LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label புதிர்விளையாட்டு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label புதிர்விளையாட்டு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Wednesday, March 20, 2019

புதிர்விளையாட்டு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


புதிர்விளையாட்டு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



இன்னார் இன்னாரை ஏசினால் 
அது மானங்கெட்ட சாதிவெறி;
இன்னார் இன்னாரைப் நீசமாய்ப் புறம் பேசினால்
நிச்சயமாய் அது சமத்துவம் பேணும் நெறி.
அன்னார் இன்னாரை வசைபாடினால் 
அது ஆக்கங்கெட்ட மதவெறி;
இன்னாரை அன்னார் வார்த்தைக்கசையாலடித்தால் 
அது மாவீர அறிகுறி;
அதே வார்த்தைகள்சில கொச்சையாய் பச்சையாய் 
சில நாசூக்கு, முற்போக்கு, மனிதநேய, அறிவார்த்த அறச்சீற்ற 
அன்னபிற முலாம் பூசப்பட்டு.
ஜனவரியை அடுத்து பிப்ரவரி என்று ஒருவர் சொல்லும்போது சரியாவது
அதையே இன்னொருவர் சொன்னால் தவறாவது எப்படி யென்று
கதைக்கச் சொன்னால், ஐயோ உதைக்க வருவார்களே…..
அதையும் இதையும் எதையும் 
பார்த்தபடி கேட்டபடி
கதைக்கும்கதைக்கும் உள்ள வித்தியாசத்தை உள்வாங்கியபடி.
ஆறு மனமே ஆறு _
விதை முளைக்கும் நாளை வழிபார்த்தவாறு.