LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 16, 2026

POET BRAMMARAJAN - BEING FAR FROM THE MADDING CROWD

 POET BRAMMARAJAN - 

BEING FAR FROM THE MADDING CROWD

https://brammarajan.wordpress.com

ஒவ்வொரு நாளும் அல்லது சில நாட்களுக்கு ஒரு முறை கவிஞர் பிரம்மராஜன் தன்னுடைய வலைப் பூவில் https://brammarajan.wordpress.com/ பதிவேற்றிக் கொண்டிருக்கும் உலகத்தரமான மொழிப்பெயர்ப்பு களைப் படிக்கும்போது எனக்கு FAR FROM THE MADDING CROWD என்ற வரி தான் நினைவுக்கு வரும்.

இன்று அவருடைய வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ள திலிருந்து சில வரிகளை இங்கே பகிரத் தோன்றியது:

கவி பிரம்மராஜனின் WORDPRESS வலைத்தளத்திலிருந்து
....................................................................................................................................
Invisible Cities-Dialogue between Kublai Khan and Marco polo/இட்டாலோ கால்வினோ-கண்காணா நகரங்கள்-7
......................................................................................................................................
குப்ளை: ஒருவேளை நம்மிடையிலான இந்த உரையா டல் குப்ளைகான் மற்றும் மார்க்கோ போலோ என்ற பட்டப்பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டு பிச்சைக்காரர் களுக்கு இடையில் நடப்பதாய் இருக்கலாம். அவர்கள் அந்தக் குப்பைக் குவியல் களைச் சலித்து எடுக்கும்போது, உடைந்த கப்பல் பகுதிகளை, கிழிந்த காகிதத் துண்டுக ளைக் குவியலாய் அடுக்கியபடி, மோசமான மதுவின் சில மிடறுகளைக் குடித்ததால் போதை உண்டாகி, அவற்றைச் சுற்றி கிழக்கின் சகல செல்வங்களும் மின்னுவதாகக் காண்கிறார்கள் மற்றவர்கள்.

போலோ: ஒரு வேளை இந்த உலகில் மிஞ்சியிருப்ப தெல்லாம் குப்பைக் குவியல்களால் மூடப்பட்ட தரிசு பூமியும் மற்றும் மாமன்னர் கானின் தொங்கும் தோட்ட மும் மட்டுமே. நம் விழி மூடிகள்தான் அவற்றைப் பிரிக்கின்றன ஆனால் எது உள்ளிருக்கிறது என்றும் எது வெளியில் இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

மந்திரமாவது சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மந்திரமாவது சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நல்ல ரொம்ப நல்ல ரொம்ப ரொம்ப நல்ல
அல்ல அல்லவே யல்ல யல்ல அல்ல
மெல்ல மெல்ல சொல்ல சொல்ல
சொல்லெல்லாம் கல்லாகும் வல்வினையில்
வில்லிலிருந்து விடுபடும் அம்பு
நில்லாது செல்வதும் கொல்வதும்
நியமமாகிய மெய் இல்லாதுபோமோ
புல் கத்தியாகும் வித்தை கல்லாதிருக்கலாமோ
எல்லோருக்கும் துல்லியமாய் காணக்கிடைக்குமோ
El Doradoவை.

(*El Dorado ¬_ ஸ்பானிய தொன்மக் கதையில் இடம்பெறும் 'தங்க மனிதன்'. காலப்போக்கில் இந்தச் சொல் பல மாற்றங்களைக் கண்டு இன்று தொலைந்துபோன அரியவற்றைக் குறிப்பதான சொல்லாட்சியாக விளங்கு கிறது.

தினம் மகளிர்……… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

//2020, MARCH 12, - மீள்பதிவு//
தினம் மகளிர்………
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
நான்காம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
நாலு வயதுப் பெண் குழந்தையை
அண்டை வீட்டைச் சேர்ந்த
நாற்பது வயது ஆணொருவன்
பாலியல் வன்கொடுமைக்காளாக்கி
யிருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன் தமிழ் நாளிதழில்
எட்டாம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
காதலித்த பதினான்கு வயதுப் பெண்ணை
அவள் காதலன் சிநேகிதர்களோடு சேர்ந்து
அசிங்கமாகப் படம் பிடித்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
ஐந்தாம் பக்கத்தில் வெளியான செய்தியில்
சிறுநீர் கழிக்க வீட்டின் பின்பக்கம் சென்ற
பனிரெண்டு வயதுச் சிறுமியின் வாயைப்
பொத்தி இழுத்துச் சென்ற இரண்டு பேர்
பெண்டாண்டு முடித்துத் துண்டாக்கிப்
போட்டிருந்தார்கள்.
நேற்றைய தமிழ் நாளிதழில்
நினைவிலிருந்து நழுவிவிட்ட எண்ணிட்ட
பக்கமொன்றில்
தாய் வேலைக்குப் போன பின்
தனியாயிருந்த ஒன்பது வயது மகளை
அச்சுறுத்திப் புணர்ந்து முடித்தான்
பாவி அப்பா.
படித்துப் படித்து மனதில் பரவிய
சொல்லொணா வலியில்
துடித்துத் துவண்டவர்கள்
பெண்கள் மட்டுமல்லர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி சார்ந்து
அவளை ஆதரித்த, அவதூறு செய்த
பெண்களும் இங்குளர்.
தன் மகளிடமே தவறு செய்த கணவனைக்
கைதுசெய்யவைத்த மனைவியைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
மனைவியை இழந்த பின் தனது மூன்று
மகள்களுக்காக
மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்
அந்தத் தபால்காரர்
தவறாமல் நினைவுக்கு வருகிறார்.
வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து
செண்ட்ரல் ரயில்நிலையத்தில்
வந்திறங்கிய
வளரிளம்பருவப்பெண்ணை
பத்திரமாக அழைத்துவந்து
நான்கு பெண்களாக நின்றிருந்த எங்களிடம்
நம்பிக்கையோடு ’ஒப்படைத்த மனிதரை
எப்படி மறக்க முடியும்?
எல்லாவற்றுக்குமாய்,
ஒரு கையறுநிலையில்,
உறங்க மறுத்துப்
பேதுற்று அழும் மனது.
நிறைய நிறைய சிறுவர் சிறுமிகள்
வளரிளம்பருவத்தினர்,
யுவதிகள் இளைஞர்கள் சூழ
நீள்கிறது
தெருவீதி
ஊருலகு.

நீதிக்கதை - 1 வருகை _ லதா ராமகிருஷ்ணன்

 நீதிக்கதை - 1

வருகை
_ லதா ராமகிருஷ்ணன்

திடீரென்று ஒரு நாள் தற்போதைய அகில உலகப் புகழ் கவிஞர் தன் வீடு தேடி வந்ததும் அந்த மூத்த கவிஞருக்கு ஒன்றும் புரியவில்லை.
சிறிதுநேரம் அந்த மூத்த கவிஞரின் ஒன்றிரண்டு கவிதை களைப் பற்றிப் பேசிய பின் வந்திருந்தவர் “ நீங்கள் அந்த நாட்டில் உங்கள் பிள்ளைகளுடன் தான் இருக்கப்போகி றீர்கள் என்று கேள்விப் பட்டேன். அங்கே உங்களுக்காக தமிழ் இலக்கி யக் கவிதா நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியிருக்கி றதாமே - எனக்கும் உங்களைப் பாராட்டிப் பேச மிகவும் விருப்பம்’ என்று சொன்னபோது அவர் இன்னும் போகாத நாட்டுக்கான கடவுச்சீட்டாகத் தான் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பது புரிந்தது பெரியவருக்கு.

P.சுசீலாக்களின் பெருங்கருணை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //மீள்பதிவு - 2020, மார்ச் 16//

P.சுசீலாக்களின் பெருங்கருணை!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குரல் வழி பரவும் கனிவினிமையில்
ஒவ்வொரு மனதிலும்
காலத்தின் அதலபாதாளத்திலிருந்து
அல்லது, கைக்கெட்டா உயரத்திலிருக்கும்
பரணிலிருந்து
சில தருணங்கள் துடித்தெழுந்து
தரையிறங்கிவருகின்றன.
சில பாதி மூடிய,
இறுக்கமாகத் தாழிட்ட
கதவுகள்
தாமாகவே விரியத் திறந்துகொள்கின்றன.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கண்ணதாசன் தேவிகா கல்யாணகுமார்
ஸ்ரீதர் இன்னும் எத்தனையோ பேருமான
ஒரு சுசீலாவின் வாய்திறந்து
அத்தனை சுசீலாக்களும் பாடுகிறார்கள்.
ஆனாலும் சேர்ந்திசையாகாது,
அவரவருக்கு மட்டுமானதாக
மிகத்தனியாக
இசைத்துக்கொண்டிருக்கிறது பாடல்.
தடையரண்களெல்லாம் தகர்ந்துபோக
ஒரே சமயத்தில் தானாகவும் பிறனாகவும்
வாழக் கிடைக்கும் வாழ்க்கை
இந்த ஏழை மனதை
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
ரசவாதியாக்குகிறது!
அரங்கமொரு பிரபஞ்சவெளியாகிறது!
ஒரு பிறவிக்குள் எத்தனையெத்தனை
மறுபிறவிகள்!
அத்தனையையும் வாழ்ந்துபார்க்கும் ஆர்வமும்
வாழ்ந்தாகவேண்டிய அயர்வுமாய்
அமர்ந்திருக்குமவர்களை
அந்தப் பெண்ணின் குரல் அத்தனை பிரியமாய்
வருடித்தரத் தர
அவர்கள் ஏழைக் குசேலனின் அவிலாய்
தங்கள் கைத்தட்டல்களையும் கண்ணீர்த்துளிகளையும்
பரிசளிக்கிறார்கள்.
பாடல் முடிந்து
கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாய்
மீண்டும் மூடிக்கொண்டபின்னும்
விட்டகுறை தொட்டகுறையாய்
சன்னமாய் மென் காற்று வீச,
இன்னும்
மனமெங்கும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும்
சுநாதம்.
(சமர்ப்பணம்: பாடகி பிரியங்காவுக்கு)

SALUTE TO STEPHEN HAWKING (*Thanks to Lifehack)

 //march 16, 2018 -,

SALUTE TO STEPHEN HAWKING


Twinkle of the brightest star
Flapping wings black hole to brains
Wheel chaired universe
Good bye Stephen William Hawking
_ TAMIL POET NESAMITRAN

Poet Nesamithran’s profound goodbye to Stephen Hawking

Today morning I happened to read a piece of writing by a well-known writer of Tamil criticizing those who hail Stefan Hawking and giving him a rockstar welcome.

Why not? and in fact he deserves much more than a rockstar.

And, The writer has attributed our respect for Stefan Hawking to the slave mentality of people the world over with respect to the Whites. He further says that we give Stefan Hawking the credit of so many scientific inventions which in fact were done in Indian soil centuries and centuries ago.

But, I feel that the world's respect for Stefan Hawking is for the way he had led a meaningful life despite his acute physical inability.

How can anyone ignore this fact- and, in particular, a writer?

And, here I remember the anecdote which observes that when Helen Keller was speaking and writing about her disability and the resultant discomforts, many welcomed it, but when she started to give forth her views on the prevailing social climate it was not that much welcomed.

This is what I perceive as prejudiced mentality of the powerful - class.

In this case, the so-called normal ones. This powerful class can have different dimensions and denomi nations.

Unfortunately many amidst us psychologically belong to this class.
Latha Ramakrishnan


SALUTE TO STEPHEN HAWKING

(*Thanks to Lifehack)
Stephen Hawking’s life is remarkable in many ways.
Firstly, because he was a brilliant physicist and has made groundbreaking discoveries regarding the cosmos, black holes and other unexplored aspects of the universe we live in.
Secondly, he had survived motor neurone disease (ALS) which was diagnosed when he was 21 years old. He was told he had a few years to live and now, at the age of 73, he was very much alive and as mentally active as ever. He had been immobilized since his twenties and then lost the power of speech and he now spoke via a computerized synthesizer.
He was born on Jan 8th in 1942 which was the 300th anniversary of the death of Galileo. At school, he only managed to get average grades. He was curious about how clocks worked and regularly took them to pieces but was not very good at reassembling them!
His studies at Oxford were disturbed by his rowing practice which occupied six afternoons a week. He was the coxswain who steered the boat and kept the rowers safe. The only problem was that his studies suffered and he admitted that he had to cut some corners to pass his exams!
His studies and research brought him countless and prizes. It is interesting to know that he held the Lucasian Chair of Mathematics at the University of Cambridge for 30 years. Isaac Newton held the same position way back in 1669.
Hawking’s relationship with his wife Jane is movingly portrayed in the film The Theory of Everything. When asked what he thought of the film, Hawking replied that there was not enough science in it while his ex wife thought that there was not enough emotion.
Stephen Hawking’s life is an astonishing story of a man who faced enormous odds and went on to become one of the world’s most famous scientists..


பாடகனின் அநாதிகாலம்! -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாடகனின் அநாதிகாலம்!

(“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’
என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்
மேடையில்.....
காதல் என்று அவன் பாடுவது எனக்குக்
காலம் என்பதாய் குழம்புகிறது.
அவனை மாற்றியிருக்குமோ காதல்?
ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?
எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.
சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.
குரலில் கரகரப்பு கூடுகிறது.
ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்
கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்
செல்லப் பாப்பாவும் வரக் காண்பது
சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!
இசையின் உன்மத்தநிலையில்
சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்
அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!
'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'
என்று அழைக்கும் அந்தக் குரல்
கண்ணனுடையதாக _
கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்
பாலினங் கடந்து!
வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்
முன்நெற்றி முடிச்சுருளுமாய்
அந்தப் பாடகனின் குரல்
அநாதி காலத்திலிருந்து கிளம்பி
அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.
மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்
அவனுடைய பிரதிபிம்பங்களாய்….
அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய
விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....
பாடலை எழுதிய, இசையமைத்த
கைகளும் மனங்களும்
தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்
இரண்டறக் கலந்து
ஈரம் நிறைக்கும் இசையில்
அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்
விரவிய ரசிகர்களின்
காலம் இல்லாமலாகியது.
அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்
அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து
அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது
அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி
அவனை அத்தனை அன்போடு
வழியனுப்பிவைக்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை
உருவாக்கித்தந்தவனுக்கு
என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்
நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.
(சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)

கவியின் அரிச்சுவடி - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவியின் அரிச்சுவடி

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கவிதையில் தனக்குக் கிடைத்த வாசகப்பிரதி
அருவருப்பாக இருந்ததாக உணர்ந்தவர்கள்
கவியின் கையை முறித்துப் போடுகிறார்கள்
எண்ணம்தானே எழுத்தாகிறது என்று
இருதயத்தை அறுத்துப்போடுகிறார்கள்
குருதி பெருக்கெடுத்தோட உறு வலியில் முனகியபடியே
வருந்திப் புன்னகைத்தவாறு
முணுமுணுக்கிறார் கவி மெல்ல:
"இருதயமும் இதயமும் ஒன்றல்ல