Thursday, June 20, 2024

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகம்வேண்டும் _ லதா ராமகிருஷ்ணன்

 குழந்தைகளுக்குப்

பாதுகாப்பான

உலகம்வேண்டும்

_ லதா ராமகிருஷ்ணன்

.........................................................................................................................................
புதுச்சேரியில் ஒன்பது வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத் தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இளைஞன் ஒருவரும் 50+ வயதினரான ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் இன்னும் சிலரும் கூட்டாளிகளாக இருக்கக்கூடும்.
வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம். இன்னும் உடற் கூராய்வு அறிக்கை வரவில்லை.
இப்போதெல்லாம் குழந்தைகளை வன்புணர்வு செய்வது என்பது காமுகர் களுக்கு நேரடியாகவும் மறைமுகமாக வும் இன்பமளிக்கும் ஒன்றாகிவிட்ட நிலைமை அதிர்ச்சி யளிக்கிறது.
குழந்தைகளை வைத்து பாலுறவுக் காணொளிகள் எடுப் பது சுலபமாக இருக்கிறது என்பதால் இது ஒரு பன்னாட்டு வியாபாரமாகவும் கிளைபரப்பியிருக்கிறது.
கணினியில், கைபேசி யில் சமூக ஊடகங்களில், யூட்யூப் களில் நிரம்பிவழியும் பாலுறவுக்காட்சிகளை நடை முறையில் செய்துபார்க்க குழந்தைகளே easy targets ஆக இருக்கிறார் கள்.
இத்தகைய கொடூர சம்பவங்கள் எங்கு நடந்தாலும் உடனே அதை அரசியல்ரீதியாக ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்ளப் பயன்படுத்துவதா தீர்வு? இது பிரச்சனையை திசைதிருப்பும் செயல்.
இப்படியொரு பயங்கரம் நடந்தால் மட்டுமே குழந்தை கள், வளரிளம்பருவத்தினரின் நலன்களை, பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது என்றில்லாமல் ஆசிரியர்கள், பெற்றோர் கள், சிறுவர் சிறுமியர், பொதுமக்கள், காவல்துறையினர் என பலதரப்பட்டவர் களுக்கும் விழிப்புணர்வுத் திட்டங் கள், SENSITIZATION PROGRAMMES தொடர்ந்த ரீதியில் நடைபெறவேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment