பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டது.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்துகொண்டு கவிதைக்கணம் என்றஒரு அமைப்பை நடத்தினோம்.
சில கவிதை வரிகள் அல்லது அவற்றின் உட்பொருள் நம்முள் நிலைத்துவிடும். அப்படித்தான், பூமா ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய கவிதையொன்றில் நம்மோடு வாழ்ந்து முடிந்த ஒரு நாளை எதற்கு அத்தனை அலட்சியமாக ‘சர்ரக்’ என்று காலண்டரிலிருந்து கிழித்துப்போடுகிறோம் என்பதாய் எழுதியிருப்பார். வரி சரியாக நினைவில்லை. ஆனால் அதைப் படித்ததிலிருந்து நாள்காட்டியின் தாள்களை மிருதுவாகக் கிழித்து நான்காக மடித்து ஒரு ஓரமாக வைப்பது வழக்கமாகியது. அந்த சமயத்திலெல்லாம் நண்பர் பூமா ஈஸ்வரமூர்த்தியும்நினைவுக்கு வருவார்!
இப்போது முகநூலில் நட்பினராகியிருக்கும் அவருடைய நீள்கவிதையொன்றின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் இங்கே மொழிபெயர்த்துத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கவிதையில் வரும் காலமயக்கம் என்ற பதத்திற்கு சரியான ஆங்கில வார்த்தை உடனடியாக நினைவுக்கு வரவில்லை.. தேடிக்கொண்டிருக்கிறேன். கிளைக் கதைகளுக்கும்!
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்.
Booma Eswaramoorthy’s poem (an extract of his long poem)
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
BABU PADMINI MARVAL
The time when drop by drop the night begins to fall.
See there, the sea right in front of us. Padmini.
Shall we try speaking about Love
Marvel, what’s wrong with Babu
Fear and hesitation in words
For saying shall we speak he says
shall we try speaking
Babu Padmini’s love is not for speaking
All that attempt to speak are but the sub-tales.
Seas that swell on the tip of thorn.
*** *** ***
•
Decorating as the chariot of the festival time
Dragging it single-handedly those who are in love
bring it into the present
This is what happens always Padmini
Babu, what you are trying to say is that
Love can move into the Present alone
Can’t love move into the future at all
This makes me feel so sad
Babu, let there be no misconception of Time.
There is never a Future.
That’s a figment of imagination.
This sea with the roar of waves
even in the next second is still inside
the present of that instant. Just think of it.
Love is always present in the present.
*** ***
Does the woman fall in love does she seggregates herself and her love
as two different entities with ease?
Has love no place in a woman’s ultimate seeking,
seems like having some reservation in getting submerged in love
Padmini, it is for you to say.
Babu Marval woman does need love. Love is a two-edged knife in hand.
Should handle it without any harm to her body.
The very woman who craves for love wants to go past it.
Easily or with great effort woman can go beyond love
unlike man.
Babu Padmini the sea belonging to the small and big fish
the fisherman deeming it to be his
Spreading the mast and with the fear of length and depth leaving
the seafarer keeps on wandering in the sea.
Sea is so close to him just as his very life
For his life and body to dissolve in the sea someday
he waits with all his heart.
பாபு பத்மினி மார்வல்
சொட்டுசொட்டாய் இரவு விழத்துவங்கும்
நேரம். எதிரே பார் நீலக்கடல். பத்மினி
நாம் இப்போது காதல் பற்றி பேசிப் பார்க்கலாமா.
மார்வல் பாபுவுக்கு என்னவாயிற்று. பயமும்
தயக்கமும் வார்த்தைகளில். பேசலாமா என்பதற்கு பதில் பேசிப்பார்க்கலாமா என்கிறான்
பாபு பத்மினி காதல் பேசுவதற்கானது அல்ல.
பேசமுனைவதெல்லாம் காதல் பற்றின கிளைக் கதைகளே.
முள் முனையில் தளும்பும் கடல்களே.
0 0 0
விழாக்கால தேர்போல அலங்கரித்து
ஒற்றை ஆளாய் காதலை நிகழ்காலத்திற்குள்
இழுத்துவருகிறார்கள் காதல்வயப்பட்டவர்கள்
இதுதான் எப்போதும் நிகழ்கிறது பத்மினி.
பாபு நீ சொல்லவருவது கடந்த காலத்திலிருந்து
காதல் நிகழ்காலத்திற்கு மட்டுமே நகரமுடியும்
என்பதா. எதிர்காலத்திற்குள் நுழைய காதலால் இயலாதா இது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது.
பாபு பத்மினி காலமயக்கம் வேண்டாம். எதிர்காலம்
எப்போதும் இல்லை. அது கற்பனை.
அலைஇரைச்சல் மிகுந்த இந்த கடல் அடுத்த
வினாடியிலும் அதே நொடியின் நிகழ்காலத்திற்குள்தான்
இருக்கிறது. யோசித்துப் பார்.
காதல் எப்போதும் நிகழ்காலத்திலேயே நிகழ்கிறது.
0 0 0
பெண் காதல்வயப்படுகிறாளா. பெண் தான்வேறு
தன் காதல்வேறு என சுலபமாக பிரித்துக் கொள்கிறாளா.
காதல், பெண்ணின் முற்றான தேடுதலில் இல்லையா. காதலில் கரைந்துகொள்ள தயக்கம் இருப்பது போல் தெரிகிறதே.
பத்மினி நீதான் சொல்லவேண்டும்.
பாபு மார்வல் பெண்ணுக்கு காதல் வேண்டும்தான். காதல் கையில் கிடைத்திருக்கும் இருமுனை கத்தி. தன் உடலுக்கு தீங்கு நேர்ந்து விடாமல் கையாள வேண்டும்.காதலை வேண்டும் பெண்ணே காதலை தாண்டவும்விரும்கிறாள்.சுலபமாகவோ சிரமத்துடனோ பெண்ணால் காதலை
தாண்டிவிட முடியும், ஆணைப் போலல்லாமல்.
பாபு பத்மினி சிறிய பெரிய மீன்களுக்கான கடலை
மீனவன் மீனவனின் கடலாக நினத்து கொள்ள
பாய்மரம் விரித்து ஆழஅகல பயம் நீங்கி
கடலோடி கடலில் அலைந்து கொண்டேயிருக்கிறான்.
கடல் அவனுக்கு பிடித்தமானது தன் உயிர் போல.
என்றாவது ஒரு நாள் தன் உயிரும் உடலும்
கடலில் கரைந்துபோக காத்திருக்கிறான் சம்மதத்துடன்.
-பூமா ஈஸ்வரமூர்த்தி
No comments:
Post a Comment