LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 14, 2021

அவரவர் அடர்வனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அடர்வனம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

FORWARD செய்யப்பட்ட மின்னஞ்சலொன்றின் வரவில்

அனுப்பியவரின் நலம் அறிந்து

நிம்மதி யுறும்

மனம்

தனக்கெனப் பிரத்யேகமாயொரு வரியுமற்ற

அதன் வெறுமையில்

வெந்து தணிந்தவாறிருக்கும்

தினம்...

 

  ***

 

 

Sunday, September 12, 2021

பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்...... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்......

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது

குழந்தைக் கிறுக்கல்கள்
தந்தைக்குக் காவியமாக_
ஞானத் தந்தைக்கு
ஆழமற்ற கிணற்றுக்குள்ளிருந்து
உபதேசிக்கக் கிடைத்த
அரிய வாய்ப்பாக _
காயத்ரியின் மழலைப்பேச்சு
மந்திரமாக உச்சரிக்கப்பட்டு
உருவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்
சூழல்….
பழகப் பழகப் பழகிவிடக்கூடும்
இதுவே பேரிலக்கியம் என்ற
.புரிதலும்…..
இருந்தாலும்
மழலை மாறும் விழிகளில்
விரியும் வானம்
ஒரு நாள் தெளிவாக்கும்
பரிந்துரையில் பிறப்பதல்ல பேரிலக்கியம்
என்று.
அது தன்னிலிருந்து கிளர்த்தெழுமொரு
காட்டுச்செடி,
மனிதநேயம்பாற்பட்ட மலைப்பிரசங்கங்களுக்கும்
மலைப்பிரசங்கங்களுக்கப்பாலான
மனிதநேயங்களுக்கும் இடையே
மறைந்தோடும் ஜீவநதியென
அம்மணம் மீறிய ஆன்மாவொன்று
அன்போடு சொல்லக்கேட்டு _
முயல் ஆமை முயலாமை ஊடாய்
வழியேகும் படைப்புவெளியில்
வளர்ந்த மகள் நடைபழக
நாலிலே ஒன்றிரண்டு பலித்திட
வழியுண்டு.


அமரத்துவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அமரத்துவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)

”அவரைத் தெரியுமா உங்களுக்கு?”
நன்றாகவே தெரியும்”
”அவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
”பலமுறை பார்த்திருக்கிறேன்”.
”அவரோடு பேசியிருக்கிறீர்களா?"
"நிறையவே பேசியிருக்கிறேன்".
எப்போதுவேண்டுமானாலும் அழுதுவிடுவதாய்
எதிரே நிற்கும் இளைஞன் கண்களில்
தழுதழுப்பு…..
காணக்கிடைக்காத கொள்ளையழகு!
கோடிசூரியப் பிரகாசம் பிரசன்னம்
சிரிப்பில் மலர்ந்த அவன் கன்னக்குழியில்!
ஒரு கணம் தனது ஆதர்ஷப் படைப்பாளியை
நானாகக் கண்டு உருகிநின்றவன்
அன்பின் உச்சத்தில் தன் சட்டைப்பையில்
வைத்திருந்த
ஐந்து ரூபாய் ஜெல் பேனாவை எடுத்து
என்னிடம் கொடுத்தபோது
நடந்த உருமாற்றம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது.
வருகிறேன் என்று சொல்லிச் சென்ற அவன் குரலில்
மறுபடியும் பிறப்பெடுத்த அந்தப் படைப்பாளி
திரும்பவும் ஏன் அதே ஒண்டுக்குடித்தன வீட்டிலேயே
அத்தனை அருமையான கதைகளை எழுதிக்கொண்டிருந்தார் என்பதைத்தான்
என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

புத்துயிர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  புத்துயிர்ப்பு

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

*12 செப்டம்பர் 2021 தேத்யிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

மரணத்திற்கு அப்பாலுள்ள மிக கனத்த இருட்சுவரை
ஒருமுறையேனும்
வலுகொண்ட மட்டும் உந்தித் தள்ளி
ஒருபுறமாய் ஒதுக்கி விலக்கி
மறுபுறமுள்ள தரமான தமிழ்ப்படைப்பாளிகள் சிலரைக்
கைப்பிடித்து அழைத்துவந்து
அவர்களுடைய ஆக்கங்கள் உண்டாக்கும் தாக்கங்களை
இன்று சிலர் அத்தனை ஊக்கத்தோடு பேசிக்கொண்டிருப்பதைக்
கேட்கச்செய்யவேண்டும் என்ற
தீரா ஆசை
ஆறாக் காயமாய் வலித்தாலும்
பரவாயில்லையென் றதை தினம்
சாம்ஸன் தலைமுடியாய் தனக்குள் வளரவிட்டவாறிருக்கும்
ஆன்ற வாசக மனம்.

Saturday, September 11, 2021

நீலகண்டக் கவி பாரதி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நீலகண்டக் கவி பாரதி

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(*12, செப்டம்பர் 2021 பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)

சொன்னதெல்லாம் சொல்லாததையும் சுமந்ததாக

சொல்லாத எதையெல்லாம் சுமந்து போனாயோ

சுப்ரமண்ய பாரதீ…

சொப்பனவாழ்க்கையின் சூட்சுமத்தை

இப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பாயோ?

