கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும்விதமாக படங்களையும் தகவல்களை யும் ஒரு சார்பாகவே தந்துகொண்டிருப்பதுதான்,
’இவர் செய்தால் சரி, அவர் செய்தால் தவறு’ என்ற ஒரே தவறான நேர்ப்பார்வையுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகிப் பேசுவது தான், குறைந்தபட்ச கண்ணியம் கூட இல்லாமல் கொச்சையாகப் பேசுவதும் பழிப்பதுதான், ஒரு எழுத்தாளருக்கு அழகு அதுவே அவருடைய மனிதாபிமானம், முற்போக்குத்தனம் என முடிவு கட்டிக்கொண்டவர்களாய் மற்றவர்களையும் மூளைச் சலவை செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டு தங்கள் முகநூல் டைம்-லைனில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சக படைப்பாளிகள் சிலரின் நியாயவாதி பாவமும் பாசாங்கும்தான் நம்மைப் பீடித்துள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது.
