LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அடிப்படை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label அடிப்படை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, May 26, 2020

அடிப்படை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அடிப்படை
‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



















அனுபவிக்கக் கிடைக்கும் அளப்பரிய அன்பும்
ஆனந்தமும்
ஆறாப் பெருந்துயரும் அழுகையும்
அகிலம் உள்ளும்வெளியும்
அறிந்த வாழ்வின் அர்த்தனர்த்தங்களும்
அறியா வாழ்வுக்கான அச்சமும் இச்சையும்
அன்னபிறவான எண்ணிறந்தவையுமாய்
உருவாகும் கவிகளும் அவர்தம் கவிதைகளும் ஒரேயளவாயிருக்கலாகாதெனினும்
விரிந்துகொண்டே போகும் வழிகளிலெல்லாம்
புகுந்து புறப்பட்டுவரும் அவர்களின் அவைகள்
கவைக்குதவாதாயினும்
என்றும் உண்மையான உண்மையுரைக்கவேண்டும் உலகமனிதர்களாகவும் என்பதே
எழுதப்படாத விதியானால்
எத்தனை நன்றாயிருக்கும்…..



(சமர்ப்பணம்: அன்னா அக்மதோவாவுக்கு)