பாட்டுக்குப்
பாட்டு
WE ARE THE BOYS’ என்று பிக்-பாஸ் பங்கேற் பாளர்கள் சாண்டி, முகேன், தர்ஷன், கவின்,
லாஸ்லியா (ஒரு பெண்ணாக இருந்தும் லாஸ்லியா சக பெண் மதுமிதாவை மதிப் பழித்து அலைக்கழிக்கும்
குழுவில் இடம் பெற்றிருந்தது உண்மையிலேயே வருத்தத் திற்குரியது.) எல்லோரும் பாடும்
பாடல் ஒன்று பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.
ஆண்களின்
நிலையை எடுத்துரைக் கும் பாவனையில் பாடப்பட்டிருந்தாலும் அந்தப் பாடலின்
ஆரம்பத்திலேயே ஆணாதிக்கம் தொனிக்கிறது
- ‘WE ARE THE BOYS’.
இந்தப் பாடல்தான் இப்போது கல்லூரிகளில்
நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலெல்லாம்
இந்தப் பாடல்தான் இப்போது கல்லூரிகளில்
நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலெல்லாம்
தவறாமல் இடம்பெறுகிறது என்கிறார்கள்.
இது கவலைக்குரியது.
இணையம் முழுக்க பல காணொளிகளில்
ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடலுக்கு
என் எதிர்வினையாக கீழேயுள்ள பாட்டை
எழுதிப் பதிவேற்றுவது
அவசியம்
என்று தோன்றியது.
என்று தோன்றியது.
ஆணென்ன பெண்ணென்ன
என்று சொல்லிக்கொண்டே
WE ARE THE BOYS என்று கூவுவது நியாயமா?
என்று சொல்லிக்கொண்டே
WE ARE THE BOYS என்று கூவுவது நியாயமா?
நின்னா குத்தமில்லை
நடந்தா குத்தமில்லே
பெண்ணைத் தனியாவோ
எட்டுபேராகவோ ‘
Gang ragging செஞ்சா
அதுவென்ன மனிதநேயமா?
அதற்கு சட்டப்படி
தண்டனை
என்னான்னு தெரியுமா?
நின்னா குத்தமா
நடந்தா குத்தமா
இது உங்களுக்கு
மட்டுமா?
ஒரு பெண்
தன் கருத்தைச்
சொன்னா மட்டும்
குத்தமா?
சூழ்ந்துகொண்டு கேவலப்
படுத்தலாமா மொத்தமா?
உங்களுக்குவந்தா மட்டும்
ரத்தமா?
ரத்தமா?
நீங்கள் செய்தது
உத்தமமா?
கேட்பாரு பிள்ளையா
அலைஞ்சாக்கா பத்துமா?
உன் தாயும்
பொண்ணுதான்
அக்கா, தங்கையும்
பொண்ணுதான்
ஊரான் பெண்ணைப்
பழிக்கும்போது
இருக்காதே யதை
நினைக்காது.
ஊருக்குள்ளே நாலுபேர்
உங்களைப்
பார்த்துகிட்டு இருப்பாங்க
நல்லவங்களா வாழ
நாலு சொல்லித்
தருவாங்க...
கேட்டா கேட்டுக்கோ
கேட்காகாட்டி கெட்டுப்போ
செஞ்ச தப்பை
சரி செய்ய
வாழ்நாள் போதாது
யப்போ யப்போ!
’வின்’ பண்ண
இருந்தவளை
வீட்டுக்கு அனுப்பிவைத்த
பெண் பாவம்
உங்களை
சும்மாதான் விட்டுடுமா?
புண்ணாக்கியதற்கு
வருந்தி
மன்னிப்பு கேட்டால்
மருவாதை தான்
குறைஞ்சிடுமா?
மண்ணோடு மறைஞ்சிடுமா?
ஆறறிவு நமக்குண்டு
அதனினும் பெரிய
மனசாட்சியுண்டு
அவற்றின்படி நடக்காதவர்
அகிலப்புகழ்
பெற்றாலுமே
அஃறிணைக்கும் கீழாமே!
அறிவோமே நாமே!
No comments:
Post a Comment