LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 25, 2022

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 3 நினைக்கப்படும் தெலுங்குக்கதைகள் – ஆங்கிலம் வழியாக தமிழில்!

 புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 3 

நினைக்கப்படும் 

தெலுங்குக்கதைகள் –

ஆங்கிலம் வழியாக தமிழில்!

V.V.B.RAMARAO தெலுங்குமண்ணைச் சேர்ந்த, தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சிறந்த எழுத் தாக்கங்களைத் தந்திருக்கும் மூத்தஎழுத்தாளர்.
1938இல் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிர்லா பேட்டா ராஜம் (தற்போது பைதிபீமாவரம் என்று அழைக்கப்படுவது) என்ற கிராமத்தில் பிறந்த வர். ஆந்திர மாநிலப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, கற்பித்தலுக்கான பட்டயமும் பெற்றார். பிரெஞ்சுமொழியிலும் பட்டயம் பெற்றவர்.

1957இல் எம்.ஆர்.கல்லூரியில் கற்பிக்கும் பணி யைத் தொடங்கினார். ஆந்தி ராவைச் சேர்ந்த 1961 முதல் 1995 வரை பல்வேறு கல்லூரிக ளில் பல்வேறு உயர்பதவிகளைத் திறம்பட வகித்தவர் திரு.ராமாராவ்.
தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் புதினங்கள், வாழ்க்கை சரிதைகள், சிறுகதைத் தொகுப்புகள், திறனாய்வுக் கட்டுரைகளடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தெலுங்கு மொழியிலும், தெலுங்கிலிருந்து ஆங்கிலத் திலும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு களும் அடங்கும். மேலும், நூற்றுக்கணக்கான கட்டு ரைகள், சிறுகதைகள் ஆகியவை செய்தித்தாள் களிலும், இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
இவருடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றின் தமி ழாக்கம் புதுப்புனல் வெளியீடாக சென்னைப் புத்தகக் கண்காட்சி யில் இடம்பெறுகிறது.
தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.ஆர். தேவிகா. பக்கங்கள் 308. விலை: ரூ. 300





No comments:

Post a Comment