Monday, August 2, 2021

3.என் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

  3.என் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

உன்கதையை எழுதி

 

என்கதை யென்கிறாய்


பாவி யென்கிறாய்

 

பாவம் என்கிறாய்


கோவித்துக்கொண்டு ஒரே 


தாவாய்த் தாவி


ஓங்கியறைய வருகிறாய்


ஆவேசம் எதற்கு?


கூவிக்கூவிக் கடைவிரித்தாலும்


கொள்வாரில்லாத ஊரில்


தாவித்திரிந்தலைந்து


கொண்டிருப்பது


நீயுமல்லாத நானுமல்லாத


ஆவி!



 

No comments:

Post a Comment