LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label இரங்கற்பா - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label இரங்கற்பா - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Monday, September 9, 2019

இரங்கற்பா - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


இரங்கற்பா

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில்
ஆறேழு குறையை
தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும்
மனம் நிரம்பி வழிய
அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும்,
மடிக்கணினி ஃபைண்டருமாய்
அடிக்கோடிட்டுக் காட்டி
அத்தனை உழைப்பையும்
’அள்ளித்தெளித்த கோலமா’க்கிவிடலாம்.

 சில சக மொழிபெயர்ப்பாளர்கள்
அவர்களை வழிமொழியும் சகாக்கள் சீடர்கள்
தொண்டரடிப்பொடியார்கள் உட்பட
அவரிவரெவரெவரெல்லாமோ ‘அசால்ட்டாய்’
எட்டியுதைப்பதற்கென்றே
வரம் வாங்கி வந்திருக்கிறார்கள்
அரைக்காசுக்குக்கூட ஆர்வமாய் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பவர்கள்