Thursday, September 17, 2020

அன்பின் இருமுகங்கள் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) - TO KANGANA RANAUT

 அன்பின் இருமுகங்கள்

‘ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அன்பின் பெயரால் கூடிவாழ்ந்த ஒருத்தி

ஆறே மாதங்களில் காதலன் கதை முடித்ததோடு
கஞ்சாக்குடியன், கஞ்சாமடாக்குடியன் சித்தங்கலங்கியவன்
என்று செத்தவனை யின்னுமின்னும் 

குத்திக்குதறி
அவன் கொலையைத் தற்கொலையாகக் காட்டியும்

அவனுக்காக போதைப்பொருட்கள் வாங்கிவாங்கியே 

கையொடிந்துபோன அப்பாவிப் 

பத்தினியாய்த் 

தன்னைக் காட்டியும்
பித்தலாட்டம் செய்துகொண்டிருக்கிறாள்.....

'என்னைப்போல் ஒருவன்' என்ற
பேரன்பின் பிணைப்பில்
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி
எகத்தாளப்பேச்சுக்களுக்கும்
எக்குத்தப்பான வசைபாடல்களுக்கும்
தன்னை ஒப்புக்கொடுத்து
ஆசையாசையாய் கட்டியவையெல்லாம்
ஆதிக்கவெறியால் சுக்குநூறாக்கப்பட்டபோதும்
கதிகலங்காது
உண்மை வெளிவரவேண்டும் என்ற உறுதியில்
மீண்டும் மீண்டும் எரிந்தபடி
ஃபீனிக்ஸ் பறவையாய் தன்னைப்
புத்துயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறாள்
இன்னொருத்தி.

(சமர்ப்பணம் : To KANGANA RANAUT)

No comments:

Post a Comment