Wednesday, July 11, 2018

பூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பூனையைப் புறம்பேசல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும்
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே
பூனையும் நாமாகவியலாது.
இதில்
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.



No comments:

Post a Comment