Tuesday, August 15, 2023

நாடு, அதை நாடு

நாடு, அதை நாடு
https://www.youtube.com/watch?v=2aRhwIZWKy4


லதா ராமகிருஷ்ணன்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
முன்பு எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் நண்பரான உளவியல் ஆலோசகர் (பெயர் மறந்துவிட்டது வருத்த மாக இருக்கிறது) ஒருமுறை மேடையில் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் கதாநாயகனான் உளவியல் மருத்துவர் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகியின் நிலையைத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ளாத கண்ணிய மான இளைஞ ராகக் காண்பிக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்து அதற்காகவே அந்தப் படத்தைப் பலமுறை பார்த்த தாகச் சொன்னார்.
அதேபோல்தான் இந்தக் காட்சியும் எனக்கு மிகவும் பிடிக்கும். நாடு பற்றிப் பாடும் இருவரில் ஒருவர் பார்வைக் குறைபாடுடையவர். இருவரும் சமமாக நாட்டைப் பற்றி அக்கறையோடும் பெருமையாகவும் பாடுகிறார்கள்.
சுற்றிலும் நிற்கும் ஆண்கள் அந்தப் பெண்ணைக் காமப்பார்வை பார்க்கவில்லை.
இதெல்லாம் எனக்கு இந்தத் திரைப்படக் காட்சியின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகத் தோன்றின; தோன்று கின்றன.
கண்ணதாசன் எத்தனை எளிமையாக நாடு குறித்து, நாட்டுப்பற்று இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து எழுதியிருக்கிறார்! எம்.எஸ்.விசுவநாதனின் எத்தனை செறிவான இசை! கூடவே, டி.எம்.எஸ் , பி.சுசீலாவின் காலத்தால் அழியாத குரல்கள்! எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி யின் பிரசன்ன முகங்கள்!

நாடு - அதை நாடு
..............................................................................................
எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்
படம் : நாடோடி (1966இல் வெளிவந்தது)
இசையமைத்தவர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். சௌந்திரராஜன்
நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
அதை நாடாவிட்டால் ஏது வீடு? ஓஹோஹோ
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு

நாடு அதை நாடு அதை

நாடாவிட்டால் ஏது வீடு? 

No comments:

Post a Comment