிட்டுக் காட்டுவதாக சொல்லப்படு வதில் கண்டிப்பாக உண்மையிருக் கிறது. ஆனாலும், அந்த அளப்பரிய ஆற்றல் வெளிப்பட்டதன் விளைவாக என்ன நடக்கிறது? ஏதாவது பயன் விளைந்திருக்கிறதா என்பது தெளிவாக வில்லை.
உதவும் கரங்கள் சேவை அமைப்புக்குச் சென்றால் இரண்டு கைகளையும் இழந்த குழந்தைகள் காலால் எழுதுவதும் படம் வரைவதும் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கும்!
இத்தகைய மனித முயற்சிகள் மற்றவர்களுக்கு உத்வேக மளிப்பதாய் அமையும். அதே சமயம், எல்லோருக்கும் ஒரேயளவாய் திறனாற்றல்கள் வாய்ப்பதில்லை, அதில் குறைகாண வேண்டியதில்லை என்பது புரியாமல் இத்தகைய சாதனைகளைச் செய்யும் குழந்தைகளையே முன்னுதாரணங்களாகக் காட்டிக்காட்டி மற்றவர்களை மட்டந்தட்டுவதும் நடக்க வழியுண்டு.
ஒரு விஷயத்தைச் செய்வதால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் சரி. ஆனால், அதை சாதனை என்று சொல்லலாமா?
முன்பு BIG BOSS நிகழ்ச்சியை பயனற்றது, சமூகத்திற்கு எந்த நன்மையும் செய்யாதது என்றெல்லாம் தொடர்ச்சி யாகப் பலர் விமர்சனம் செய்தபோது நிகழ்ச்சியில் இடம் பெறும் நடிகர் கமலஹாஸன் கிரிக்கெட்டால் கிடைக்கும் சமூக நன்மை என்ன என்று எதிர்க்கேள்வி கேட்க எதிர்ப் புக் குரல்கள் சற்றே அடங்கின.
கிரிக்கெட்டினால் விளையும் சமூகப்பயன்(?) குறித்தும் சிலர் எழுதினார்கள்.
ஆனால், பிக் பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை யாரும் சாதனை என்று குறிப்பிடுவதில்லை,
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடினால் மகத்தான சாதனை என்று சொல்வதும் வழக்கமாயிருந்தது.
ஆனால், எத்தனையோ ‘டப்பா’, திராபை’ படங்கள் 100 நாட்கள் ஓடியதெல் லாம் நமக்குத் தெரியும்.
’நீங்களெல்லாம் கவிதை எழுதி என்ன சாதித்துக் கிழித் தீர்கள்?’ என்று கேட்பவர்களும் உண்டு.
பெரும்பாலும் கவிகள் கவிதை எழுதி எதுவும் சாதனை புரிந்த தாகப் பறையறிவித்துக்கொள்வதில்லை. (ஓரிருவர் அப்படி சிலுப்பிக்கொள்வது உண்டு தான் - ஆனால், அவர்களை வேறு யாரும் பொருட்படுத்துவதில்லை!).
ஆனால், ஒரு நல்ல கவிதையில் ஒரேயொரு நல்ல வரி அல்லது சில வரிகள் அல்லது பல வரிகள் அல்லது கவி தையின் அத்தனை வரிகளுமே சாதனை என்று சொல்லத்தக்க அளவில் பரிபூரண மாக அமைந்துவிடுவதுண்டு.
No comments:
Post a Comment