INSIGHT
A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY
www.2019insight.blogspot.com
(*Poems translated by me between 2016 and 2019 are in this July issue of INSIGHT)
INSIGHT
A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY
www.2019insight.blogspot.com
(*Poems translated by me between 2016 and 2019 are in this July issue of INSIGHT)
கவிஞர்கள் நட்சத்திரங்களைப்
பரிசளிக்கப் பிறந்தவர்கள்!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனை காலைவேளையில் யார் கதவைத் தட்டுவது என்று
கவிஞர் யூமா வாசுகி தூக்கக்கலக்கத்துடன் எழுந்துவந்து
கதவைத் திறந்தார்.
அன்று பூத்த மலராய் அதிகாலைச் சூரியக் கதிராய்
ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.
”என் அப்பா ஒரு பள்ளிக்கூடம் திறந்திருக்கிறார்.
பிள்ளைகளை அடிக்காத, அவமானப்படுத்தாத நல்ல பள்ளிக்கூடம்.
அதை நீங்கள்தான் திறந்துவைக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டேயிருந்தார். அதனால்தான் அவருக்குத் தெரியாமல் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன் – உங்களைக் கையோடு கூட்டிச்செல்ல” என்று விவரம் தெரிவித்தாள்.
”இதோ இறக்கைகள் – சீக்கிரம் மாட்டிக்கொள்ளுங்கள்” என்று சின்னவாயால் சிறுமி இட்ட அன்புக்கட்டளையைத் தட்டமுடியுமா என்ன?
இருவருமாக இறங்கக்கண்ட அந்தத் தந்தை முகம் தழுதழுத்துப்போனது.
”என்னைத் தெரிகிறதா? உங்கள் ’சாத்தானும் சிறுமியும்’ கவிதைத்தொகுப்பில் மதுக்கடையில் வேலைபார்த்த சிறுவன் நான் –
என் சட்டைப்பையிலிருந்து உருண்ட கோலிகுண்டுகள் பற்றி அத்தனை கரிசனத்தோடு எழுதியிருப்பீர்களே – நினைவிருக்கிறதா?
’இந்தத் தரமான இலவசப்பள்ளியை நீங்களே திறந்துவைக்கத் தகுதியானவர்!”
என்று தன் சின்ன மகளை நன்றியுடன் பார்த்தார் தந்தை.
ஏழைக் கவிஞனிடம் மாத முதலிலேயேகூட
அப்படி என்ன பணமிருக்கப்போகிறது?
’ஆனாலும் இந்த நல்ல காரியத்தைப் பாராட்டி ஏதேனும் பரிசளிக்காவிட்டால் எப்படி?’
என்று கவி மனதிலோடிய எண்ணத்தைப் படித்தவளாய் சிறுமி
யாருமறியாமல் ரகசியமாய்
கவிஞரின் சட்டைப்பைக்குள்
போட்டாள் _
முதல்நாள் பின்னிரவில்
ஆகாயத்தை நோக்கி நீட்டிய கை நீண்டுகொண்டேபோய்
திரட்டியெடுத்துவந்த நட்சத்திரங்களை!
பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?
......................................................................................................................................................................
Section 509 IPC, as defined under the code states as, “Whoever intending to insult the modesty of a woman, utters any word, makes any sound, or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, or that such gesture or object shall be seen, by such woman, or intrudes upon the privacy of such woman, shall be punished with simple imprisonment for a term which may extend to three years, and also with fine”.
இந்தியக் குற்றவியல் சட்டம் விதி 509
விளக்கம்
எவரேனும், எந்த ஒரு பெண்ணின் நாகரீகத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில், எந்த வார்த்தையை சொன்னா லும், ஏதேனும் ஒலி
அல்லது சைகை செய்தாலும், அல்லது எந்த பொருளை வெளிப்படுத்தினாலும், அத்தகைய வார்த்தை அல்லது ஒலி கேட்க வேண்டும்
அல்லது அத்தகைய சைகை அல்லது பொருளை அத்தகைய பெண் பார்க்க வேண்டும். அல்லது அத்தகைய பெண்ணின் தனியுரிமை
யில் ஊடுருவினால், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான எளிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றுடன் தண்டிக்கப்படுவர் .
………………………………………………………………………………………………………….....
பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்ளத் தெரியாதவர்கள், வேண்டு மென்றே மரியாதைக்குறைவாக நடப்பவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள். ஒரு நபர் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாக ஒரு பெண் நினைத்தால் அதற்கான கோபத்தை வெளிப்படுத்த அவருக்கு உரிமையுண்டு.
அப்படித்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ம்ரிதி இரானி பேச ஆரம்பித்த போது திரு.ராகுல் காந்தி ‘பறக்கும் முத்தம்’ ஒன்றை அவரிருந்த திசை நோக்கி வீச அது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப் படுத்தியுள்ளனர். அதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக் கிறது.
திரு.ராகுல் காந்தி அதை ஏன் செய்யவேண்டும்? அவரு டைய ஆதரவாளர் களுக்கு, ரசிகர்களுக்கு, அவரை எதிர்கால இந்தி யாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் எவ்வளவு வேண்டுமானாலும் ‘பறக்கும் முத்தங்கள்’ அனுப்பலாம். பிரச்சனையேயில்லை.
ஆனால், யாரை நோக்கி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானா லும் அப்படிச் செய்ய அவருக்கு உரிமை யில்லை. அது கண்ணியக் குறைவான செயலே.
ஆனால், இங்கே அறிவுசாலிகளாக அறியப்படும் சில பெண்கள் அவர் செய்ததை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்!
ஒரு பெண்மணி எழுதியிருக்கிறார். ‘என் ஒழுக்கத் தைக்கூட நீங்கள் சந்தேகப் படுங்கள் – ஆனால் என் ரசனையைச் சந்தேகப் படாதீர்கள்’ என்று ராகுல் சொல்கிறாராம். – அதாவது, ஸ்ம்ரிதி இரானிக்கு ’பறக்கும் முத்தம்’ அனுப்பும் அளவு அவருடைய ரசனை மோசமான தல்லவாம். எத்தனை அயோக்கியத்தனமான பேச்சு.
இன்னொருவர் ஸ்மிரிதி இரானி இன்னொரு பெண்ணின் கணவ னைப் பிடித்துக் கொண்டவர்’ என்று எழுதுகிறார். இதெல்லாம் என்னவிதமான தர்க்கநியாயம்?
இன்னொருவர் முத்தத்தின் மகத்துவம், மனிதநேயம் பற்றிப் பேசுகிறார்.
அப்படியானால் முந்தைய தமிழக ஆளுநர் ஒரு பெண் பத்திரிகை யாளரின் கன்னத்தில் தட்டிப் பேசினாரே – அது எத்தனை பெரிய விவாதப்பொருளாயிற்று.
இப்போது சென்னை மேயரை மேடையில் ஒருவர் கைபற்றி இழுத் தது எத்தனை பேசுபொருளாகியிருக்கிறது. அவரே இது குறித்து வெளிப்படை யாகத் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வில்லையென்றாலும் அவருடைய முகச்சுளிப்பைக் கண்டே கொதித்துப்போய் ‘எங்கள் மேயரை இப்படி நடத்துவது சரியில்லை’ என்று காரசாரமாக சிலர் கண்டனம் தெரிவிகிறார்கள்.
கண்டிப்பாகத் தெரிவிக்கவேண்டும்.
உயர் பதவியில் பொறுப்பில் இருக்கும் பெண்ணையே பொதுவெளி யில் இப்படி, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கண்ணியக் குறைவாக நடத்த முடிகிறதென்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்ன?
பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் தரலாமா? அன்பை வெளிப்படுத் தத் தருவதாகக் கூறினால், சாலையில் ஒரு இளை ஞன் இதை ஒரு பெண்கள் கூட்டத்தை நோக்கி இப்படிச் செய்தால் ஏதும் சொல்லாமல் போவதோ, எதிர்ப்புக்குரல் எழுப்புவதோ சம்பந்தப்பட்ட பெண்ணின் நிலைப்பாடு.
சில சிறுமிகள் பயந்துகொண்டு மௌனமாயிருப்பார்கள். அதனால் அதை அவர்கள் ஏற்கிறார்கள் என்று அர்த்தமல்ல. வீசப்படும் ‘பறக்கும் முத்தத்தை’ப் பார்த்து பயந்து பேசாமலிருக்கும் சிறுமிக் காக, யுவதிக்காக சாலையில் செல்பவர்கள் சண்டைக்குப் போவ தும் உண்டு.
இங்கே ராகுல் வீசிய பறக்கும் முத்தம் தங்களை மதிப்பழிப்பதாகக் கருதும் பெண் உறுப்பினர்கள் அது குறித்துக் கண்டனக்குரல் எழுப்பியதைக் கொச்சைப்படுத்தவும் கிண்டல் செய்யவும் முன் வரும் பெண்கள் தங்களை எண்ணி வெட்கப் படவேண்டும்.
