பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சிடைக் கையகப்படுத்துதல் - தமிழில் லதா ராமகிருஷ்ணன் - அத்தியாயம் 2
BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS
அத்தியாயம் – 2
*BYRON பாணி
மகிழ்ச்சியின்மை
நவீன அமெரிக்கர்களுக்கு நான் கவனப்படுத்த விரும்பும் கண்ணோட்டம் திரு JOSEPH WOOD KRUTCHஆல் அவருடைய THE MODERN TEMPER என்ற புத்தகத்தில் தரப்பட்டிருக்கிறது. நம்முடைய பாட்டனார்களுடைய தலைமுறைக்கு அது BYRONஆல் வகுத்துரைக்கப்பட்டது. எல்லாக் காலத்திற்கும் அது
ECCLESIASTES எழுதியவரால் வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. திருவாளர்
க்ரட்ச் கூறுகிறார்: நம்முடையது நம்பிக்கை தரவியலாத ஒன்று. நமக்கு இயல்பான, இயற்கையான பிரபஞ்சத்தில் இடமில்லை. ஆனால், நாம் அதற்காக, அப்படி இடமற்று போனதற்காக ,மானுடர்களாக பிறந்துவிட்டதற்காக வருத்தப்படவில்லை. நாம் விலங்குகளாக வாழ்வதைக் காட்டிலும் மனிதர்களாக மடிவதையே மேலாகக் கருத வேண்டும்’.
பைரன் கூறுகிறார்:
உலகத்தால் தான் பறித்துக்கொள்வதைப் போல் தர முடிந்த மகிழ்ச்சி என்று எதுவுமே இல்லை,
முன்கூட்டியே வரும் எண்ணத்தின் ஒளிர்வு உணர்வின் மந்தமான சிதிலத்தில் மறுதலிக்கப்பட்டு
வீழ்ச்சியடையும்போது
ECCLESIASTES எழுதியவர் கூறுகிறார்:
எனவே நான் உயிரோடு வாழ்ந்துகொண்டிருந்தும் உயிர்ப்போடு இல்லாதவர்களைக் காட்டிலும் அதிகமாக ஏற்கனவே இறந்துபோய்விட்டவர்க
ளையே, இறந்துபோய்விட்டவைகளையே அதிகம் நான் போற்றிப் பரவினேன்.
ஆம் அவர்கள் இருவரை காட்டிலும் மேலானவன் இன்னும் பிறவாதவன்
சூரியனுக்கு நடந்தேறும் தீ வினைகளைப் பாராதவன்
இந்த மூன்று அவநம்பிக்கையாளர்களும்
வாழ்வின் இன்பங்களை பரிசீலனை செய்த பிறகு இந்த இருண்ட முடிவுகளுக்கு வந்துசேர்ந்தனர். திருவாளர் க்ரட்ச்
ஆகச்சிறந்த அறிவுஜீவிகள் வட்டாரங்களில் வாழ்ந்தவர். பைரன் எக்கச்சக்கமான காதல் தொடர்புகளைக் கொண்டவர். ECCLESIASTES எழுதியவரின் இன்பத் தேடல்களோ இன்னும் பலதரப்பட்டவை. அவர் ’வைன்’ அருந்தி மகிழ்ந்தார். இசையில் இன்பம் தேட முயற்சித்தார். அப்படி எத்தனையோ முயன்று பார்த்தார். அவர் நீச்சல் குளங்கள் கட்டினார். இந்த சந்தர்ப்பச் சூழல்களில் கூட அவருடைய அறிவும் விவேகமும் அவரை விட்டு விலகவில்லை.
என்றாலும், முடிவில் அவர் இவை எல்லாமே வீண் ஜம்பம் என்று கண்டுகொண்டார் விவேகமும் கூட வீண் ஜம்பம் என்று கண்டு கொண்டார்.
’விவேகத்தை அறிந்துணர்வதற்காக என் மனதையே கொடுத்தேன் மனப்பிறழ்வை
யும் மடத்தனத்தையும் அறிந்துணரவும்;
இதுவும்கூட உத்வேகத்தை சஞ்சலப்படுத்து வது என்று கண்டுகொண்டேன் காரணம் அதிக
அறிந்துணரலில் அதிக துயரம் அடங்கியிருக்கிறது. அறிவாற்றலை
யார் அதிகமாக்கிக்கொள்கிறானோ அவன் தனது துயரத்தை அதிகப்படுத்திகொள்கிறான்.
அவருடைய அறிவுஞானம் அவரை எரிச்சலடையச் செய்ததாய் தோன்றுகிறது. அந்த ஞானத்தை தன்னிலிருந்து விரட்டியடிக்க அவர் பலமுறை முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. அவர் சொல்கிறார்:
“ நான் என்னுடைய மனதிடம் சொன்னேன்:
’இப்போதைக்குச் செல். நான் உன்னை மகிழ்ச்சிகரமானதாக
நிரூபிக்கிறேன். எனவே, இன்பத்தை அனுபவி. புரிந்துகொள்
- இதுவும் வீண் ஜம்பம் என்று.’
ஆனால் அவருடைய விவேகமும் அறிவுஞானமும் அவருடனே தங்கிவிட்டன:
”பின், நான் என் மனதிடம் சொன்னேன்:
முட்டாள் ஒருவனுக்கு நடப்பதுபோலவேதான்
எனக்கும் நடக்கிறது. அப்படி
யெனில் நான் ஏன் அதிக அறிவாற்றல் உடையவனாக இருக்கிறேன்? பின், நான் என் மனதிடம்
சொன்னேன் – இதுவும் வீண்ஜம்பமே’.
“எனவே நான் வாழ்க்கையை வெறுத்தேன். ஏனெனில், சூரியனுக்குக்
கீழ் நடைபெறும் வேலை என் மீது துயரச்சுமையேற்றுகிறது.
காரணம், எல்லாமே வீண் ஜம்பமும்,
உற்சாகமிழப்பும் வீண் சஞ்சலமுமே.’
மக்கள் இப்போதெல்லாம் வெகு காலம் முன்பு எழுதப்பட்டவை
களைப் படிப்ப தில்லையென்பது இலக்கியவாதிகளுக்கு சாதகமான விஷயம் தான். ஏனெனில், அந்த புத்தகங்களை படித்தால் அவர்கள் குளங்குட்டைகளைப் பற்றி யார் என்ன சொல்லியிருந்தாலும், புதிய புத்தகங்களை உருவாக்குதல் கண்டிப்பாக வீண் ஜம்பமே என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.
ECCLESIASTES என்ற நூலின் போதனை மட்டுமே ஒரு விவேகமான மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பதை நம்மால் காட்ட முடிந்தால், பின், அதே மனநிலையில் எழுதப்பட்ட பின்னாளைய
படைப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொண்டு நாம் அவற்றைப் படிக்கப் பிரயத்தனப்படத் தேவை
யில்லை. இத்தகையதொரு விவாதத்தில் நாம், ஒரு மனநிலை - அதன் அறிவார்ந்த வெளிப்பாடு ஆகிய
இரண்டுக்குமிடையே வேறு படுத்திப் பார்க்கவேண்டியது அவசியம். ஒரு மனநிலையுடன் விவாதம் செய்ய வழியில்லை. அது ஏதாவது ஒரு அதிர்ஷ்டவச
மான நிகழ்வால் மாற்றம் அடைய வழியுண்டு. அல்லது, நம்முடைய உடல்நிலையில் ஏற்படக்கூடிய ஏதாவதொரு மாற்றத்தால் நம் மனநிலையும் மாறக்கூடும். ஆனால், ஒரு விவாதத்தால் மனநிலை மாற வழி இல்லை. எல்லாமே வீண் ஜென்மமே என்ற விதமாய் உணரும் மனநிலையை நான் அடிக்கடி அனுபவித்திருக்கிறேன். அந்த மனநிலையிலிருந்து நான் எந்தவொரு தத்துவத்தின் மூலமாகவும் மீண்டு வரவில்லை. தவிர்க்கமுடியாத தேவையாக இருக்கும் ஏதாவது ஒரு செயல்பாடு காரணமாகவே நான் அந்த உணர்வில் இருந்து வெளியேறியிருக்கிறேன் .உங்களுடைய குழந்தை உடல்நிலை சரியில்லையென்ன்றால் நீங்கள் மகிழ்ச்சி
யற்றிருருக்க வழியுண்டு; ஆனால், எல்லாமே வீண்ஜம்பம்தான் என்பதாக உணர மாட்டீர்கள். குழந்தையின் உடல்நலனை சரியாக்கு
வது முதலில் செய்தாக வேண்டிய விஷயம். மனித வாழ்க்கைக்
கென்று இறுதியான. உறுதியான மதிப்பு இருக்கிறதோ, இல்லையோ
- அது இப்போது முக்கியமில்லை என்றே நீங்கள் நினைப்பீர்கள். ஒரு செல்வந்தர், பல நேரங்களில் அவர் அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது போல, எல்லாமே வீண்ஜம்பம்
மட்டுமே என்று உணரக்கூடும். ஆனால், அவர் தன்னுடைய பணத்தை இழக்க
நேர்ந்தால், தனது அடுத்தவேளை உணவு என்பது வெறும் வீண்ஜம்பம் இல்லை என்று அவர்
உணர்வார். இந்த உணர்வு மனிதனின் இயற்கையான தேவைகளின் மிக எளிய திருப்தியிலிருந்து
உருவாகிறது. மனித விலங்கு, மற்ற விலங்குகளைப் போலவே, வாழ்வதற்கான குறிப்பிட்ட அளவு
போராட்டத்திற்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அளப்பரிய செல்வச்செழிப்பு
காரணமாக, நவீன மனிதர்கள் தங்களது எல்லாத் தேவைகளையும் எந்தவித முயற்சியு இன்றி
‘ஹோமோ ஸேப்பியன்கள்’ தமது எல்லாத் தேவைகளையும் எந்தவித முயற்சியும் இன்றி போர்த்தி
செய்துகொள்ள முடியும்போது வாழ்க்கையில் அதற்குரிய குறைந்தபட்ச முயற்சிகூட இல்லாத
நிலைமை ஒரு மிக ஆதாரமான நேர்ந்தால், தனது அடுத்த வேளை
உணவு என்பது வெறும் வீண்ஜம்ப்ம் இல்லை என்று அவர் உணர்வார். இந்த உணர்வு மனிதனின் இயற்கையான தேவைகளின் மிக எளிய திருப்தியிலிருந்து உருவாகிறது. மனித விலங்கு மற்ற விலங்குகளை போலவே வாழ்வதற்கான குறிப்பிட்ட அளவு போராட்டத்திற்கு தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பது அளப்பரிய செல்வ செழிப்பு காரணமாக ஹோமோசெபியன்ஸ் தனது எல்லாம் தேவைகளையும் எந்தவித முயற்சியும் என்று பூர்த்தி செய்யக் கொள்ளும் செய்து கொள்ள முடியும்போது வாழ்க்கையில் அதற்குரிய குறைந்தபட்ச முயற்சி கூட இல்லாத நிலைமை மகிழ்ச்சிக்கான ஒரு மூலாதார
அம்சங்களை அவரிடமிருந்து விலக்கி விடுகிறது. எந்தவொரு மனிதனுக்கு அவன் ஓரளவே விரும்பும் விஷயங்களும்/
வஸ்துக்களும் எளிதாகக் கிடைக்கின்றனவோ அவர்
மனிதனுடைய விருப்பம் நிறைவேறுவதில் அவனுக்கு
எந்தவிதமான மகிழ்ச்சி யும் கிடைப்பதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அந்த மனிதர் ஒருவித தத்துவார்த்தக் கண்ணோட்
டம் கொண்டவராக இருப்பின், ’மனித வாழ்க்கை என்பது அடிப்படையாகவே, கட்டாயமாகவே அவலமானது
- காரணம் தனக்கு விருப்பமான எல்லாமே கிடைத்தும் மனிதன் இன்னமும் மகிழ்ச்சியற்றவனாகவே இருக்கிறான்’ என்று முடிந்தமுடிவாகக் கூறுகிறார்.