செத்து முடித்த பின்னான இத்தனை வருடங்களில்

இன்னொரு சொர்க்கம் சமைத்திருப்பாயோ ?

தனியொருவனுக்குணவிலாதுபோவதறியா

பிரபஞ்சமதில் உனக்கு முன்னும் பின்னுமான

வரகவிகளோடு

இறக்கை விரித்துப் பறந்தவாறே

இலக்கியம் பேசிக்கொண்டிருப்பாயோ?

இயற்றிக்கொண்டிருப்பாயோ நந்தமிழில்

சுந்தரக்கவிதைகளை?

அந்திப்பொழுது அங்கு நீலார்ப்பணமாயிருக்குமோ?

பட்டுக்கருநீலப் புடவை பதித்த நல்வயிரமாய

நட்சத்திரங்களைத் தொட்டுணர முடியுமோ?

நாலுமே பலித்திட வரமருள இயலுமானால்

நல்குவா யதை நாங்கள் கேட்கத் தயங்கினாலும்.

நினைவுநாளில் மறுபடியும் பிறந்துகொண்டிருக்கும்

நீயாகி நானாகி அவராகி அதுவாகி வானாகி

மண்ணாகி _

வாழ்வாங்கு வாழட்டும் வாழ்வு.

வெந்துமடியட்டும் ஏற்றத்தாழ்வு..


 

Wednesday, September 8, 2021

ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. லதா ராமகிருஷ்ணன்

ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும்

சக படைப்பாளிகளுக்கும்….

 லதா ராமகிருஷ்ணன்


இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல்குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங்களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.


நீதிமன்றத்தில் லீனாவின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியும், தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக அயல்நாடுகளிலி ருந்து வரும் அழைப்பை லீனா மணி மேகலை ஏற்க முடியாமல் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தும் சக கவிஞர் லீனாவின் படைப்பெழுச்சிக்குப் பலவகையிலும் முட்டுக்கட்டையிட்டுக்கொண்டிருக்கிறார்.


மான நஷ்ட வழக்கு போட யாருக்கும் உரிமையிருக்கிறது. அதே சமயம், அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் தன் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையா, பொய்யா என்று.


அப்படி ME TOO இயக்கப் பின்னணியில் குற்றம் சுமத்தப் பட்ட ஆண்களில் சிலர் பல வருடங்கள் முன்பு தாம் அப்படி நடந்து கொண்டது உண்மை தானென்றும் அதற்காக வெட்கப்படுவதாக வும் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

ME TOO இயக்கப் பின்புலத்தில் ஓர் ஆண் மீது ஒரு பெண் பொய்யாக குற்றம் சுமத்த் வாய்ப்பிருக்கிறது என்றாலும் ஒரு பெண் தன் பாதிப்பு குறித்துப் பேசும்போது அவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய்யுரைக்கிறாரா என்பது நம் உள்ளுணர்வுக்கு எளிதாகப் புலப்பட்டுவிடும்.

 


பொய்யாக ஒருவர் மீது பழிசுமத்தி அதில் பிராபல்யம் தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அதற்கு சம்பந்தப் பட்ட நபரை லீனா குறிப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. தவிர, இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அவர் வேறெப்போதும் வேறெந்த நபர் மீதும் சுமத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அதுவும், மான நஷ்ட வழக்கு என்ற பெயரில் சக கவிஞர் லீனா மணி மேகலைக்கு அவருடைய திறமைக்கான அங்கீகாரமாய் வரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக விழாக்களிலும் கருத்தரங்கு களிலும் அவரைப் பங்கெடுக்க விடாமல் தடுப்பதொன்றே குறியாய் வழக்கை நடத்திச் செல்வது கண்டனத் திற்குரியது. அவருடைய ’மாடத்தி’ சுயாதீனத் திரைப்படம் கொரோனா காலகட்டடத்தின் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு, நெருக்கடிகளுக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண் டிருக்கிறது. அது தொடர்பாய் அயல்நாட்டில் இம்மாதம் ஒரு பல்கலைக் கழகத்தில் உரையாற்ற கவிஞர் லீனா மணிமேக லைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

 

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை ஆறா வடுவாக மனதில் சுமந்துகொண்டிருந்த பெண்கள் ME TOO MOVEMENT உலகளாவிய அளவில் பரவிய நேரம் ஒரு வடிகாலாக வும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கப் பார்க்கும் அராஜகப் போக் கைக் கடைப்பிடித்துவருவோருக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக வும் தங்களுக்கு நேர்ந்த, நேர்ந்துகொண்டிருக்கும் பாலியல் தொல்லைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

 

அவர்களின் குரல்களை அடக்குவதே குறியாகஆதாரத்தைக் கொண்டுவா , சாட்சிகளைக் கொண்டுவாஎன்ற எதிர்க்குரல்களும் கிளம்பின.

