Thursday, June 20, 2024

வாக்குரிமை _ வாக்காளர்கள் _ கருத்துத்திணிப்புகள் _ கள நிலவரங்கள் - லதா ராமகிருஷ்ணன்

 வாக்குரிமை _ வாக்காளர்கள் _

கருத்துத்திணிப்புகள் _ கள நிலவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன்
…………………………………………………………
பல வருடங்கள் முன்பு அலுவலகத்தோழர்கள் நடத்திக் கொண்டி ருந்த சிற்றிதழ் ஒன்றுக்காக சில தோழிகளும் நானும் தேர்தல் சமயம் யாருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றறிய அம்பத்தூர் பகுதியில் வீடுவீடாகச் சென்று பெண்களிடம் கருத்து கேட்டோம்.
எந்தக் கட்சிக்குப் போடுவார்கள், ஏன், வீட்டு ஆண்கள் சொல்பவர்களுக்குத் தான் வாக்களிப்பார்களா, தங்கள் பகுதியில் அவர்கள் என்ன எதிர்பார்க் கிறார்கள் என்ப தாக.
மிகவும் தெளிவாக பதிலளித்தார்கள். நல்ல கட்சி என்றா லும் தோற்கும் கட்சிக்கு வாக்களிப் பதில் தயக்கம் இருந் தது. தங்கள் வாக்கு வீணாகிவிடுமே என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
நிறைய அரசியல்வாதிகள் வெறுமே வாக்குறுதிகளை அளிப்பதாகக் கூறினார்கள். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தொகுதிப்பக்கம் வருவதேயில்லை என்று பலர் கூறினார்கள்.
உடனடித் தேவை நிறைவேற்றத்தை விட நிரந்தர வாழ் வாதார வழிவகைகளுக்கு அரசுகள் உதவ வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக, கோரிக்கை யாக இருந்தது.
வழக்கமாக முன்வைக்கப்படும் ‘வீர வசனங்கள்’ பிரி வினை வாதங்கள், வெற்று முழக்கங்கள், பொதுமக்க ளிடம் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது.
அவர்கள் நடப்புநிலவரங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், சொல்லுக்கும் செயலுக்குமான தொடர்பைக் கணக்கிலெடுத்துக்கொள்கிறார்கள். ‘எதற்கு வம்பு’ என்று தங்கள் கருத்துகளைத் தங்களுக்குள்ளேயே சேமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தகுந்த மாற்றுகள் இல்லாத போது இருப்பவற்றில் ஒன் றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.
தகுதியான, நம்பத்தகுந்த மாற்றாக ஒன்று அவர்களுக்குத் தட்டுப்படும்போது அவர்கள் அதற்கும் வாய்ப்பளித்துப் பார்க்கி றார்கள் (தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி இதற்கு ஓர் உதாரணம்).
மக்களின் கருத்துகளைக் கேட்டுக் குறித்துக்கொண்ட பிறகு அந்தப் பகுதியின் வேட்பாளர்களில் ஒருவரும் அவருடைய ஆதரவாளர் களும் கூடியிருந்த இடத்திற்குச் சென்றோம்.
அங்கு சிறிய கூட்டம்தான். வந்திருந்த எல்லோருக்கும்
அலுமினியத் தட்டுகளில் எளிய உணவு பரிமாறப்பட்டது, பிரபல கட்சிகளைச் சாராதவர் என்றாலும் உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவர் அங்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே பல ரும் கருதியிருக்கக் கூடும். நல்ல மனிதர் அவர். ஆனால் மக்களிடம் அவ்வளவாக அறிமுகமுல்லா தவர்.
என்னிடம் கேட்கப் பட்ட போது நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வின்படி, அதிகபட்சமாக ஆயிரம், ஆயிரத்தி யைந்நூறு வாக்குகளே கிடைக்கும் என்றேன்.
கூட்டத்தில் தர்மசங்கடமான மௌனம் நிலவியது. அப்படி வெளிப் படையாகச் சொல்வது அரசியல் நாகரீகமற்ற செயலோ என்னவோ. ... ஆனால், எனக்கு உண்மை யெனப் பட்டதைச் சொல்லிவிடுவதே சரியென்று தோன்றி யது.
அந்த தேர்தலில் அந்த நல்ல மனிதர் அவ்வளவுதான் வாக்கு களைப் பெற்றிருந்தார்.
அப்போது ஜெயலலிதா அவர்கள் அரசியலில் காலடி யெடுத்து வைத்திருந்த நேரம். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் (அரசியல் ரீதியாய் மாற்றுக்கொள்கை யுடையவர்கள் என்றாலும்) ஜெயலலிதா அடுத்துவரும் வருடங்களில் தமிழக அரசியலில் தலைமைப்பொறுப் பில் இருப்பார், இப்போதே ஐ.ஏ.எஸ் பதவி நியமனங் களை யெல்லாம் அவர்தான் பார்த்துக் கொள்கிறார் என்றெல்லாம் கருத்துரைத்ததைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது; வேடிக்கையாக இருந்தது.
அறிவுசாலிகள். களப்பணியாளர்கள் – இவர்களேகூட சினிமா மாயையில் விழுந்தவர்களாய் இப்படிப் பேசுகி றார்களே என்று எரிச்சலாகக்கூட இருந்தது.
ஆனால், அவர்கள் சொன்னதுதான் பிறகு நடந்தது.
கருத்துத்திணிப்புகள் வேறு, களநிலவரம் வேறு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

No comments:

Post a Comment