காலக்கணக்கு -2
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அப்பொழுதுக்கும் இப்பொழுதுக்கும் இடையிலான
கால வெளியில்
காணாமல்போய்விடலாகும் சில
பலவாக
முப்பொழுதும்
இருபொழுதும் நிலைபிறழக்
குழறும் மனதின் குரல்வளை
நினைவுமுள் குத்திப் பழுதடைய
எப்பொழுதும்போல்
தப்பாமல் விடிந்துகொண்டிருக்கும் பொழுதும்.
No comments:
Post a Comment