 

அநியாயம் நடந்தபோதே குரலெழுப்பியிருந்தால் அதற்குப் பின் எத்தனையோ பெண்கள் சம்பந்தப்பட்ட அத்துமீறல்காரரிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வழியேற்பட்டிருக்குமே என்றெல்லாம் தோன்றி னாலும் ஒரு பெண்ணுக்கு ஏற்படலாகும் பாலியல்சார் அத்துமீறல்களையும், அந்த அத்து மீறல்களைச் செய் பவர்களையும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் பரிச்சய மானவர்களும் அவர்கள் புழங்கும் பணியிடப்பரப்புகளில் இயங்குபவர்களும் அறிந்தேயிருக்கிறார்கள்.

 

திரைப்படத் துறையில் அப்படியொருவரைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் சக பெண்கள் கவனமாக இருக்கச் சொல்வது வழக்கம் என்று ஒரு பேட்டியில் படிக்கக் கிடைத்தது.

 

ஆனால், தனியொரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் சார் அத்துமீறல்களைப் பொதுவெளியில் தெரியப்படுத்த இதுவரை அந்தப் பெண்ணுக்கு ஒரு இடம் இருந்த தில்லை. அப்படி வெளிப்படுத்தும் பெண்களே சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகி இழிவுபடுத்தப்படும் நிலையே அதிகம்.

 

தங்கள் உடற்கூறுக்கு எந்த வகையிலும் தாம் பொறுப் பாகாத நிலையிலும் உடற்குறை உடையவர்கள், திருநங்கைகளை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை நம்மைச் சுற்றிப் பார்த்தாலே தெரியும்.

 



பாலியல்ரீதியான தொந்தரவுக்குஆளான பெண்கள் அதைப் பற்றிப் பேசத் தயங்குவார்கள் என்பதுதான் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு அந்தத் துணிச்ச லைக் கொடுக்கிறது என்பது வெளிப்படை.

 

ME TOO இயக்கம் மூலம் தான் ஒரு உலகளாவிய வெளி இன்று கிடைத் துள்ளது. பல காலமாகத் தங்களுக்குள் கனன்று கொண்டி ருக்கும் வடுவை ஆற்ற அவர்கள் பேசுகிறார்கள். அப்படித்தான் லீனா மணிமேகலையும் இருபது வயதுப் பெண்ணாக சென்னை நகரில் ஊடக வெளியில் வேலையேற்றிருந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார்.

 

அதற்காக அவர் இன்னமும் நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்கிக்கொண்டிருக் கிறார். தனது படைப்பாக்கப் பணியில் ஈடுபட முடியாதபடி அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

அதே சமயம் இருபது பெண்கள் போல் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகச் சுட்டிய ஒருவர் இன்று சர்வ சாதாரணமாகப் பொதுவெளியில் இயங்கிக் கொண்டிருக் கிறார். இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம நீதியா?

 

ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களும் சக படைப்பாளிகளும் கவிஞர் லீனா மணிமேகலைக்காக எழுப்பிவரும் ஆதரவுக்குரல் இன்னும் வலுக்கவேண்டியது அவசியம்.

 

Ø  

 

 

 


Leena Manimekalai faces travel hurdle as Susi Ganesan reopens case to impound passport

Leena has been invited to a college in New York for a lecture but she cannot travel without the court's permission due to the cases filed against her by Susi Ganesan as retaliation to the #MeToo allegations she made against him.

 

NEWS ME TOO THURSDAY, SEPTEMBER 02, 2021 - 14:07

Geetika Mantri Follow @geetikamantri

On Thursday, September 2, filmmaker Leena Manimekalai shared a photo on Twitter – an invitation from the St John Fisher College in New York, USA, inviting her to give a lecture based on her film, Maadathy: An Unfairy Tale. However, the tweet Leena wrote accompanying the invite was not one of elation at the opportunity. “Will the honourable courts in India allow me to travel? Or allow the man to use the law and courts to continue harassing me because I outed his predatory behaviour?” she questioned.

Leena’s statement is in reference to the long battle she has been facing after she spoke up during the #MeToo movement in 2018 against Kollywood director Susi Ganesan. Apart from a defamation case that Susi Ganesan filed against Leena for speaking up, he has also filed petitions to have Leena’s passport impounded. An earlier petition by him to the same effect was disposed of by a Saidapet Metropolitan Magistrate court in Chennai in November 2020 after Leena submitted an undertaking that she would inform the court if she was travelling out of the country.

However, on August 27, 2021, the case for impounding Leena’s passport was reopened after a petition filed by Susi Ganesan. TNM has seen a copy of the petition filed by Susi Ganesan to reopen the case, where he alleges that Leena is attempting to flee the country, and so, the petition to impound her passport should be reopened. Earlier, in February 2021, even though the court had previously closed the petition in November, the Chennai Regional Passport Office had sent Leena a show cause notice as to why it should not impound her passport seeing that a “criminal trial” is pending against her under sections 499 and 500 (criminal defamation) of the Indian Penal Code. Leena had then wanted to go to Canada for a course in film related studies at York University that she was already pursuing. Leena has only a student visa, and still has to go to Toronto to finish the MFA degree, which is an admission award on full scholarship. However, she has been unable to do so.