அண்ணா பல்கலைக்கழக
அவல நிகழ்வு
மிக மிக அவலமான நிகழ்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்தேறியிருக் கிறது. ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டிருக்கிறாள். அதற்கான எதிர்ப்பு ணர்வின், வலிவேதனையின் அந்த அவல நிகழ்வு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத் தில் பாஜக தமிழகத்தலைவர் தன்னைத்தான் சாட்டையால் அடித்துக்கொண்டதை எள்ளிநகை யாடுவதில் ஆர்வங்காட்டும் எழுத்துலகப் போராளிகள் இந்த நிகழ்வு குறித்துக் கருத்து ரைப்பதை கவனமாகத் தவிர்க்கிறார்கள். இது வேதனைக் குரியது; வருந்தத்தக்கது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலுமான பல்வேறு சமூக அநீதிகளுக்கெதிராக போராட்டக்குரல்கள், சிறுகூட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், கையேடு விநியோகங்கள் நடந்திருக்கின்றன. இவ்வாண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத் திற்குள்ளாக மாணவிக்கு இழைக்கப் பட்டிருக்கும் அநீதி சென்னைப் புத்தகக் கண்காட்சி யில் சிறிய அளவிலாவது எதிர்ப்புக்குரல் எழுமா?
No comments:
Post a Comment