LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 26, 2020

கவிஞர் முகமது பாட்சாவின் 'ஆரிகாமி வனம்' கவிதைத் தொகுப்பு குறித்து

கவிஞர் முகமது பாட்சாவின் 'ஆரிகாமி வனம்' கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பகிர்வு கள்
_ லதா ராமகிருஷ்ணன்
M.rishan Shareefபுத்தகங்களை வாசிப்பவர்கள் - Book Readers இல் இடம்பெற்றுள்ள அறிமுகக் கட்டுரை)


ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவும் கவிஞர் முகமது பாட்சாவும்



கவிஞர் முகமது பாட்சாவின்
கவிதைத் தொகுப்பு
49 மூலக் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும்
ஆங்கில மொழியாக்கம் : திரு.ஸ்ரீவத்ஸா
மொத்தம் 116 பக்கங்கள்
விலை: ரூ. 100
முதற்பதிப்பு : 2019
வெளியீடு: படைப்புக் குழுமம்
# 8, மதுரை வீரன் நகர்
கூத்தப்பாக்கம்
கடலூர் – தமிழ்நாடு (607 002)
அலைபேசி: 94893 75575

ORIGAMI: காகிதங்களை பலவகையாக மடித்து பல்வேறு வடிவங்களை உருவாக்கும் கலை ஆரிகாமி என்று அறியப்படுகிறது. ஆரிகாமி வனம் என்றால் காங்க்ரீட் வனம் என்பது போல் காகித வனம் என்று கொள்ளலாமா?
கவிஞர் முகமது பாட்சாவின் முதல் தொகுப்பு இது. என்றாலும், பல்வேறு இலக்கிய இதழ்களில் இவரு டைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன; வெளியாகிவருகின்றன. ஃபேஸ்புக் சமூக ஊடக வெளியிலும் இவருடைய கவிதைகள் பதிவேற்றப் பட்டிருக்கின்றன. காத்திரமான கவிதைகள் எழுது பவர். வார்த்தைகளை மேம்போக்காகப் பயன்படுத்தா தவர். நேரிடையான கவிதைகள், பூடகமான கவிதை கள் என இருவகைகளையும் நேர்த்தியாகக் கையாள் பவர். எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:
எழுதப்பட்ட விதி
சாத்தான்
சாக்கடையில் விழுந்துவிட்டதாகச் சொன்னார்கள்
தேவதூதர்கள் அவனைக் காப்பாற்றி
உட்காரவைத்தார்கள்.
வழிப்போக்கன் காரணம் கேட்டான்.
சாத்தான் இறந்துவிட்டால்
தேவதூதர்களுக்கு வேலையில்லையென்ற
விதியிருக்கிறதாம்.