இன்று Kismi என்ற பெயரில் ஒரு சாக்லேட் விற்கப்படுகிறது. இத னால் ஏற்படக்கூடிய Eve-Torturingஐ நினைத்தால் கவலையாயி ருக்கிறது.
இங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி ஒரு ‘பறக்கும் முத்தத்தை’ விட ஆரம்பித்தால் நாளை அவருடைய கட்சியின் ஆண்களுக்கும், ஆதரவாளர் களுக்கும் அது என்ன மாதிரி ’சமிக்ஞையைத் தருவதாக அமையும்?
திரு.ராகுல் காந்தி விடலைப்பையனில்லை. ஆளுங்கட்சியை எதிர்ப்பது என்ற பெயரில் கண்ணியக்குறைவாக நடக்கவேண்டிய தேவையென்ன?
அதற்கு சில பெண்கள் ஆதரவாகப் பேசவேண்டிய தேவையென்ன?
¬அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுவதே இங்கேயான அவலங் களுக்கெல்லாம் ஆதிகார ணமாக, அவ்வகையில் ஆகப்பெரும் அவலமாக அமைகிறது.
***
இதுவா ஊடக அறம்?
(*13.8.2023
தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
மணிப்பூரில் நடந்திருக்கும் மிக அவலமான, அராஜகமான நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது.
அதை பகடைக்காயாக, துருப்புச்சீட்டாக,
தங்களைப் பீடமேற்றிக் கொள்ளக் கிடைத்த பெருவாய்ப்பாகப்
பயன்படுத்திக்கொள்வோர் ஆழ்ந்த அனுதாபத்துக்கும், கண்டனத்திற்கும்
உரியவர்கள்
“மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட கொடூர நிகழ்வு’’ குறித்து சில ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம்
இப்படி யிருக்கிறது
//“யேய் அந்த ஆட்கள் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும்
காணொளிகளை முடிந்தவரை தெளிவாகக்காட்டப் பாருங்கப்பா – ஆனால், சட்டப்பிரச்சனையிலே சிக்காத அளவு கவனமாகக் காட்ட வேண்டும். //
***
மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் மறந்துவிட்ட கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்புக் கலவரம்
அது குறித்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இறந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஆஜராகவில்லையென்றும், அவருடைய மகளின் அலைபேசியை மிகவும் தாமதமாகவே உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார் என்றும், கலவரத்தில் ஈடுபட்ட இரண்டாம் நிலை ஆட்களே சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்நிலைக் கலவரக்காரர்கள், அவர்கள் மாநில அரசின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.
அது தற்கொலை என்று இரண்டு போஸ்ட் மார்ட்ட அறிக்கைகள் சொல்லியபிறகும் தொடர்ந்து அந்த மாணவியின் மரணத்தை RAPE & MURDER என்றே , எந்தவிதமான ஆதாரங்களையும் முன்வைக் காமல், பேசி வரும் மாணவியின் தாயார், அவருடைய ஆதரவாளர் கள், இறந்த மாணவி மானபங்கப்படுத்தப் பட்டதாய் இறப்பின் பின்னும் அவரை மதிப்பழித்துக்கொண்டிருக்கும் ஏராளமான யூட்யூபர்கள், சில அச்சிதழ்கள் – இவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
3500 மாணாக்கர்கள் படிக்கும் பள்ளி பட்டப்பகலில் சூறையாடப் பட்ட, தீக்கிரையாக்கப்பட்ட இத்தகைய நிகழ்வு உலக அளவிலேயே கூட நடந்ததாக நினைவில்லை. ஆனால், தமிழின் ‘மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள்’ இந்த நிகழ்வை விவாதப்பொருளாக்கவேயில்லை. அந்த வழக்கு குறித்த எந்தச் செய்தியையும் வெளியிட ஆர்வங் காட்டுவதில்லை. ஏன்?
***
இந்துமதம் என்றாலே மூட நம்பிக்கைகளும், வேண்டாத சடங்கு சம்பிர தாயங்களும் கொண் டது என்றவிதமான கண்ணோட்டத்தையே இந்த மெகா நாடகத்தொடர்கள் முன்வைக்கின்றன. இதுவா ஊடக அறம்?
ராகிங் கொடுமை
//*டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வெளியாகியுள்ள செய்தி இது. அதன் தம்ழ் வடிவம் விக்கிபீடியாவிலிருந்து எடுத்து இங்கே பகிரப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் சில இடங்கள் நெருடு கின்றன. இருந்தாலும் அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் இங்கே வெளியிட்டுள்ளேன்//