LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, September 13, 2017

சர்வதேச தற்கொலைஎதிர்ப்பு தினம் - செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில.

சர்வதேச தற்கொலைஎதிர்ப்பு தினம் - செப்டம்பர் 10
சொல்லவேண்டிய சில.
latha ramakrishnan

2003ஆம் ஆண்டுமுதல் உலகெங்கும் செப்டம்பர் 10 தற்கொலை எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதன் தொடர்பாய் இன்றைய டெக்கான் க்ரானிக்கள் முதலான சில நாளிதழ்களில் வெளியாகியுள்ள கட்டுரைகளிலிருந்து சில குறிப்புகள்:

இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு ஒரு மாணாக்கர் தற்கொலை செய்துகொள்கிறார். 15 முதல் 29 வரையான வயதுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதில் அதிகம்.

• 2015இல் தற்கொலை செய்துகொண்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 8934. 2010இலிருந்து 2015 வரை தற்கொலை செய்துகொண்ட மாணக்கர்களின் எண்ணிக்கை 39,775. தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம்.

• 2015இல் தற்கொலை செய்துகொண்ட 8934 மாணாக்கர்களின் மாநிலங்கள் வாரியான எண்ணிக்கை:
 மகராஷ்டிரம் – 1230Ø
 
தமிழ்நாடு - 955Ø
 
சட்டீஸ்கர் – 625Ø
இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவில் தொழில்துறை மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் போதுமான அளவு இல்லை.இந்தத் துறையில் 87% பற்றாக்குறை நிலவுகிறது. மனநலம் சார்ந்த சேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை மிகவும் குறைவு.

நம் நாட்டின் சுகாதார நலவாழ்வு நிதி ஒதுக்கீட்டில் 0.6 விழுக்காடு மட்டுமே மனநலத்திற்காகச் செலவிடப்படுகிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்கள் நிதி ஒதுக்கீடுகளில் 4% மனநலம் சார்ந்த ஆய்வுகள், உள்கட்டமைப்புகள், திட்டவரைச்சட்டகங்கள் frameworks)திறன்குவிப்பு(talent pool)களுக்காகப் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் டிசம்பர் 2015 அறிக்கையின்படி 3800 உளவியல் மருத்துவர்கள், 898 உளவியலாளர்கள், 850 உளவியல் சார் சமூகப்பணியாளர்கள் மற்றும் 1500 உளவியல் மருத்துவ செவிலியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதாவது, 10 லட்சம் பேருக்கு 3 உளவியல் மருத்துவர்கள் மட்டுமே. உலக சுகாதார அம்மைப்பு வகுத்துரைத்திருக்கும் அளவின்படி பார்த்தால் இன்னும் 66,200 உளவியல் மருத்துவர்கள் தேவை.

குடும்பத்தாரோடு, குறிப்பாக தாய்-தந்தை, கணவன் மனைவி போன்ற நெருங்கிய உறவுகளோடு இணக்கமான புரிதல் கூடிய உறவின்மை, தன்னுடைய மன அழுத்தங்களை, கவலைகளைப் பொருட்படுத்திக் கேட்பவர்கள் இல்லாத நிலை, யாருக்கும் தான் தேவையில்லை என்ற உணர்வு, சுய பச்சாதாபம், சுய வெறுப்பு, அதீதமான எதிர்பார்ப்புகள், தங்களுடைய நட்பு, காதல் குறித்த உடனடி முடிவெடுத்தல் போன்ற காரணங்களால் தற்கொலைகள், குறிப்பாக இளம்பருவத்தினரிடையேயான தற்கொலைகள் நிகழ்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் சார் கல்வித்துறை மாணாக்கர்கள், படிப்பில் தங்கள்/மற்றவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப மிளிர முடியாதவர்கள், சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணாக்கர்கள் முதலிய பிரிவினரிடையேயும் தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாகச் சுட்டப்படுகிறது.

மனநலம் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் செயல்பாடுகளையும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மத்தியிலும் அவர்களுடைய பெற்றோர்களிடமும் பரவலாக்கவேண்டியது இன்றியமையாதது

உடல்நோய் போல் தான் மனநோயும். ஆரம்பக் கட்டத்திலேயே உரிய சிகிச்சையும், கவனிப்பும் தரப்பட்டால் சரிப்படுத்திவிடலாம். மனச்சோர்வு, மன அழுத்தம், என்ற அத்தனை படிநிலைகளையும்பைத்தியம்என்று முத்திரை குத்திவிடும் மனப்போக்கு , சமூகத்தின் பரவலான புரிதல் மாறவேண்டும்.