இந்தக் கவிதைக்கான திரு.ஸ்ரீவத்ஸாவிின் ஆங்கில மொழியாக்கம் பின்வருமாறு:
WRITTEN DESTINY
The Devil
had fallen
into the sewers
they said.
Angels
rescued
and sat him up
on the sides.
The passersby
wondered why!
There appears to be a rule
that angels will be jobless
if the Devils were dead.
இது சுலபமாகப் புரியும் கவிதைதான் என்றாலும், இந்தக் கவிதை ஒற்றை அர்த்தக் கவிதையல்ல. இது புரியாமல் நவீன கவிதைத்தொகுப்புகளுக்கு விமர் சனம் எழுதும் சிலர் ஒரு கவிதை தனக்குத் தரும் அர்த்தத்தையே அதன் இறுதியான ஒற்றை அர்த்த மாகத் தந்துவிடுகிறார்கள்.
’மண் எழுதும் கவிதை’ என்ற தலைப்பிலான கவிதை கூடுதல் கவித்துவம் வாய்ந்ததாக என் வாசக மனதுக்குத் தோன்றுகிறது.
மண் எழுதும் கவிதை
கடல் என்பதை
கட்டுமரத்தால் எழுதும் மீனவன்
மீன்களை
அலையென்று பிடித்துவருகிறான்
’ஆகாசம் என்பதை
பறவைகள்தான் எழுதிவைக்கின்றன
வனம் என்பதை
யானையின் சாணியும் உணர்த்தும்
எழுதுகோல் தேவையில்லை
இயற்கை
தன் கவிதைகளை எழுதிவைக்க….
மழையென்பது
வானத்திற்கு பூமி கொடுத்த வரம்
சிற்றுயிர்களின் சப்தமின்றிப் போனால்
சகலமும் செத்துவிடும்….
சங்கீதம் யாரும்
அவற்றிற்குக் கற்றுக் கொடுத்ததில்லை…
சாகாவரத்தின் மண்
நம்மைப் பற்றி கவிதை எழுதுகிறது….
படிக்காமல்
நாம் அதனை கசக்கி எறிகிறோம்…
படித்தவர்களென்று
நம்மை நாமே சொல்லிக்கொண்டு.
English Translation by Mr..Srivatsa:
THE POEM OF THE SOIL
The fisherman
who writes the sea
with a catamaran,
brings a catch of fish
as a wave.
Only the birds write
what is space.
Even the elephant’s droppings
would indicate a forest.
A pen is not necessary
for nature to write its poetry.
Pain is the boon granted by
the earth to the sky.
If the sounds of the little creatures
are silenced, everything will be dead.
Nobody taught music to them.
The soil of immortality
writes a poem
about us.
Without reading it,
we crush and throw away,
calling ourselves educated.
இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் கவிஞர் இந்திரன், மற்றும் பதிப்புரை, கவிஞரின் என்னுரை ஆகியவை அர்த்தச்செறிவு மிக்கவையாய் இருக்கின்றன. வரலாற்றில் எழுத்துக்கு இருக்கும் வலிமையை பதிப்புரை எடுத்துரைக்கிறது. மகாகவி களுக்குக் கூட கவிதை வீட்டுவாடகை கொடுத்ததாக வரலாறு இல்லை என்று சுட்டிக்காட்டும் கவிஞர் இந்திரன் ஆனாலும் நாம் கவிதையை நேசிப்பதற் கான காரணங்களை எடுத்துரைக்கிறார். கவிஞர் முகமது பாட்சா தனது ‘என்னுரையில்’ கவிதை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.
இந்த நூல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக் கிறது. மூல கவிதையும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் எதிரெதிரே தரப்பட்டிருக்கிறது. இரண்டு மொழிகளில் ஒரு மொழி தெரியாதவர்கள் இன் னொரு மொழியில் கவிதைகளைப் படித்துக்கொள்ள முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதில் உள்ள போக்குகளை அறிந்துகொள்ளவும் இத்தகைய இரு மொழித் தொகுப்புகள் வழிவகுக்கும்.
அதேசமயம், மூல மொழி தெரிந்தவர்கள் மொழி பெயர்ப்பைப் பொருட்படுத்திப் படிப்பார்களென்று சொல்ல முடியாது.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கும் திரு. ஸ்ரீவத்ஸா கடந்த சில வருடங்களாக ஃபேஸ்புக்கில் தனது பக்கத்தில் தொடர்ந்து நவீன கவிதைகளை நேர்த்தியாக மொழிபெயர்த்து வெளியிடுபவர். தான் மொழி பெயர்க்கும் ஒவ்வொரு கவிதையின் சாரத்தையும் சுட்டுவதாய் அவர் தரும் சிறு குறிப்புகள் அருமை
யானவை. இவருடைய கவிதை மொழிபெயர்ப்புகள் தொகுப்பாக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஆனால், அவசியம் செய்யப்பட வேண்டும். இந்தத் தொகுப்பில் முகப்பு அட்டையில் மொழிபெயர்ப்பாள ரின் பெயர் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புலப் படும்படி தரப்பட்டிருக்கலாம். அதேபோல், மொழி பெயர்ப்பாளர் குறித்த சிறு அறிமுகமாவது தரப்பட்டி ருக்கவேண்டும்.
மேலே தரப்பட்டுள்ள இரண்டு கவிதைகளுக்கான திரு.ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை யும் மேலே தந்துள்ளேன். அவை அவரது கவனமான, நேர்த்தியான மொழிபெயர்ப்புக்கு சான்று பகரும். கவிதைகளை மொழிபெயர்ப்பதில் ஒரேயடியாக சுதந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை மொழிபெயர்ப் பாளர். கவிதை வரிகளை ‘பொழிப்புரை’ தருவதாக மொழிபெயர்க்கவில்லை.
நவீன கவிதையை ஒரு வாசகனாக அர்த்தப்படுத்திக் கொண்டு, கவிஞரிடம் அர்த்தத்தைக் கேட்டறியாமல் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களும் உண்டு. அவர்கள் ஒரே கவிதையை இருவிதமான பொருள்களில் மொழிபெயர்க்க வழியுண்டு. ஒரே மொழிபெயர்ப்பாளர் ஒரே கவிதையை இருவேறு சமயங்களில் மொழிபெயர்க்க நேரும்போது அவை யிரண்டும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வார்த்தைத் தேர்வு வேறாக அமையும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல், மூலமொழி வேறாக இருந்து அதிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப படும் படைப்புகள் உண்டு. அதே படைப்புக்கு ஆங்கி லத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியாக்கப் பிரதி கள் இருக்க வழியுண்டு. தமிழ் மொழிபெயர்ப்பு எந்த ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது என்பதும் கணக்கிலெடுத் துக்கொள்ளப்படவேண்டியது.
இத்தகைய நுட்பங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஒரு மொழிபெயர்ப்பு நூலை மேம்போக்காகக் குறை சொல்லி, மூல கவிதையில் ஒரு வார்த்தைக்குத் தனக்குத் தெரிந்த இலக்குமொழி வார்த்தையை மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தவில்லை என்ப தையே குறையாகச் சுட்டிக்காட்டி, அப்படி ஒன்றி ரண்டு வார்த்தைகளைக் கொண்டு அந்த மொழி பெயர்ப்பு முயற்சி முழுவதையும் மட்டந்தட்டி அதன் மூலம் மிக எளிதாகத் தம்மைப் பீடத்தி லேற்றிக் கொண்டுவிடும் விமர்சனப் போக்கே அதிகமாக நிலவுகிறது. (இவை குறித்து எனது 'ஒரு மொழி பெயர்ப்பாள ரின் வாக்குமூலம்’ என்ற சிறுநூலில் ஓரளவு பேசியிருக்கிறேன்).
மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விமர்சனங்களில் குறை காண்பதில் காட்டும் ஆர்வம் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில் உள்ள நிறைகளைப் பேசுவதில் காட்டப்படுவதில்லை என்பது வருத்தமான நடப்புண்மை.

1 comment: