LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label பிரதியின் பிம்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label பிரதியின் பிம்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, September 10, 2019

பிரதியின் பிம்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிரதியின் பிம்பம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*காலத்தின் சில தோற்றநிலைகள்தொகுப்பிலிருந்து)


வெவ்வேறாகிக்கொண்டே போகும்

வாசகப் பிரதி’ _

வேறு வேறு ஜோடிக் கண்களில்,

அதே விழிகளின் மாறிய பார்வையில்,

காணத்தவறிய வரியிடை வரிகளைக்

கண்டுபிடித்துவிடும்போது,

சொலொன்றின் பொருள் பன்மையாகப்

புரிபடும் அளவில்,

எழுதியவர் பெயரைக் கொண்டு,

விழுந்துவிட்ட அச்சுப்பிழைகளைப் பொறுத்து,

கூடுவிட்டுக் கூடு பாய்வதில் சேரும்

தேர்ச்சியும் அயர்ச்சியுமாய்…..

நொடிப் பொழுதில்

நூற்றுக்கணக்கான வரிகள் என் 

பிரதிபிம்பங்களாக

இருந்த நிலை திரிய,

தலையுயர்த்தும் பிற உருவங்கள்

என்வாசிப்பாளப் பிரதிகளைக்

கழிப்பறைத்தாள்களாக்கிக்கொண்டவாறு.