Monday, August 2, 2021

2.உன் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

  2.உன் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)



திறந்த புத்தகம் என்றாய்

மூடிய உள்ளங்கை என்றாய்

முடியும் நாள் என்றாய்

முடியாத் தாள் என்றாய்

வாடும் இலை என்றாய்

வாடா மலர் என்றாய்

வெம்பனி என்றாய்

சிம்ஃபனி என்றாய்

ஊடாடும் ஒளி என்றாய்

நாடோடியின் வலி என்றாய்

தேடும் கனி யென்றாய்

’காடா’த் துணி யென்றாய்

கருத்த இரவு என்றாய்

வறுத்த வேர்க்கடலை என்றாய்
.
பிறவற்றை ஓரளவு பொருள்

கொண்டாலும்

பொறுத்துக்கொண்டாலும்

வறுத்த வேர்க்கடலை

வெறுத்துப்போய்விட்டதெனக்கு

 



No comments:

Post a Comment