LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label இறுதித்தீர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label இறுதித்தீர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, May 26, 2020

இறுதித்தீர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இறுதித்தீர்ப்பு
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



அந்த சமுத்திரங்களின் அலைகள் 
இல்லாது போயினும்
இந்த பூமி சுற்றுவதை 
நிறுத்திவிட்டாலும்
வந்த கொரோனா இத்தரையிலிருந்து
மொத்தமாய் விடைபெற்றுப் 
போய்விட்டாலும்
அப்படியேதானிருக்கும்
அத்தனை பேரையும் 
அடிமுட்டாள்களாக பாவித்து
உன் முகம் நிரந்தரமாய் 
தரித்துக்கொண்டுவிட்ட
அந்த அகங்காரச் சிரிப்பு.