LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, August 15, 2023

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா? - லதா ராமகிருஷ்ணன்

 பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?

          *August 13, 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது

C:\Users\computer\Desktop\images (3).jpgC:\Users\computer\Desktop\images (4).jpg

......................................................................................................................................................................

Section 509 IPC, as defined under the code states as, “Whoever intending to insult the modesty of a woman, utters any word, makes any sound, or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, or that such gesture or object shall be seen, by such woman, or intrudes upon the privacy of such woman, shall be punished with simple imprisonment for a term which may extend to three years, and also with fine”.


இந்தியக் குற்றவியல் சட்டம் விதி 509

விளக்கம்

எவரேனும்எந்த ஒரு பெண்ணின் நாகரீகத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில்எந்த வார்த்தையை சொன்னா லும்ஏதேனும் ஒலி 

அல்லது சைகை செய்தாலும்அல்லது எந்த பொருளை வெளிப்படுத்தினாலும்அத்தகைய வார்த்தை அல்லது ஒலி கேட்க வேண்டும் 

அல்லது அத்தகைய சைகை அல்லது பொருளை அத்தகைய பெண் பார்க்க வேண்டும்அல்லது அத்தகைய பெண்ணின் தனியுரிமை

யில் ஊடுருவினால்மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான எளிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றுடன் தண்டிக்கப்படுவர் .

………………………………………………………………………………………………………….....

பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்ளத் தெரியாதவர்கள், வேண்டு மென்றே மரியாதைக்குறைவாக நடப்பவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள். ஒரு நபர் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாக ஒரு பெண் நினைத்தால் அதற்கான கோபத்தை வெளிப்படுத்த அவருக்கு உரிமையுண்டு. 

அப்படித்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ம்ரிதி இரானி பேச ஆரம்பித்த போது திரு.ராகுல் காந்தி ‘பறக்கும் முத்தம்’ ஒன்றை அவரிருந்த திசை நோக்கி வீச அது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப் படுத்தியுள்ளனர். அதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக் கிறது.

திரு.ராகுல் காந்தி அதை ஏன் செய்யவேண்டும்? அவரு டைய ஆதரவாளர் களுக்கு, ரசிகர்களுக்கு, அவரை எதிர்கால இந்தி யாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் எவ்வளவு வேண்டுமானாலும் ‘பறக்கும் முத்தங்கள்’ அனுப்பலாம். பிரச்சனையேயில்லை. 

ஆனால், யாரை நோக்கி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானா லும் அப்படிச் செய்ய அவருக்கு உரிமை யில்லை. அது கண்ணியக் குறைவான செயலே. 

ஆனால், இங்கே அறிவுசாலிகளாக அறியப்படும் சில பெண்கள் அவர் செய்ததை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்! 

ஒரு பெண்மணி எழுதியிருக்கிறார். ‘என் ஒழுக்கத் தைக்கூட நீங்கள் சந்தேகப் படுங்கள் – ஆனால் என் ரசனையைச் சந்தேகப் படாதீர்கள்’ என்று ராகுல் சொல்கிறாராம். – அதாவது, ஸ்ம்ரிதி இரானிக்கு ’பறக்கும் முத்தம்’ அனுப்பும் அளவு அவருடைய ரசனை மோசமான தல்லவாம். எத்தனை அயோக்கியத்தனமான பேச்சு. 

இன்னொருவர் ஸ்மிரிதி இரானி இன்னொரு பெண்ணின் கணவ னைப் பிடித்துக் கொண்டவர்’ என்று எழுதுகிறார். இதெல்லாம் என்னவிதமான தர்க்கநியாயம்? 

இன்னொருவர் முத்தத்தின் மகத்துவம், மனிதநேயம் பற்றிப் பேசுகிறார். 

அப்படியானால் முந்தைய தமிழக ஆளுநர் ஒரு பெண் பத்திரிகை யாளரின் கன்னத்தில் தட்டிப் பேசினாரே – அது எத்தனை பெரிய விவாதப்பொருளாயிற்று. 

இப்போது சென்னை மேயரை மேடையில் ஒருவர் கைபற்றி இழுத் தது எத்தனை பேசுபொருளாகியிருக்கிறது. அவரே இது குறித்து வெளிப்படை யாகத் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வில்லையென்றாலும் அவருடைய முகச்சுளிப்பைக் கண்டே கொதித்துப்போய் ‘எங்கள் மேயரை இப்படி நடத்துவது சரியில்லை’ என்று காரசாரமாக சிலர் கண்டனம் தெரிவிகிறார்கள். 

கண்டிப்பாகத் தெரிவிக்கவேண்டும்.

உயர் பதவியில் பொறுப்பில் இருக்கும் பெண்ணையே பொதுவெளி யில் இப்படி, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கண்ணியக் குறைவாக நடத்த முடிகிறதென்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்ன? 

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் தரலாமா? அன்பை வெளிப்படுத் தத் தருவதாகக் கூறினால், சாலையில் ஒரு இளை ஞன் இதை ஒரு பெண்கள் கூட்டத்தை நோக்கி இப்படிச் செய்தால் ஏதும் சொல்லாமல் போவதோ, எதிர்ப்புக்குரல் எழுப்புவதோ சம்பந்தப்பட்ட பெண்ணின் நிலைப்பாடு. 

சில சிறுமிகள் பயந்துகொண்டு மௌனமாயிருப்பார்கள். அதனால் அதை அவர்கள் ஏற்கிறார்கள் என்று அர்த்தமல்ல. வீசப்படும் ‘பறக்கும் முத்தத்தை’ப் பார்த்து பயந்து பேசாமலிருக்கும் சிறுமிக் காக, யுவதிக்காக சாலையில் செல்பவர்கள் சண்டைக்குப் போவ தும் உண்டு. 

இங்கே ராகுல் வீசிய பறக்கும் முத்தம் தங்களை மதிப்பழிப்பதாகக் கருதும் பெண் உறுப்பினர்கள் அது குறித்துக் கண்டனக்குரல் எழுப்பியதைக் கொச்சைப்படுத்தவும் கிண்டல் செய்யவும் முன் வரும் பெண்கள் தங்களை எண்ணி வெட்கப் படவேண்டும்.

இன்று Kismi என்ற பெயரில் ஒரு சாக்லேட் விற்கப்படுகிறது. இத னால் ஏற்படக்கூடிய Eve-Torturingஐ நினைத்தால் கவலையாயி ருக்கிறது. 

இங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி ஒரு ‘பறக்கும் முத்தத்தை’ விட ஆரம்பித்தால் நாளை அவருடைய கட்சியின் ஆண்களுக்கும், ஆதரவாளர் களுக்கும் அது என்ன மாதிரி ’சமிக்ஞையைத் தருவதாக அமையும்?

திரு.ராகுல் காந்தி விடலைப்பையனில்லை. ஆளுங்கட்சியை எதிர்ப்பது என்ற பெயரில் கண்ணியக்குறைவாக நடக்கவேண்டிய தேவையென்ன?

அதற்கு சில பெண்கள் ஆதரவாகப் பேசவேண்டிய தேவையென்ன? 

¬அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுவதே இங்கேயான அவலங் களுக்கெல்லாம் ஆதிகார ணமாக, அவ்வகையில் ஆகப்பெரும் அவலமாக அமைகிறது.

***

No comments:

Post a Comment