LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, December 7, 2025

கவிரூபம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிரூபம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு காலத்தில் கவியென்பவர் நிழற்படங்களுக்கு
அப்பாலானவராக இருந்தார்.
அவர் தன்னை அருவமாகக் கண்டிருந்தார்.
காற்றாக பாவித்திருந்தார்.
கனவாகக் காட்சியளித்தார்.
கல்லுக்குள் தேரையாகத் தன் கவிதை வரிகளுக்குள் ஜீவித்திருந்தார்.
புல்லின் நுனி நீர்த்துளிக்குள் நிறைந்திருந்தார்.
கவியின் வயது காலாதீதமாயிருந்தது....
ஏழையாயிருந்தாலும் எவருக்கும் தலைவணங்கமாட்டார் கவி
என்பது சத்தியவாக்காக இருந்தது.
அசடுகள்தான் என்றாலும் அநியாயக்காரர்களல்ல கவிகள்
என்றே அனைவரும் ஒருமனதாய் எண்ணியிருந் தார்கள்.
அரசியலை விருப்புவெறுப்பற்று கவி அலசும்
அறமிருந்தது.
அன்று பெரும்பாலும் தங்களை
கவிதைக்குள்ளாக வெளிப்படுத்திக்கொண்டார்கள்.....
இன்று
அவர்கள் அரிதாரம் பூசிய நடிப்புக்கலஞர்களாகவும்
அரங்கேற
_ (இதற்குக் காரணம் வளர்ந்துவரும் தொழில்நுட்பமா?
சமூக வலைத்தளங்களா என்ற தீராப் பட்டிமன்றம்
ஒருபுறம் ஜோராக நடந்தவாறிருக்க)_
விறுவிறுவென்று நடந்தேறும் காட்சிகளில்
சமயங்களில்
சுரீரெனக் நீர் குத்திச் சுரந்து வழிகிறது
கவிதைக் கண்களில்.

No comments:

Post a Comment