LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 11, 2013


[9 JUNE 2013 திண்ணை இணைய இதழில் வெளியானது]

Add caption

கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப்பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைக ளும் உண்டு. தமிழ் வளர்ச்சிக் கழகம் விருது, பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்ட  பாவேந்தர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய வலைப்பூ தமிழ்க்கடலில் கவி அலைகள். www.kavineelamani. blogspot. com

 ஆங்கிலமொழியிலும் தேர்ச்சிபெற்றவரான அவர் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு SECOND THOUGHTS என்ற தலைப்பில் சேகர் பதிப்பகத்தால் [சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை-600 078- தொலைபேசி 97890 72478] சமீபத்தில் வெளி யாகியுள்ளது.

தாய்மொழியில் எழுதுவதில்தான் தனி இன்பம் என்றும், எனில் ஆங்கிலம் மூலம் நம் இலக்கிய வெளியிலும் வாசக வெளியும் விரிவடையும் என்பதால் இந்த முயற்சி என்று தன் முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார் கவிஞர் நீலமணி.

“Language is a fetter. Language adds a wing as well. More doors open more ways. Knowingly or unknowingly English has given us a medium to converse with the world. We can have a global reach, almost. I really think that spreading opinions could take human civilizations into more matured heights” என்கிறார்.

முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் ஆர்.கணபதி, திரு.ம.லெ.தங்கப்பா, வடமலய் மீடியா தலை வர் திரு.வி.ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் அடர் செறிவான முன்னுரைகளும் இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றின் கருப் பொருள்கள் தமிழ்மண்ணுக்கும் தமிழ் மொழிக்குமே உரிய, அதேசமயம் யாதும் ஊரே, யாவரும் கேளிர்’  என்ற அகண்ட மனிதநேயப் பார்வையைக் கொண்டதாக அமைந்துள்ளன.

முன்னுரையில் தன்னுடைய இந்த ஆங்கிலக்கவிதைத்தொகுப்பை கும்பகோணத்தில் தான் படித்த உயர்நிலை ப்பள்ளியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு  சமர்ப்பணம் செய்துள்ளார் கவிஞர் நீல மணி.

“I am dedicating this book to my English teacher Mr.C.M. Parthasarathy Ayyangar of the Banadurai High School, Kumbakonam whose English has been my window into the world. I cherish the memories of his teaching and the care he had for his students”.

ஆசிரியப்பணியின் மகத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை!

மூத்த பதிப்பாளரான திரு. வெள்ளையம்பட்டு சுந்தரம் ஆங்கிலத்திலேயே கவிதைகள் எழுதி அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடும்படி தன்னை ஊக்கு வித்ததாகக் குறிப்பிட்டுள்ள கவிஞர் நீலமணி இந்தத் தொகுப்பில் எழுதப் பட்டுள்ள கவிதைகள் நேரடியாக ஆங்கிலத்தில் தன்னால் எழுதப்பட்டவை என்றாலும் ஏற்கனவே எழுதிய தமிழ்க்கவிதைகளில் இடம்பெற்றுள்ள சில கருப் பொருள்கள் அல்லது விவரிப்புகள் அவற்றில் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு என்கிறார்.

முனைவர் திரு.அவ்வை நடராஜன் தன்னுடைய அணிந்துரையில் தனது வகுப்புத்தோழராக இருந்த கவிஞர் நீலமணியின் அறிவாற்றலையும் கவித்துவத் தையும் நினைவுகூர்ந்து வியந்து பாராட்டியி ருப்பதோடு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றைப் பற்றி அக்கறையோடு தனது வாசகப் பிரதிகளையும் தந்துள்ளார்.

கவிஞர் நீலமணியின் உறுதியாக, வேராழ்ந்திருக்கும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் அவருடைய கவிதைகளைக் கவிதையாக்குகின்றன என்கிறார் ஆங்கிலப் பேராசிரியரும் அமெரிக்க-ஆங்கிலத்தில் புலமை பெற்றவருமான முனைவர். ஆர்.கணபதி.

ஒரியா, கன்னடம், மலையாளம், வங்காளம் போன்ற இந்திய மொழிகளில் கவிஞர்கள் தங்கள் தாய் மொழியோடு ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார்கள் அல்லது பரவலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடும் திரு.ஈசுவரமூர்த்தி தமிழில் இந்த நிலைமை இல்லை என்று ஆதங்கத் தோடு குறிப்பிடுகிறார். அந்த வகையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தன் வகுப்புத்தோழராக இருந்த கவிஞர் நீலமணியின் இந்த ஆங்கில கவிதைத் தொகுப்பு குறிப்பிடத் தக்கது என்று சுட்டிக்காட்டுகிறார்.

இந்தத்தொகுப்பிலுள்ள கவிதைகளைச் சுட்டி அவற்றின் நேரிய அம்சங்களைக் குறித்துக்காட்டும் தமிழ்ப்பேராசிரியரும் அறிஞருமான திரு.ம.லெ.தங்கப்பா, கவிஞர் நீலமணியின் கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருபவை என்றும் ஒரு நல்ல கவிதை நம்மால் புரிந்துகொள்ளப்படு வதற்கு முன்பாகவே தன்னை உணர்த்திவிடுகிறது என்ற கூற்றை நீலமணியின் கவிதைகள் மெய்ப் பிக்கின்றன என்றும் தகுந்த சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறார்.