ஆனால், பல்கலைக்கழகங்களில் இன்னமும் போதுமான மனநல ஆலோசனை மையங்களும், அங்கே தொழில்முறை உளவியல் ஆலோசகர்களும், மருத்துவர்களும் கிடையாது. அதனால் மாணாக்கர்களிடத்தில் உளவியல் சார்ந்த சோர்வு, அழுத்தம் போன்றவை ஏற்படும்போது அதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து போக்கிவிட வழியில்லாமல் போகிறது. அதன் விளைவாக, மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணாக்கர்களின்ன் நிலைமை மோசமாகி மருத்துவரீதியிலான உளவியல் மருத்துவ அழுத்தம் அவர்களை ஆட்கொண்டு தற்கொலைக்கு இட்டுச்சென்றுவிடுகிறது.

தினமும் தற்கொலை குறித்துப் பேசப்படுவதைக் கேட்பதும் சிலர் மனங்களில் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் என்றும், தங்களளவில் அதைச் செய்துபார்க்கும் எண்ணம் உருவாக தூண்டுசக்தியாக மாறும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் உளவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்கொலைக்கான காரணங்கள் சில:
1.
தற்கொலை குறித்த சிந்தனை
2.
முற்றிலுமான நம்பிக்கையிழப்பு
3.
வலுவான உளவியல்சார் அறிகுறிகள்
4.
போதைப்பொருட்களை உட்கொள்ளுதல்
5.
உளவியல்ரீதியிலான அழுத்தங்கள்
6.
குடும்ப / சமூக ஆதரவின்மை

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்:

1)
அடிக்கடி தற்கொலை, மரணம் மற்றும் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல் குறித்துப் பேசிக்கொண்டிருத்தல்
2)
கத்தி, பூச்சிகொல்லி, நிறைய மாத்திரைகளை எடுத்துவைத்துக் கொள்ளுதல்.
3)
சாவு பற்றியே சிந்தித்துக்கொண்டிருத்தல்.
4)
சுய வெறுப்பு / சுய பச்சாதாபம்.
5)
பொக்கிஷமாகப் பத்திரப்படுத்தியிருக்கும் பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடல்.
6)
மற்றவர்களிடமிருந்து விலகி, தனிமைப்பட்டுப்போதல்.
7)
உறங்கமுடியாத நிலை
8)
சுத்தமாக இருத்தல், உடையணிதல் முதலிய ஆர்வம் அற்றுப்போதல்.
குறிப்பாக, மாணாக்கர்களின்தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக மனநல ஆலோசகர்கள் கூறுவது:
1) மாணக்கர்கள் தேர்வுகள், பணிநிலைகள் தொடர்பான தோல்விகளை சரிவரக் கையாளத் தெரியாமல் தற்கொலையைத் தேடிப்போகி றார்கள்.
2)
குடும்பங்களோ, சமூக அமைப்புகளோ அவர்களுக்குப் போதுமான ஆதரவையோ, அரவணைப்பையோ தருவதில்லை.
3)
தினமும் தற்கொலை குறித்துப் பேசப்படுவதைக் கேட்பதும் சில மனங்களில் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
4)
ஒரு தற்கொலை என்பது சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்லாமல் அவரது குடும்பம், நட்புவட்டம், சமூகம் எல்லாவற்றிலுமே பாதிப்பை ஏற்படுத்துவது.
5)
அதிகமாகப் பேசப்படும் தற்கொலைகள் தங்களளவில் தூண்டுசக்தியாக மாறும் வாய்ப்புகளும் அதிகம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் வெவ்வேறு தலைமுறையினரிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய மனநோயின் படிநிலைகள் மரபணு ரீதியாக அதே குடும்பத்தை, வம்சத்தைச் சேர்ந்த ஒருவரைப் பீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது (குறிப்பாக, சமூகச்சூழலால் ஏற்படும் மன அழுத்தமும் சேர்ந்துகொள்ளும் நிலையில்) என்று உளவியல் மருத்துவத்துறை கூறுகிறது.

சைனாவைத் தவிர்த்து, ஆண்களே பெண்களைவிட மூன்று, நான்கு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சீனாவில், மொத்த மக்கட்தொகையில் பெண்களின் எண்ணிக்கி அதிகம் என்பதால் அங்கே பெண்களின் தற்கொலை அதிகம்.


No comments:

Post a Comment