Saturday, September 12, 2020

ஓட்டைப்பானை (பண்டைய சீனத் தத்துவஞானியும் எழுத்தாளருமான Lao Tzu வின் குட்டிக்கதைகளில் ஒன்று).

 ஓட்டைப்பானை

(பண்டைய சீனத் தத்துவஞானியும் எழுத்தாளருமான 

Lao Tzu வின் குட்டிக்கதைகளில் ஒன்று).



தமிழில் லதா ராமகிருஷ்ணன்

(*முதல் வரைவு)


மூதாட்டி ஒருவரிடம் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. ஒரு கழியின் இரு முனைகளில் இரண்டும் கட்டப்பட்டு அந்த மூதாட்டி கழியைத் தன் தோள்களில் சுமந்துகொண்டிருப்பார். இவ்வாறு தினமும் தன் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவருவார்.

அந்தப் பானைகளில் ஒன்று அப்பழுக்கற்றதாக, தன்னுள்ளிருக்கும் தண்ணீரை முழுமையாகக் கொண்டுவந்து சேர்க்கும்.

இன்னொரு பானையில் ஒரு ஆழமான விரிசல் இருந்ததால் அதிலிருந்து தண்ணீர் கசியும். நீரோடை யில் தண்ணீர் மொண்டு பானைகளில் ஊற்றி நீண்ட தூரம் நடந்து அந்த மூதாட்டி வீட்டை அடையும் போது இந்தப் பானையில் பாதியளவு தண்ணீர் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

அப்பழுக்கற்ற அந்த முதல் பானைக்குத் தன்னைப் பற்றி மிகவும் பெருமை. ஆனால், பாவம் அந்த ஓட்டைப்பானைக்குத் தன்னைப் நினைத்து மிகுந்த வருத்தமும், அவமானமும் ஏற்பட்டது. முழுமை யாகத் தண்ணீரைக் கொண்டுவந்துசேர்க்க முடியாத தற்காக அது தன்னையே நொந்துகொண்டது.

இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்தபின், தன்னால் முழுமையாகத் தண்ணீரைக் கொண்டு சேர்ப்பதில் வெற்றிபெறவே முடியாத தோல்வியில் துவண்டு அந்த ஓட்டைப்பானை தன்னை சுமந்து கொண்டிருக் கும் மூதாட்டியிடம் ஒருநாள், “என்னுடைய ஒரு பக்கத்தில் இருக்கும் ஓட்டை காரணமாக தண்ணீர் நீங்கள் வீட்டை அடையும் வரை ஒழுகிக்கொண்டேயிருக்கிறது. எனக்கு என்னை நினைத்து அவமானமாக இருக்கிறது” என்று வருந்திக் கூறியது.

அந்த மூதாட்டி கனிவோடு புன்னகைத்து. “நான் செல்லும் வழியில் உன் பக்கமிருக்கும் பகுதியில் மட்டும் பூக்கள் இருப்பதையும் இன்னொரு பானை யின் பக்கமுள்ள சாலைப்பகுதியில் இல்லை என்பதையும் நீ கவனித்திருக்கிறாயா? எனக்கு உன்னிடமுள்ள குறை தெரியும். எனவே, நீயுள்ள பக்கமாக உள்ள சாலையோரத்தில் நான் பூக்களின் விதைகளை நட்டேன். தினமும் நாம் வீடு திரும்பும் போது நீதான் அந்தச் செடிகளுக்கு நீரூற்றி அவற்றை வளரச் செய்தாய். இரண்டு வருடங்களாக நான் இந்த அழகிய மலர்களால் என் மேஜையை அலங்கரிக்க முடிந்தது. என்னுடைய நண்பர்கள், அண்டைவீட்டா ருக்கு மலர்களைக் கொடுத்து மகிழ முடிந்தது. நீ இப்போது இருப்பதுபோல் இல்லாமல் வேறுவித மாக இருந்திருப்பின் எங்கள் இல்லங்களிலும் வாழ்விலும் கனிவார்ந்த ஒளிர்வை சாத்தியமாக்க முடிந்திருக்காது. இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த அழகிய மலர்கள் எங்களுக்குக் கிடைத்திருக்காது” என்றார்.




ஓட்டைப்பானை கதையை முன்வைத்து 

மொழிபெயர்ப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில.


நாம் பேசும்போதெல்லாம் மொழிபெயர்ப்பு நடக் கிறது என்று படித்திருக்கிறேன். ஒரே மொழியைப் பேசுபவர்களுக்கிடையிலே யும்கூட மொழி ஒரேவித மாகப் பேசப்படுவதில்லை.

பெரியவர்களிடம் பேசப் பயன்படுத்தும் சொற்களை அதே அர்த்தங்களை, பொருட்களைச் சுட்டும்போதும் அதேயளவாய்ப் பேசுவதில்லை நாம்.

எழுதும்போதும். Formal, Informal மொழிவழக்குக ளுக்கு அப்பால் வேறு பல வித்தியாசங்களும் உள்ளன.

இலக்கு வாசகர்கள், ஒரு பிரதி மொழி பெயர்க்கப்படு வதிலுள்ள நோக்கம், உள்நோக்கம் என பலவற்றைப் பொறுத்து மொழிபெயர்ப்பின் நடை மாறுபடுகிறது என்றும் படித்திருக்கிறேன்.