தமிழில் தரமான கவிஞர்களுக்குப் பஞ்சமில்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பஞ்சமில்லை. இருந் தும், விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்க் கவிஞர்களே இதுவரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய் யப்பட்டுள்ளனர். தரமான தமிழ்க்கவிதைகளும், தமிழ்க்கவிஞர்களும் ஆங்கிலத்தில் இன்னும் பர வலாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம். அந்தவகையில் கவிஞர் நீல மணியின் ஆங்கிலத்தொகுப்பு ஒரு தமிழ்க்கவிஞரின் கவிதைப்போக்குகளை அடையாளங்காட்டுவதாக அமைந் துள்ளது.

இந்தக் கவிதைத்தொகுப்பை அன்புகூர்ந்து எனக்கு அனுப்பிவைத்திருந்த கவிஞர் நீலமணி யிடம் தொலைபேசி மூலம் ஒரு ’குறும் பேட்டி’ எடுத்தேன். அது பின்வருமாறு:
  
· எப்பொழுதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? எது உங்களுக்குக் கவிதை எழுத உந்துதலாக இருந்தது?

தமிழ் என்னுடைய சிறப்புப் பாடமாக இருந்தது. தமிழ் மொழியின் மீது நான் கொண்ட தீராத நேசம், பற்று தான் என்னைக் கவிதையெழுதத் தூண்டியது. 1955இல் விந்தன் எழுத்தாளர் எழுதிய மனி தன்ங்கற கவிதை, சுரதா  காவியம், என பல உந்துதல்கள். இலக்கிய இதழ்களில் கல்லூரி இதழ்க ளில் என்று எழுதத் தொடங்கினேன்.

· அகவயமான கவிதைகளைத் தான் எழுதவேண்டும், புறவயமான, சமூகஞ் சார்ந்த கவிதைகளைத் தான் எழுதவேண்டும் என்று ஏதேனும் கோட் பாடுகள் வைத் திருந்தீர்களா?

அப்படியெல்லாம் கிடையாது. மனித வாழ்க்கையைக் கொண்டாடுதல், துன்பங்களுக்கான காரண   ங்களை அறிதல், தமிழ் நயங்களைப் பகிர்ந்துகொள்லுதல்ஆகிய மூன்று நோக்கங்களே நான் கவிதை எழுத முக்கியக் காரணங்களாக என் கவிதைகளின் கருப்பொருள்களாக அமைந்தன.

·  கவிதை எழுதுவதற்கான உந்துதல் அல்லது தாக்கம் உங்களுக்கு எதிலிருந்து கிடைக்கி றது?

பெரும்பாலும் செய்தித்தாளிலிருந்து. அதில் வாசிக்கக்கிடைக்கும் செய்தி அல்லது செய்திகள் மனதை உறுத்திக்கொண்டேயிருக்கும்போது கவிதை எழுத வேண்டும் என்ற வேகம் ஏற்படுகிறது.

·  ஒரு கவிதை குறுங்கவிதையாக இருக்கவேண்டும் அல்லது நீள்கவிதையாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு எழுவதுண்டா?

இல்லை. கவிதைஅதன் போக்கில் தனக்கான வரிகளை நிர்ணயித்துக்கொள்கிறது என்பதே உண்மை.

·  இன்றைய கவிதைச்சூழல் குறித்து..?

இன்று கவிதை ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் விற்பனை யாகும் சரக்காகும்போது கவிதை மலினப்படுத்தப்படுகிறது.

· மேலும் ஆங்கிலக்கவிதைதொகுப்புகள் கொண்டுவரும் உத்தேசமுண்டா?
அடுத்து என்னுடைய தமிழ்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்புகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு.

கவிஞர் நீலமணியின் SECOND THOUGHTS தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதை கள் கீழே தரப்பட்டுள்ளன:


1.ENDLESS CHANT

Cell-phone mantras’ endless chant
Calling out a god non-existent.

When the century ends
Your ear would evolve into cell.
Human cells, perhaps.

Tears evaporate quicker under 3G.

Let us call connecting people ‘YESKIA’.

Air-conditioner silently brings in fresh air.
The only smile in the room
is on the artificial flower vase.


2.UNCLOCKED DAYS

I am not nameless
I am named in employment exchange register
My name has a serial number.

Now these are my subsistence days.

Language averts my tongue.
Dreams avoid my sleep.

Smothered in vacuum, confused in action.
Acid words are gunned at me.
Silence of neglect is more painful.

The town cancels me with quiet ease.

3.FAULTY LINE

blood freezing under the snows.
HIMALAYAN BLUNDER BURIED IN HISTORY.
INDS AND Chins wander over hills
Searching for the elusive line.
Both are shivering alike
But opposite flocks, warm with arms.

When the ice breaks
Laying stones bare
McMohan* can be seen by all

* McMohan: In the year 1962 China and India clashed over sovereignty on  certain Himalayan areas. Indians based their claims on the McMohan line, a boundary line drawn by the British officer, McMohan. A book titled The Himalayan Blunder has also been published on this episode by a former military officer. The dispute remains still unsettled.


4.SMALL SCALE GODDESSES

Education is alleged to be free.
Some students pay a heavy price.

Injuries are common in the battlefield.
Some schools inflict equal qounds.

‘Saraswathi* – is she a step-mother?

Expecting a soft treatment
Teaching has been allocated to women.
Alas! They claim equal rights to harm and maim!

Use of scales they have misunderstood.

Is it not an education tool?
How to use it my dear fool!
Bot as weapon, not at all.

You have become rulers in this supposed democracy.

Ring the bell, OK, not wring the child’s ear.

Instead of knowledge
These uncrowned queens
Dispense pain and punishment.


* Saraswathi _ the goddess of Learning.No comments:

Post a Comment

comments: