LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ஆறு மனமே ஆறு….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label ஆறு மனமே ஆறு….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Wednesday, April 1, 2020

ஆறு மனமே ஆறு….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஆறு மனமே ஆறு…..
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி வேகவேகமாயக் வாயைத்திறந்து கவ்வியெடுத்துக் கொள்கிறது _
விலகியே இரு தாத்தாவிடமிருந்து
என்று சொன்ன அப்பா
அவருடைய அப்பாவை ஆதுரத்தோடு நெருங்கி
அருகில் அமர்ந்து அந்தத் தளர்ந்த கரங்களைத் தன் கைகளுக்குள்
பொதிந்துகொள்வதைப் பார்த்து
அவருடைய தலைக்கு மேலாய்
தாத்தாவும் பேரனும் புன்னகையோடு
கண்சிமிட்டிக்கொள்கிறார்கள்.
பின் தாத்தா பேரனிடம்எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்
சீக்கிரமே பழையபடி என் மடியில் அமர்ந்து கதைகேட்கலாம் நீ" என்கிறார்.
ஏனென்றே புரியாமல் அந்த ஆறு கண்களிலும்
தளும்புகிறது நீர்
.