LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 25, 2023

நினைவு கூர்வோம்: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்

 

(*25. 10.2023 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் இடம்பெற்றுள்ளது)



'நான் கே.எஸ்.பேசறேன்'  என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெற்றுள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் கவித்துவ வரிகள். 


LET'S LIVE THE MOMENT

 By K.S.

“One crowded hour of glorious life is worth an Age
without a name.
Why keep living for eternity?
Why miss the loving lilies for the distant stars?
Hungering for eternity can reduce life to an arid waste.
It can rob the moment of its meaning.
Let’s live the moment,
let eternity take care of itself.
Don’t waste away, analyzing life and its meaning all the time.
Life is far too precious for that.
Damn it, let us Live It.
Let’s lend value to the moment in our grasp.
Tomorrow is far away.
The past is dead.
Even the present is fleeting.
This moment is what we have
and
Let’s Live It!



என்னுடைய எளிய தமிழாக்கம்:

இந்த நொடியை வாழ்ந்துவிடலாம் வாருங்கள்  

- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் -

அடர்செறிவான ஒரு மணி நேர வாழ்வு
பெயரற்றதொரு யுகத்திற்கு ஈடானது
‘எதற்காக அழிவற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்?
தொலைதூர நட்சத்திரங்களுக்காக
அன்புடை அல்லிமலர்களை இழக்கவேண்டும்?
அமரத்துவத்திற்காகப் பசியோடலைதல் வாழ்வை
அதிவறண்டதாக வீணடித்துவிடும்
அதனால் ஒரு நொடியின்
அர்த்தத்தை களவாடிவிட முடியும்
நொடியில் நீடுவாழ்வோம்
நிரந்தரம் தன்னைத்தான் கவனித்துக்கொள்ளட்டும்.
வாழ்வையும் அதன் பொருளையும்
எல்லா நேரமும் அலசிக்கொண்டேயிருப்பதில்
வீணாகிவிடவேண்டாம்.
வாழ்க்கை அற்புதமானது; விரயம்செய்வதற்கானதல்ல
அட, வாழ்ந்துவிடலாம் வாருங்கள்
நம் கைவசமுள்ள நொடியை மதிப்பார்ந்ததாக்குவோம்
நாளை வெகுதொலைவிலிருக்கிறது
கடந்தகாலம் இறந்துவிட்டது.
நிகழ்காலமும்கூட
நில்லாதோடிக்கொண்டேயிருக்கிறது.
நமக்கிருப்பது இந்தவொரு நொடி மட்டுமே
அதை
வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!



’நான் கே.எஸ்.பேசறேன்’ என்ற தலைப்பிட்ட நூலில் நினைவு கூரல் பகுதியில் இடம்பெறும் கவிஞர் கருணாகரன் சிவராசாவின் கட்டுரை.

செயற்பாட்டாளுமை கே.எஸ்.  - கருணாகரன் சிவராசா -

வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்கிற சில புதிர்களுக்குப் பதிலைக் கண்டு பிடிக்கவே முடியாது. பதிலற்று, கேள்வியின் பின்னே செல்ல வேண்டியது தான். அப்படியொரு புதிரின் முன்னே நிற்கிறேன். இன்றிரவு வயலிலிருந்து வீட்டுக்கு வந்தபொழுது Dr. K.S. சுப்பிரமணியன் மொழி பெயர்த்துத் தொகுத்திருந்த LOCKDOWN LYRICS புத்தகம் வந்திருந்தது. தமிழ்நதி அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நதிக்கு டிஸ்கவரி வேடியப்பன் அனுப்பி யிருக்கிறார் போலும்.

எல்லாவற்றுக்குமான ஏற்பாட்டைச் செய்தவர் K.S. சுப்பிர மணியன் அவர்கள். ஆனால், இன்று K.S. சுப்பிரமணியன் இல்லை. மூன்று நாட்க ளின் முன்னே அவரை இழந்து விட்டோம். யாருமே எதிர்பார்த்திருக்காத இழப்பு. K.S. இன் இழப்பைக் குறித்துப் பலரும் துயர்ப்பட்டிருந்தனர். பலர் துக்கம் மேலிடத் தவித்தனர். நானும்தான்.



அந்தளவுக்கு K.S. சுபாவத்திலும் இனியவராக இருந்தார். இலக்கிய ஈடுபாடு, அதன் விளைவான பணிகள், ஆர்வத் தோடு தொடங்கி அக்கறையாகச் செய்த மொழி பெயர்ப்பு கள், பிறகு அதிலேயே முழுமையாக இயங்கி யது, இலக்கிய நண்பர்க ளுடனான உறவு என தன்னை மறக்கவே முடியாத, இழக்கவே முடியாத ஒரு ஆளுமையாக மாற்றிக் கொண்டு வாழ்ந்தார்.


தமிழ் இலக்கியச் சூழலில் உள்ளவர்கள் K.S. ஐப் பற்றி பல கதைகளைச் சொல்லு வார்கள். முக்கியமாக ஜெயகாந்த னுக்கும் K.S. க்கும் இடையி லான உறவைப் பற்றியும் ஜெயகாந்தனின் மீது K.S. க்குள்ள அபிமானத்தைப் பற்றியும். இதற்கப்பால் பொதுவாகவே தமிழ் இலக்கி யத்தை ஆங்கிலத்தின் வழியாக அறிமுகப் படுத்துவ திலும் முடிந்த ளவுக்குச் செயற்பட்டிருக்கிறார்.


இலக்கியத்தைக் கொண்டாட்டமாக, செயலூக்கத்துக்குரிய ஒன்றாகப் பார்ப்பது குறைவு என்ற நிலையுடை யது நம்மு டைய சூழல். இவ்வளவுக்கும் எல்லோருக்கும் தமிழ் என்றால் உயிருக்கு நிகர்! அதற்கப்பால் மொழிக் கும் இலக்கியத்துக்கும் அதன் வழியாகச் சமூகத்துக்கும் வரலாற்றுக்கும் அவர்கள் செய்வது ஒன்றுமில்லை.

தமிழ் உயிருக்கு நேர் என்ற ஒற்றை வரி அவர்களுக்குப் போதும். இதனால்தான் செயற்பாட்டாளுமையாக விளங்கிய K.S. ஐ கொண்டாட வும் மறக்கமுடியாதிருக் கவும் வேண்டியுள்ளது.


K.S. இன் இலக்கிய ஆர்வத்தைப் பற்றிச் சொல்லத்தேவை யில்லை. அது எல்லோ ரும் அறிந்தது. அந்தளவுக்கு இலக்கியத்துக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்தவர் K.S.பலரும் கொவிட் 19 இன் போது முடங்கி யிருந்தபோது அந்த முடக்கத் திற்குள்ளும் இயங்கினார் K.S.. அதுதான் அவரு டைய அடை யாளம். அப்பொழுது நீடித்த LOCKDOWN ஐ யே ஆதாரமாக வைத்து ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டார். தமிழில் லொக்டவுணை மையப்படுத்தி அந்தக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை களை தொகுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதே K.S. இன் திட்டம். இதற்கு டிஸ்கவரி ஆதரவளித்தது. லொக்டவுண் காலம் சரியாக முடிவடைவதற்கு முன்பே புத்தகம் வெளியாகி விட்டது. அதுவே இன்று என் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. LOCKDOWN LYRICS. அத்தனை வேகமாக இயங்கியிருக்கிறார் K.S.


தொகுப்பில் மொத்தமாக 103 பேரின் கவிதைகள் உண்டு. இவ்வளவு கவிதை களையும் ஏறக்குறைய இரண்டு மாதத்திற்குள் மொழிபெயர்த் திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் என்னுடைய கவிதைகளை அவர் பெற்றுக் கொண்ட காலம், 2020 யூலை இறுதிப் பகுதி. புத்தகம் வெளியிடப்பட்டது 2020 ஓகஸ்ற்றில். அப்படியென்றால் ஒரு மாதத்திற்குள்தான் பெரும்பா லான கவிதைகளை ஆங்கிலப்படுத்தியிருக் கிறார் K.S. அதுவும் இதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்தது மட்டுமல்ல, கவிஞர்களைத் தொடர்பு கொண்டு கவிதைகளையும் அவர்க ளைப் பற்றிய விவரங்களையும் சேகரித்ததே பெரியவேலை. இந்தியாவிற்குள் மட்டு மென்றில்லாமல், இலங்கையைச் சேர்ந்த கவிஞர்கள், புலம்பெயர் தேசங்களிலிருப்போர் என்று ஒரு பெரிய பரப்பில் பலரையும் உள்ளடக்கியி ருப்பதால் இது பெரிய வேலையே.


ஆனால், திட்டமிட்டவாறே தீர்மானித்த கால எல்லைக் குள் புத்தகம் வெளிவந்து விட்டது. இதில் ஓரளவுக்கு K.Sக்கு மகிழ்ச்சி என்று அறிந்தேன். ஆனாலும் புத்தகத்தை உரிய கவிஞர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று K.S. முயற்சித்துக்கொண்டிருந்தார். இந்தியப் பரப்பிற்குள்ளும் கொவிட் 19 நெருக்கடிகள், ஊரடங்கு நிலை போன்றவற்றினால் பணிகள் தடைப்பட்டுக் கொண்டிருந் தன. இதை விட வெளிநாடுகளுக்கான புத்தகங்களை அனுப்புவது மேலும் சிரமமாக இருந்தது. இதற்காக அவர் நமக்கு மின்னஞ்சலை அனுப்பி நிலைமையைக் குறிப் பிட்டிருந்தார். இது அவருடைய பொறுப்புணர்வையும் படைப்பாளிகளின் மேல் கொண்டிருக்கும் ஆழமான பற்றுணர் வையும் மதிப்பை யும் உணர்த்துகிறது.

இங்கே அவர் எழுதிய கடிதங்களில் ஒன்றைப் பகிர்கிறேன். K.S. இன் இந்த முயற்சிக்கு - LOCKDOWN LYRICS தொகுப்புக்கு கவிதைகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டவர் நண்பர் Sri N Srivatsa. இந்த மாதிரி உறவுகள் நமக்குக் கிடைத்த பெருங்கொடை.

இன்று K.S. சுப்பிரமணியன் அவர்கள் இல்லை. ஆனால், அவர் தந்து விட்டுச் சென்றிருக்கும் LOCKDOWN LYRICS நம் கைகளில் உள்ளது. அதற்கு நன்றி சொல்வதற்கிடையில், அவரை ஒரு பொழுது சந்தித்து கைளைப் பற்றிப் பேசு வதற்கிடையில், அவர் நம்மை விட்டுச் சென்று விட்டார்.

அவர் அப்படிச் சென்றாரா அல்லது அவரை நாம் இழந்தோமா என்றால், அவர் நீங்கவில்லை. நாம்தான் அவரை இழந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

அவரிடமிருந்து பெற்றது அதிகம். அவருக்கு நாம் செய்தது குறைவு என்ற உணர்வோடு இந்தக் கணங்களை அவருக்காக தருகிறேன்.

Dear Karunakaran,

I would like to inform you that your poem has been selected and translated for inclusion in the forthcoming book entitled LOCKDOWN LYRICS. The book is expected to be published sometime during this month.

Please send me (again) your full postal address to enable me to send one complimentary copy of the book to you. As I had already indicated, taking into account the exorbitant cost of sending the book outside India, please send me an Indian Address to which the book will be sent.

Regards
K.S.Subramanian


'நான் கே.எஸ்.பேசறேன்’ நூலிலிருந்து';

இதையும் கொஞ்சம் மொழிபெயர்த்துலாமா 

கே எஸ்?  

- ரவிசுப்பிரமணியன் -


கே எஸ் என்கிற கே. சுப்ரமண்யனை என்று எங்கு எப்படி நான் முதலில் சந்தித்தேன் என்று எனக்கு நினைவில் இல்லை ஆனால் அவர் தன் நண்பன் ஜே. கே (எழுத்தாளர் ஜெயகாந்தன்) வின் பிறந்த நாள் ஒன்றில் அவருக்கு வாழ்த்துச்சொல்லி அந்த ரம் நிறைந்த கோப்பையை பிரியமுடன் அவரது கையில் தந்து சியர்ஸ் என்று சிரித்த அந்த காட்சிதான் என் ஞாபகக்கண்ணி களில் முதல் காட்சியாக பதிந்திருக்கிறது.

ஜே. கேயை மட்டுமல்ல அவருக்கு பிடித்த எல்லா மனிதர்களையும் அப்படி கொண்டாடுபவர்தான் கே. எஸ். எப்போதும் நான் அவரை நான் ஜேகேயுடன் சேர்த்தே நினைவில் கொள்வேன். என் அலை பேசியில் கூட அவர் பெயரை இப்படித்தான் குறித்து வைத்திருக் கிறேன் கே. எஸ், ஜே. கே. என்று.

இறுதிவரை இயங்கிகொண்டே இருந்த அவர் இந்த கொரோனா காலத்திலும் பல கவிஞர்களை - அவர்கள் கவிதைகளை தேடி தேடி கேட்டு கேட்டு மட்டும் மொழி பெயர்க்கவில்லை. எழுத்தாளர்கள் இக்காலத்தில் என்ன சிரமப்படு கிறார்களோ என யோசித்து நாலாம் பேருக்கு தெரியாமல் சில எழுத்தாளர் களுக்கு தன் அன்பை பணமாகவும் அவர் மொழிபெயர்த்து அனுப்பிக்கொண் டிருந்தார்.

அப்படித்தான் எனக்கும் நான் எதுவும் சொல்லாமல் எதுவும் கேட்காமல் தன் ஓட்டுனர் மூலம் இருபத்தி ஐயாயிரம் பணம் அனுப்பி வைத்தார். நான் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்ப எவ்வளவோ பேசி அவர் அன்பின் முன் தோற்றுப்போனேன்.

அவரைப்போல இன்னும் வெளியே சொல்ல வேண்டாம் என்று உதவிய சில நண்பர்களால்தான் இந்த கடுமை யான காலத்தை நான் கடந்து வருகிறேன்.

தேர்ந்த மொழிபெயர்பெயர்ப்பாளராக எழுத்தாளராக இல் லாமல் இருந்தி ருந்தாலும் கூட அவர் இதைப் போன்ற பல காரியங்களை செய்துகொண்டே தான் இருந்திருப்பார்.

பலர் எழுத்தாளராக மொழிபெயர்ப்பாளராக கலைஞனாக ஆகிவிடலாம்தான். ஆனால், மனசை எந்த கசடும் படியாமல் வைத்துக்கொண்டு மேன்மையை மட்டும் கொண்டாடி மகிழவும் துன்பப்படுபவர்களுக்கு இயன்றதை எல்லாம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு இவர் நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் வரும் குணமும் எத்தனை பேருக்கு வாய்க்கிறது. இவர்கள் பொருட்டல்லவா பிழைகள் மலிந்த வாழ்வை வாழும் என்போன்றோர்க்கும் சேர்த்துப் பெய் கிறது மழை.

சாகித்ய அகாடமியில் அவரோடு இணைந்து சில ஆண்டு ஆலோசனைக்குழு உறுப்பினராக பணியாற்றிய காலங்கள் எவ்வளவு இனிமையானவை. தகுதி யான எத்தனை பேருக்காக அவர் அங்கு வாதாடியிருப்பார். எத்தனை அரிய புத்தகங்கள் வர காரணமாக இருந்தார்.

அதோடு நில்லாமல் தெரியாத விஷயங்களை எந்த தன்முனைப்புமின்றி அவர் கேட்டுக்கொள்ளும் விதம் குழந்தமையானது.

எத்தனை விருந்துகள் எத்தனை பகிர்தல்கள். எத்தனை பயணங்கள். என் தனிப் பட்ட வாழ்வில் அவர் கைகாட்டிய திசைகள் எவ்வளவு.

அவர் மொழிபெயர்ப்பின் சிறப்புகளை சான்றுடன் எடுத் துக்காட்டியும் சரியான ஒற்றை சரியான சொல்லுக்காக அவர்படும் பாட்டையும் கவிஞர்களோடு அதை கலந்து பேசி அதை உறுதி செய்துகொள்ள அவர் பட்டபாடுகளும் தனி கட்டுரைக்கானவை.

தொலைபேசியில் அழைத்தும் சுப்ரண்யன் என்றபடி அந்த கம்பீரமாக பேசத் துவங்கும் அவர் 'ஆங்… ரவ்வி எப்படிப்பா இருக்க' என்ற கேள்வியோடு ஆரம்பித்து ஒன்றிவிடுவார். சில சமயம் கேலி கிண்டல்கள் கூட இருந்த துண்டு ஆனால் எல்லாவற்றின் ஆதார நீர்மை அன்பு ஒன்றுதான்.

ஜே. கேவின் ஆவணப்படத்தில் அவர் ஜேகேயுடன் இணைந்து இடம் பெற வேண்டு மென ஆசைப்பட்டார். எளிதில் செய்ய வேண்டிய - செய்திருக்க கூடிய காரியம் தான். ஜே கேயும் அதை விரும்பி என்னிடம் கேட்டார். எந்த கோபமும் பிணக்குமில்லாமல் ஏனா வேறு சில காரணங்களால் அதை நான் தவிர்த்து விட்டேன். அது ஒன்றே ஒன்றுதான் என் வாழ்வில் அவர் என்னிடம் கேட்ட சிறு சகாயம். இப்படி அதை செய்யாமல் போய்விட்டேனே என்று வாழ்நாள் முழுக்க எத்தனை காரியங்கள் நம்மை வருத்திக்கொண்டிருக் கின்றன.

கே எஸ் இங்க சும்மா நான் நினைச்சு பாக்கிறேன்

கே எஸ். எங்க இருந்தாலும் நீங்க இதுக்காகல்லாம் கவலைப்படாதிங்க கே எஸ். ஒன்றே ஒன்றுதான் உங்களிடம் நான் கேட்கவேண்டும். எந்த நாளில் எப்போது உங்களைப் பார்க்க வந்தாலும் நீங்கள் கை முறுக்கும் தட்டையும் டிக்காஷன் காப்பியுமாக வந்து உபசரித்து பழங்களை புத்தகங்களை கைய ளித்து வாசல் வரை வந்து நின்று வழியனுப்பி போவீர்களே -ஏன் கே எஸ். நாங்கள் உங்களை வழியனுப்ப வகை செய்யாமல் இப்படி போனீர்கள்.


எழுத்தாளர்  வ.ந.கிரிதரன் டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியனின் மறைவின்போது 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு.

அஞ்சலி: கலாநிதி கே.எஸ்.சுப்பிரமணியன்!   - வ.ந.கிரிதரன் -

ஆசிய அபிவிருத்தி வங்கியில் இயக்குநராகப் பணியாற்றியவரும் , எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான திரு. கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். என்னை அதிர்ச்சியடைய வைத்த செய்தி.

கலாநிதி கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களுடன் எனக்கு அண்மையில்தான் அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலம்  தொடர்பேற்பட்டது.

'கொரோனாக் கால ஊரடங்குச் சட்ட அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபயர்த்தவர் திரு. கே.எஸ்.எஸ் அவர்கள்.  அதுவொரு தொகுப்பாக 'Lockdown Lyrics' என்னும் பெயரில் நூலாகவும் வெளியாகியுள்ளது. என் கவிதையொன்றும் , ' கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!' , அத்தொகுப்பில்  இடம் பெற வேண்டுமென்று விரும்பினார்கள்.

எனது  'கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!' என்னும் கவிதை சிறிது நீண்டது. அதனைச் சிறிது சுருக்கி , ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து Lockdown Lyrics என்னும் தொகுப்பு நூலில் வெளியிட்டுள்ளார். கவிதையினைச் சிறிது சுருக்கி வெளியிடுவதற்காக , வெளியிடுவதற்கு முன்னர் எனக்குக் கடிதம் எழுதி என் அனுமதியைக் கோரினார்.

பின்னர் நூல் வெளியானதும் அதனை அறிவிப்பதற்காக மின்னஞ்சலொன்றினை அனுப்பினார். அதில் தமிழக முகவரியினையும் கேட்டிருந்தார். தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய காலத்து நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீராம் விக்னேஸ் (ஆர்.விக்கினேஸ்வரன்) அவர்களின் முகவரியையும் கொடுத்து விட்டேன். அதன்படியே நண்பர் நூலை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.

இங்கு அவரின் புகைப்படத்தையும், என் கவிதையின் நீளத்தை மொழிபெயர்ப்பில் சிறிது குறைப்பதற்காக அனுமதி  கேட்டு எழுதிய கடிதத்தையும் , கூடவே கொரோனாக் கால ஊரடங்கு அனுபவக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு நூலின் அட்டையினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

அதிக அளவில் அவர் இனி மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுவாரென்று எண்ணியிருந்தேன். விரைவில் இவ்விதம் போய்விடுவாரென்று நினைத்திருக்கவேயில்லை.

அவரது மறைவு சடுதியானது. நண்பர்கள் யாருமே எதிர்பார்த்திராததொன்று.  அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


DR.K.S.SUBRAMANIAN - Translator

Dr.K.S.Subramanian (1937) belongs to the Thirunelveli District of Tamil Nadu and presently lives in Chennai. He has Masters Degrees in Physics, History, and Business Management and a Doctorate in Public Administration. He served the Government of India (IRAS) from 1960 to 1975 and the Asian Development Bank from 1975 to 1998, retiring as a Director.

Since his return to India in 1998, he has been involved in literary and social pursuits. He has translated more than 30 Tamil literary works into English. The translations cover 11 novels, 7 novellas, 3 collections of short stories, 7 anthologies of Poetry (including about eighty Sangam Poems). He has also translated a large number of collected essays covering literary and socio-economic themes as also biographical and autobiographical works. He has translated more than 40% of SubramaniaBharathiar’s poetic corpus as a part of the proposed SahityaAkademi publication of the entire works of Bharathi in English translation. His translations have been published by SahityaAkademi, Macmillan, Katha, East-West Books, New Horizon, Tamil University, International Institute of Tamil Studies, Central Institute of Indian Languages, KanaiyazhiPathippagam and others.

He has presented a sizeable number of Papers in Tamil and in English in different fora. These include Papers on eminent creative writers of Tamil such as SubramaniaBharathi,Na.Pichamurthy, Laa.Sa. Rama mirtham, Thi. Janakiraman, Ka.Naa.Subramanyam, Asokamithran, Jayakanthan, VenkatSaminathan, SirpiBalasubra maniam, Erode Thamizhanban and others. The papers also encompass literature – society interface and development – humanism challenges.

He was the compiling editor of Jayakanthan Reader, one of the pioneering efforts in this genre in Tamil. He has collated and brought out seminal articles of the Father of India’s Green Revolution, C.Subramaniam( aBharathRatnaHonouree), published by Bharatiya VidyaBhavan.

Seven volumes of his Tamil articles and Papers have been published, covering literary, social and developmental themes.

He has received a few awards in the field of literary translation. He is a trustee of National Agro Foundation involved in comprehensive rural development, and also a trustee of MOZHI Trust, a resource centre of Tamil language and culture. He is a former member of the Tamil Advisory Board of SahityaAkademi.

DR.K.S.SUBRAMANIAN’S WORKS

BOOKS OF TRANSLATION (PUBLISHED)

    Jaya JayaShankara
    A Man A Home and A World
    Love and Loss
    Go back to Paris
    Sundarakandam
    Once An Actress
    Of Men and Moments
    Rishi Moolam
    Beneath A Banyan Tree
    Jayakanthan’s Reflections
    Dissonance and Other Stories
    Kalaignar’s Essays
    Bharathi’s Economic Ideas
    Memory Mist
    Tamil New Poetry
    Tamil Poetry Today
    Tamil Women Poets
    Sirpi’s Poems
    Umamaheswari’s Poems
    Brick and Sweat (Thilagavathi’s Novel)
    MIL Series _ R.Shanmugasundaram
    Eswara Allah TereNaam
    Asokamitran’s ’Chennai – A Kaleidoscope’
    Tamilanban’s Poems – ‘What the Sun Said Last
    Puviyarasu’s ‘Signature’
    Whither Ganga(Jayakanthan’s)
    .U.V.SaminathaIyer’s ‘Story of My Life’
    Continuum(Modern Tamil Poems in Translation)
    Lockdown Lyrics(Modern Tamil Poems in Translation)
    Culture, Literature, Personalities _ A Collage(Essays)
    Lingering Imprints(Ilampirai’s Poems in Translation)
    Thamizhachi Thangapandian’s Poems in Translation

III EDITING

1. C. S Speaks
2. C.S’S Memoirs _ VOL 3
3. Jayakanthan’s Reader

IV TAMIL

    பாரதி _ சிலபார்வைகள்
    உரத்தசிந்தனைகள்
    சிந்தனைஅலைகள்
    இலக்கியஉலகில்ஒருபயணம்
    இலக்கியஆளுமைகள்
    மரபும்ஆக்கமும்
    அனுபவச்சுவடுகள்
    சிந்தனை ஒன்றுடையாள்




Friday, October 20, 2023

INSIGHT - A BILINGUAL BLOG FOR CONTEMPORARY TAMIL POETRY (aug-sep,2023)

 INSIGHT 

A BILINGUAL BLOG 

FOR 

CONTEMPORARY TAMIL POETRY

2019insight.blogspot.com

August - September 2023




கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம் - T.PANDIARAJU

கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம்
https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY


Yellow Cat in Memory Lane | நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை| T Pandiaraju


ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமாகிறது? முக்கியத்துவம் பெறுகிறது?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தின் நோக்கமும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்?
அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப்பது இயல்பா? இருக்கவேண்டியது அவசியமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவது சரியா? அவரு டைய படைப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அள வில் முக்கியத் துவம் தந்து உருவாக்கப் பட வேண்டுமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேசவேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர்கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?
சமீபத்தில் காணக்கிடைத்த ஆவணப்படங்கள் இரண்டு இவ்வாறான பல கேள்விகளை மனதில் கிளர்த்தின.
1. கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம்
2. கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம்
கீழே கவிஞர் வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்பட லிங்க் தரப்பட்டுள்ளது.
பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தால் அது படமெடுத்தவர்களுக்கு உற்சாகமளிப்பதாய் அமையும்.

கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம்

  கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம்

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமாகிறது? முக்கியத் துவம் பெறுகிறது?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத் தின் நோக்கமும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்?

அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப் பது இயல்பா? இருக்கவேண்டியது அவசியமா?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத் தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசு வது சரியா? அவருடைய படைப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட வேண்டுமா?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத் தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேசவேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர்கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?

சமீபத்தில் காணக்கிடைத்த ஆவணப்படங்கள் இரண்டு இவ்வாறான பல கேள்விகளை மனதில் கிளர்த்தின.

1. கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம்

2. கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப் படம்
கீழே கவிஞர் வைதீஸ்வரன் பற்றிய ஆவணப் பட லிங்க் தரப்பட்டுள்ளது.

பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தால் அது படமெடுத்தவர்களுக்கு உற்சாகமளிப் பதாய் அமையும்.
.........................................................................................................

கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ் வரன் ஆவணப்படம் - குவிகம் தயாரிப்பில்

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s



https://www.youtube.com/watch?v=Rn8W3FgiueA


கவிஞர் வைதீஸ்வரனின் உரை. ஒரு வருடத் திற்கு முன்னால் அவருடைய பிறந்தநாளை யொட்டி குவிகம் இலக்கிய அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த நிகழ்வில்அவரைப் பற்றிய ஆவணப்படத் திரையி டலுக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை


................................................................................................


கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் - குவிகம்

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s