Saturday, July 14, 2018

முகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன்


முகநூலில்
நீலப்படங்களும்
நட்புக்கோரிக்கைகளும்
லதா ராமகிருஷ்ணன்
(14.07.2018)















நாளும் நிறைய பேர் நட்புக்கோரிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பலரைப் பற்றி அவர்களது முகநூல் பக்கத்தில் எவ்வித விவரக் குறிப்பும் இல்லை. அத்தகையோர் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சிலருடைய முகநூல் பதிவுகளில் அநாகரீகமான ஆபாசமான பதிவுகள் சொல்லாடல்கள் மண்டிக் கிடக்கின்றன. மாற்றுக்கருத்துடைய வர்களை இத்தனை கேவலப்படுத்திக்கொண்டே பேச்சுரிமை, கருத்துரிமை என்றெல்லாம் முழங்குவதில் உள்ள போலித்தனமும் அதிகாரத்தொனியும் என்னால் நட்புகொள்ள முடியாதவை.

நான் சாதாரண ஆள். எந்த இலக்கியக் குழுவிலோ, அரசியல் கட்சியிலோ அங்கம் வகிக்காதவள். எனக்கு சரியென்று பட்டதை என் முகநூலில் கண்ணியம் குறையாமல் பதிவிடுகிறேன். அத்தகை யோரிடமே நட்பு பாராட்டவும் விரும்புகிறேன். இதுபோதும் எனக்கு. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்பவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இன்று காலை TAMI L என்பவரிடமிருந்து நட்புக் கோரிக்கை வந்திருந்தது. அவரைப் பற்றி விவரம் அறிய அவருடைய முகநூல் பக்கத்தில் சென்றால் அப்பட்டமான நீலப்படம் ஓட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்க கூகுளில் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவேஇவரிடம் நட்பு பாராட்டித் தான் பார்க்கவேண்டுமென்பதில் லையே என்று நினைத்துக்கொண்டேன்.

இணையக் குற்றங்கள், அவற்றிற்கான தண்டனை கள் என்று எத்தனை பேசப்பட்டாலும் இத்தகைய அநாகரீகங்கள், அத்துமீறல்கள் இருந்துகொண்டு தானிருக்கும் போலும். அந்த முகநூல் கணக்கைஸ்பாம்செய்துவிட்டேன்.

நட்பினரின் நட்பினர் தான் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்பவியலும். எனவே, என் நட்பினர் யாரோ ஒருவரின் நட்பினர்தான் இந்த முகநூல் கணக்கை வைத்திருப்பவர்கள். சம்பந்தப்பட்ட என் நட்பினர் இதுகுறித்து அவருக்கு எடுத்துரைக்கவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.

நீலப் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்துக் கொள்ளலாம். நிறைய பேருக்கு அது வடிகாலாகக் கூட அமையலாம். அது குறித்து நீதிநெறி புகட்டுவது என் நோக்கமல்ல. ஆனால் என்னளவில் இந்த நீலப்படங்கள் ஆண்-பெண் உறவை வெறும் உடல் ரீதியானதாக்கி, காட்சிப் பொருளாக்கி் கொச்சைப் படுத்துகின்றன. ஒரு பெண் எத்தனை ஆண்களால் வேண்டுமானாலும் என்னென்ன வக்கிரமான வழி களிலும் புணரப்படலாம் . எந்தப் பெண்ணும் அதை உள்ளூர விரும்புவாள் என்ற எண்ணத்தையே இந்த நீலப்படங்கள் எல்லாவழிகளிலும் உருவேற்றிக் கொண்டே யிருக்கின்றன.

இந்தப் படங்களில் ஒரு பெண்ணின் உடல், மன ரீதியான விருப்பம், விருப்பமின்மை குறித்த பிரக்ஞை அறவே ஓரங்கட்டப்படுகிறது. ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை அவளது முதலாளி தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது வெகு இயல்பானது என்பதாய், அதில் அந்தப் பெண் உள்ளூ றப் பெருமையடைவதாய் திரும்பத்திரும்பக் காட்டப் படுகிறது.

அவள் உடலில் இதனால் ஏற்படும் ரணகாயங்கள், தாங்கமுடியாத வலி குறித்த பிரக்ஞையை இவை கச்சிதமாக ஓரங்கட்டிவிடுகின்றன.

இதன் சாதக பாதகங்கள் தெரியாத இளம்பருவத் தினர் வாழ்வுகளில் இந்தப் படங்கள் எத்தனையோ விதமான அக,புற பாதிப்புகளை ஏற்படுத்திவருகின் றன.

இந்தப் படங்களில் இடம்பெறும் பெண்கள் எப்படி யெல்லாம் வலைக்குள் சிக்கவைக்கப்படு கிறார்கள், இத்தகைய படங்களைக் காட்டி இளம் பெண்களும், ஆண்களும் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் தினசரி பார்க்க, கேட்க நேர்கிறது.

இன்று தனிநபர்களாலும், கும்பலாலும் நடத்தப்படும் வன்புணர்ச்சிகள் அதிகமாக முக்கியக் காரணம் கைபேசி வழியாகவும் இணையம் வழியாகவும் காணக்கிடைக்கும் இத்தகைய நீலப்படங்களே என்று தோன்றுகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக ரித்துவர இந்த இணைய, கைபேசி நீலப்படங்களும் ஒரு முக்கியக் காரணம்.

இத்தகைய படங்கள் கைபேசியிலும் இணையத்தி லும் மலிந்துகிடப்பது குறித்த சமூகப்பிரக்ஞை இன் னும் பரவலாகவேண்டும்.

இனியும் மேற்குறிப்பிட்ட நபரோ, நபரொத்தவர் களோ எனக்கு நட்புக் கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் வன்மங்களுக்கும் வக்கிரங்களுக்கும் என் முகநூல் பக்கத்தில் இடம்தேடிக்கொள்ளும் நோக்கில் அப்படி அனுப்பினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment