...............................................................................................................................
அலிஃப் லைலா வ லைலா எனும்
1001அரேபிய இரவுகள்
தமிழில் : முகமது சஃபி
_ 

நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகிறார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ்ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத் தக்க கட்டுரைகளையும் ஒன்றி ரண்டு நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்த வர்கள். சஃபியும் நிறைய எழுதியிருக் கிறார்; மொழி பெயர்த்திருக்கிறார். இப்போது சஃபியின் முனைப் பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப் ட்டிருக்கிறது.
_ லதா ராமகிருஷ்ணன்
...............................................................................................................................
நேற்றையக் கனவை நினைத்துக் கொண்டே புத்தகக் கண்காட்சிக்கு தனது கழுதையுடன் நடந்து கொண்டிருந்தார் முல்லா நஸ்ரூத்தீன்.
சர்வ லட்சணங்களும் பொருந்திய பஞ்ச கல்யாணி குதிரையில் தான் அமர்ந்திருக்க தனது மனைவியின் சாயலிலுள்ள 1002 இளம் யுவதிகள் வெண்சாமரம் வீச ஊர்கோலம் போவதாய் உல்லாசக் கனவு.
காலையில் கண்முழித்ததும் கனவை நினைத்துப் பதறிவிட்டார் முல்லா. கனவில் செளகரியங்களோடு இருந்தால் அதற்கு எதிர் மறையாக அல்லவா எதார்த்தம் மோசமாகப் பல்லிளிக்கும் என்று கனவு சாஸ்திரம் சொல்லுவதால் தனது நீளமான காதை இழப் போமா ?தனது கழுதை தன்னை விட்டு ஓடிவிடுமா ?அல்லது தன்னையே தொலைத்து விடுவோமோ என பலவாறு யோசித்து முல்லா பயந்தே விட்டார்.
கழுதையை இழப்பதும் தன்னை இழப்பதும் வேறு வேறல்ல என உணர்ந்து முல்லா திரும்பிப் பார்க்க கழுதை அப்புராணியாக வந்து கொண்டிருந்தது.. தனக்கு மட்டும் இரண்டடுக்கு பவுடர் போட்டு பிரியமான வாய் பேசாத ஜீவனான கழுதைக்கு லேசாகப் பவுடரை இழுவிவிட்டது முல்லாவைச் சங்கடப்படுத்த அவசர அவசரமாக பவுடர் டப்பாவை எடுத்து தனது நேசத்துக்குரிய கழுதையின் உடல் முழுக்கப் பவுடரை அப்பிவிட்டார் முல்லா.
போகும் வழியில் நடைபாதைக்கடையில் ஃப்ராய்டின் நகைச்சுவை யும் நனவிலியும் புத்தகத்தைப் பார்த்து அதைத் தின்னக்கொடுத் தால் தனது கழுதை அறிவாளியாகும் என அதை எடுத்து கழுதை யின் வாயில் வைக்கக் கவிதைப் புத்தகங்களையே தின்றுப் பழக்கப்பட்ட அவரது கழுதை முல்லாவைப் பார்த்து நகைத்தபடி அவரை எட்டி உதைத்து விட்டு ஓடியது.
_ சஃபி
...................................................................................................................
No comments:
Post a Comment