LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label ·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Monday, May 21, 2018

·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)




 ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு படைப்பாளியைவிட,
பெரிய அறிவாளியைவிட
திறமைசாலியைவிட,
தொலைநோக்குப்பார்வையாளரைவிட
சிந்தனாவாதியைவிட,
செயல்வீரரைவிட
நேர்மையாளனைவிட,
நீதிமானைவிட
இலட்சியவாதியைவிட,
மனிதநேயவாதியைவிட
முழுமனிதரைவிட
மாமனிதரைவிட
இவரன்ன இன்னும் பலரைவிட
ஒரு மண்ணாந்தையும் தன்னை
மேலானவராகக்காட்டிக்கொள்ள
மிக எளிய வழி
அவர்களைப் பைத்தியமாக
முத்திரை குத்திவிடல்.