நாம் விரும்பும் விஷயங்களில் சில நம்மிடம் இல்லாமலிருப்பது மகிழ்ச்சியின் தவிர்க்கமுடியாத, பிரிக்கமுடியாத அம்சம் என்பதை அவர் மறந்துவிடுகிறார்.
இதுதான் மனநிலை என்பது. என்றபோதும்,.
ECCLESIASTESஇல் அறிவார்த்தமான, தர்க்கபூர்வ மான வாதங்களும் இடம்பெற்றுள்ளன.
‘நதிகள் கடலுக்குள் ஓடிக்கலக்கின்றன;
இருந்தும் கடல் நிரம்புவதில்லை.
சூரியனுக்குக் கீழ் புதியதாக
ஏதொன்றுமே இல்லை
முந்தய விஷயங்கள் குறித்த எந்த
ஞாபகமும் இல்லை
சூரியனின் கீழ் நான் மேற்கொண்ட எல்லா வேலைகளையும் நான் வெறுத்தேன்;
ஏனெனில், அவையெல்லாவற்றையுமே எனக்குப் பின் வரக்கூடிய மனிதனிடம் நான்
விட்டுச்சென்றாக வேண்டும்
இந்த
வாதங்களை ஒரு நவீன தத்துவவாதியின் பாணியில் கட்டமைக்கும் கமுயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால்
அது கிட்டத்தட்ட கீழ்க்கண்டவாறு அமையும்.
‘மனிதன்
நிரந்தரமாகப் பாடுபட்டுக்கொண்டேயிருக்கிறான். பருப்பொருள் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டேயிருக்கிறது.
இருந்தும், எதுவும் நிபொரேயளவாய் நிலைத்திருப்பதில்லை. அதற்குப் பின் வரும் புதிய ஒன்று
ஏற்கெனவேயிருந்ததிலிருந்து எந்தவிதத்திலும் மாறுபட்ட தில்லை என்றாலும், எதுவும் நிலைத்திருப்பதில்லை.
ஒரு மனிதன் இறந்துபோகிறான். அவனு டைய சந்ததியினர் அவனுடைய அயரா உழைப்புகளின் பலன்களைப்
பெறுகிறார்கள்; நதி கடலுக்குள் ஓடிக் கலக்கிறது. ஆனா, அந்த நீர்கள் அங்கேயே தங்கியிருக்க
அனுமதிக்கப் படுவதில்லை. மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப, முடிவற்றதொரு அர்த்தமற்ற
சுழற்சியில் மானுடர்களும், பருப்பொருட்களும் எந்தவிதமான மேம்பாடும், முன்னேற்றமும்
இன்றி, எந்தவிதமான நிலைத்த வெற்றி/சாதனை இன்றி – ஒவ்வொரு நாளும், வருடா வருடம் அதே
நடந்தவாறு. ஆறுகள், அவை அறிவும் விவேகமும் கொண்டவையாக இருப்பின், அவை எங்கேயிருக்கின்றனவோ
அங்கேயே தங்கியிருக்கும். ஸாலமன், அவர் விவேகியாக இருப்பின், தனது மகன் கனிகளை அனுபவிக்கக்கூடியதான
பழமரங்களை நட்டுவைக்க மாட்டார்.
ஆனால்,
இன்னொரு மனநிலையில் இது எத்தனை வித்தியாசமாகக்
காண்கிறது, பாருங்கள்: சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவுமில்லையா? அப்படியானால், வான்முட்டும்
கட்டடங்கள் என்ன? ஆகாயவிமானங்கள்? அரசியல்வாதிகளின் சொற்பொழிவுகள் ஒலிபரப்பபடுவது?
இந்த விஷயங்களைப் பற்றி ஸாலமனுக்கு ஏதாவது தெரியுமா என்ன? அவருடைய பிராந்தியங்களி லிருந்து
திரும்பிவந்தபின் அரசி ஷீபா தன்னுடைய குடிமக்களுக்கு ஆற்றிய உரையை wirelessஇல் கேட்க முடிந்திருந்தால்
அது அவரை அவரது பயனற்ற மரங்களுக்கும், குளங்களுக்கும் நடுவில் சமாதானப்படுத்தியிருக்காதா
என்ன? செய்தித்தாள்கள் அவரது கட்டிடக்கலைத்திறனின் அழகைப் பற்றி, அவருடைய அந்தப்புரத்தின்
சுக-சௌகரியங்கள் குறித்து, அவரிடம் தர்க்கம் புரியும் போட்டி இறைமனிதர்களின் தர்மசங்கடங்களைப்
பற்றியெல்லாம் அவரிடம் தகவல் தர ஒரு செய்தி சேகரிப்பு மையம் அவரிடம் இருந்திருப்பின்,
எந்தவொரு புதிய விஷயமும் இல்லை என்று அவர் விடாமல் கூறிக்கொண்டேயிருதிருப்பாரா என்ன?
மேற்குறிப்பிட்ட புதிய விஷயங்களெல்லாம் அவருடைய அவநம்பிக்கையை முழுமுற்றாக குணப்படுத்தாமலிருந்திருக்கலாம்.
ஆனா;, அதற்கு அவர் முற்றிலும் புதிய வேறொரு பெயரைத் தந்தாகவேண்டியிருந்திருக்கும்.
சொல்லப்போனால், நாம் வாழும் காலம் பற்றிய திருவாளர் ’க்ரட்ச்’சின் புகார்களில் ஒன்று,
சூரியனின் கீழே எக்கச்சக்கமான புது விஷயங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரு புதுமையின்
புதிய விஷயத்தின் இருப்பும் இன்மையும் ஒரேமாதிரியான எரிச்சலைத் தருகிறதென்றால், அவநம்ப்க்கையின்
உண்மையான காரணம் இந்த இரண்டில் ஒன்றாக இருக்க வழியேயில்லை என்பதுதான் உண்மை. திரும்பவும்
அந்த உண்மைக்கு – அதாவது ‘எல்லா நதிகளும் கடலுக்குள் ஓடிக் கலக்கின்றன – இருந்தும்
கூட கடல் நிரம்புவதில்லை என்ற உண்மை நிலவரத்திற்கு வருவோம். ‘எங்கிருந்து ஆறுகள் வருகின்றனவோ
அங்கேயே அவை மீண்டும் திரும்புகின்றன. இதுவே
விரக்திக்கும், அவநம்பிக்கைக்கும் ஆதாரமாகக் கொள்ளப்பட்ட அளவில், இது பயணம் என்பது
இனிமை யல்லாத ஒன்று என்ற அனுமானிக்கிறது.மக்கள் கோடைக்காலத்தில் உடல்நலச் சுற்றுலாத்
தலங்களுக்குச் செல்கிறார்கள். இருந்தும், அவர்கள் எங்கிருந்து சென்றார்களோ அங்கேயே
ஹ்டிரும்பிவருகிறார்கள். ஆனால், கோடைக்காலத்தில் உடல்நலச் சுர்றுலாத்தலங்களுக்குப்
போவது வீண் என்பதை இது நிரூபிப்பதில்லை. உங்களுக்கு உணர்வுகள் வழங்கப்பட்டிருப்பின்
அவை ஒருவேளை ஷெல்லியின் ‘மேகம்’ (Cloud) கவிதையில் அவை இயங்குவது போன்ற வீரசாகச சுழற்சியை விரும்பியனுபொஅவிக்கக்கூடும்.
ஒருவர் தன்னுடைய வாரிசுக்குத் தன்னுடைய உடைமைகளை விட்டுச்செல்வதிலுள்ள வலி-வேதனையைப்
பொறுத்தமட்டில், இந்த விஷயத்தை இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து பார்க்க இது மிகக் கணிசமான
அளவு குறைவான அழிவாக்கம் நிரம்பியதே. அதேபோல்தான், எல்லாம் முடிந்துவிடும் என்பது அதனளவில்
அவநம்பிக்கைக்கு வழிவகுப்பதில்லை. ஆனால் அவற்றைத் தொடர்ந்து அதன்பின் வருவன அவற்றை
விட மோசமாக இருந்தால் அவை அவைநம்பிக்கைக்கான காரணமாக அமையும். ஆனால், அவற்றுக்குப்
பிறகு இன்னும் மேலான, நல்ல விஷயங்கள் ஏற்பட்டால், அது நம்பிக்கைக்கான காரணமாக அமையும்.
ஆனால், ஸாலமன் அழுத்தமாக வலியுறுத்துவதுபோல, அந்த விஷயங்களைத் தொடர்ந்து அவை போலவே
அச்சு அசலான விஷயங்கள்தான் நடந்தேறுகின்றன எனில் நாம் என்ன நினைக்க முடியும்? இது எல்லாவற்றையுமே
வீணாக்கிவிடுகிறதல்லவா? கண்டிபாக இல்லை. அதாவது, அந்த சுழற்சியின் எல்லாக் கட்டங்களுமே
அவ்வவ்வாற்றின் அளவில் வேதனையளிப்பதாக இருக்கிற தென்றால் மட்டுமே அப்படியாகும். எப்பொழுதும்
எதிர்காலத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கம் நிகழ்காலத்தின் மொத்த அர்த்தமும்
அது என்ன கொண்டுவரப்போகிறது என்பதில் தான் அடங்கியிருக்கிறது என்ற எண்ணவோட்டம் மிகவும்
தீங்குவிளைவிக்கக்கூடியது. ஒரு முழுமையின் தனித்தனி பாகங்களுக்கு மதிப்பு இருந்தாலொழிய
முழுமைக்கென்று எந்த மதிப்புமில்லை. வாழ்க்கை ஒரு மிகையுணர்ச்சி நாடகம்போல் – கதாநாயகனும்
கதநாயகியும் தாங்கவொண்ணாத் துன்பங்களைத் தொடர்ச்சியாக அனுபவிப்பதாகவும், இறுதியில்
வரும் சுப முடிவு அவற்றையெல்லாம் ஈடுசெய்வதாகவும் அமையும் மிகையுணர்ச்சி நாடகத்தின்
‘ஒப்புமை’ போல் வாழ்க்கை பாவிக்கப்படலாகாது. நான் வாழ்கிறேன். என்னுடைய நாள் கிடைக்கப்பெறுகிறேன்.
என்னுடைய மகன் எனக்குப் பின் வருகிறான். வனுடைய நாளை அடைகிறான். இதிலிருந்தெல்லாம்
ஒரு துன்பியல் நாடகத்தை இட்டுக்கட்டவேண்டிய அவசிய மென்ன? அதற்கு மாறாக, நான் நிரந்தரமாக
வாழ்ந்துகொண்டேயிருந்தால் வாழ்க்கையின் சந்தோஷங்கள், ஆனந்தங்கள் முடிவில் அவற்றின்
சுவையை இழந்துவிடுவது தவிர்க்க முடியாமல்போகும். இப்போது இருக்கும் அளவில் அவை என்றென்றைக்கும்
புத்துயிர்ப்போடு இருக்கிறது.
(*இன்னுமுண்டு)
குறிப்புகள்:
*Byron லார்டு பைரன் (Lord Byron) 22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆவார்.
JOSEPH WOOD KRUTCH ஜோசப் வூட் க்ரூட்ச் ( / kruːtʃ / ; நவம்பர் 25, 1893 - மே 22, 1970) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார்,
The Modern Temper: A
Study and a Confession : நவீன கால மனிதன் எதிர்கொள்ளும் சஞ்சலங்கள் அவதிகளை நுட்பமாக
அலசியாராயும் நூல்
ECCLESIASTES - ஹீப்ரூ பைபிளின் எழுத்தாக்கங்களில் ஒன்று. கிறித்துவ பழைய வேதாகமத்தின் ஞானபோதனை படைப்புகளில் ஒன்று. தன் மீது
விழுந்த சாபத்தால் மானுடம் பூமியில் விழுந்தது என்கிறது இந்தப் படைப்பு.
***
.jpg)
No comments:
Post a Comment