இதை இலக்கியப் பிரதிகளுக்குப் பொருத்தமுடியுமா தெரியவில்லை.

பள்ளி, கல்லூரிகளில் non-detail பாடங்களில் காப்பி யக் கதைகள் சுருக்கப்பட்டுத் தருவதை உதாரண மாகக் காட்ட முடியுமா தெரியவில்லை.

எழுத்தறிவு இயக்கத்தில் படிப்பவர்களுக்குத் தரப் படும் பெரிய எழுத்துக் கதைகளைக் குறிப்பிடலாம்.

காப்பியங்களைக் குழந்தைக் கதைகளாகத் தருவ தைக் குறிப்பிட முடியும்.

ஆனால், அது குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு.

முந்தைய பதிவில் நான் தந்துள்ள என் மொழி பெயர்ப்புக் கதையைக் குழந்தைகளுக்கு எழுதினால் எப்படியிருக்கும்?



...................................................................................................
ஓட்டைப் பானை

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார்.

அவர் தினமும் தூரத்திலிருந்த ஓடைக்குச் சென்று தண்ணீர் கொண்டுவருவார்.

அவரிடம் இரண்டு பானைகள் இருந்தன.

ஒன்றில் சிறிய ஓட்டையிருந்தது. அதில் கொண்டு வரும் தண்ணீர் வழியெல்லாம் ஒழுகும். வீட்டிற்குப் போய்ப் பார்த்தால் அதிலிருந்த தண்ணீர் பாதி காலியாகியிருக்கும்.

இன்னொரு பானையிலி ருந்த தண்ணீர் அப்படியே இருக்கும். அந்தப் பானைக்கு ஒரே பெருமை.

ஓட்டைப் பானைக்கோ அவமானமாயிருக்கும். அழுகை அழுகையாய் வரும்.

ஒருநாள் வரும் வழியில் ஓட்டைப்பானை பாட்டி யிடம், “என்னால் ஒருநாளும் தண்ணீரை முழுவது மாகக் கொண்டுவந்துசேர்க்க முடியவில்லை. நான் நல்ல பானை இல்லை”, என்று வருத்தத்தோடு சொன்னது.

அதைக் கேட்ட பாட்டி அன்போடு சிரித்துக்கொண்டே, ”வரும் வழியில் நீ தொங்கும் பக்கத்தில் மட்டும் சாலையோரத்தில் பூக்கள் பூத்திருக்கின்றன பார்த்தாயா? நான் தான் அங்கே பூச்செடிகளை நட்டேன். உன் ஓட்டை வழியாக வழிந்த தண்ணீர் தான் அந்தப் பூச்செடிகளை வளர்த்தது. அந்தப் பூக்களால் என் வீட்டை அலங்கரித்தேன். என் நண்பர்கள், உறவுகள், பக்கத்துவீட்டுக்காரர் களுக் கெல்லாம் அந்தப் பூக்களைக் கொடுத்து மகிழ்ந்தேன். அவர்களும் மகிழ்ந்தார்கள். எத்தனை பேருக்கு உன்னால் மகிழ்ச்சி கிடைத்தது பார்த்தாயா? நீ இப்படியிருப் பதால்தான் இதெல்லாம் நடந்தது. எனவே, இனிமேல் நீ வருத்தப்படவே கூடாது, சரியா?” என்று கூறினார்.

பாட்டி கூறியதைக் கேட்டு ஓட்டைப்பானைக்கு ஒரே சந்தோஷம்!

.................................................................................................
பி.கு: (1) பொதுவாக குழந்தைகளுக்கான கதைகளில் பாட்டி அவள் என்று குறிப்பிடப்படுவதுதான் வழக்கம் என்றாலும் அவர் என்ற வார்த்தையை பழக்கப்படுத் துவது நல்லது என்று தோன்றுகிறது.

(2) குழந்தைகளுக்கான கதை என்றால் இதைவிட எளிய நடையில் எழுதும்படி சொல்லக் கேட்டதே அதிகம். உரைநடை பேச்சுவழக்கில் இருந்தால் நல்லது எனக் கூறப்படும்.


The Cracked Pot


An elderly Chinese woman had two large pots. Each pot hung on the ends of a pole, which she carried across her shoulders. Every day, she used this device to carry water to her home.


One of the pots was perfect and always delivered a full portion of water. The other had a deep crack in it and leaked. At the end of the long walk from the stream to the house, the cracked pot arrived only half full.

For a full two years this situation occurred daily, with the woman bringing home only one and a half pots of water. Of course, the perfect pot was proud of its accomplishments. But the poor cracked pot was ashamed of its own imperfection and miserable that it could only do half of what it had been made to do.

After two years of what it perceived to be bitter failure, the cracked pot spoke to the woman one day by the stream, saying, “I am ashamed of myself because this crack in my side causes water to leak out all the way back to your house.”

The old woman smiled and replied, “Did you notice that there are flowers on your side of the path, but not on the other pot’s side? I have always known about your flaw, so I planted flower seeds on your side of the path, and every day while we walked back home you watered them and made them grow. For two years, I have been able to pick these beautiful flowers to decorate the table and give to my friends and neighbors. Without you being just the way you are, there would not have been this special beauty to grace our homes and lives.”

No comments:

Post a Comment