Thursday, May 2, 2019

படைப்பாளிகள் பரபரப்புச் செய்தியாளர்கள் அல்லர்


படைப்பாளிகள் பரபரப்புச் செய்தியாளர்கள் அல்லர்
லதா ராமகிருஷ்ணன்


யார் சார்பாக இந்த வேண்டுகோளை வைக்கிறேன், வைக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும். இந்த வேண்டுகோளை முன்வக்கத் தோன்றுகிறது.

மனிதரை மனிதர் கேவலம் செய்வது மதிப்பழிப்பது, மனிதத்திற்கு எதிரான செயல். இதில் மாற்றுக்             கருத்தில்லை. இப்படி எங்கு நடந்தாலும் அதை எதிர்க்கவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யவேண்டும். இதில் மாற்றுக்கருத் தில்லை.
ஆனால், எழுத்தாளர்கள் பலரும் வெளிப்படை யாகவே குறிப்பிட்ட கட்சிகளுக்கு, குறிப்பிட்ட அரசியல்வாதி களுக்கு issue-based ஆதரவு என்றில் லாமல் lock, stock and barrel என்ற ரீதியில் தங்கள் ஒட்டுமொத்தமான ஆதரவை பலவகையிலும் வெளிப்படுத்தி வரும் நிலையில், எழுத்தாளர்கள் குறிப்பிட்ட அரசியல்கட்சியின் கொள்கைப்பரப்பாளர் களாகப் பணியிலமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் . எந்த வொரு விஷயத்திற்கும் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதாய் படைப் பாளிகள் அணிசேரும் போது அதற்கு உடனடியாகநிபந்தனையற்றஆதரவு தர இயலாமல் போகிறது.

(இப்படி கட்சி சார்ந்து இயங்கும் படைப்பாளிகள் கட்சிப் பின்புலம் இருக்கும் துணிச்சலில் எதிர் தரப்பினரை, அவர்கள் நம்பிக்கைகளை எத்தனை கேவலமாகப் பழித்துவருகிறார்கள், எத்தகைய அராஜக வார்த்தை களால் வன்மமும் வெறுப்பும் உமிழும் கருத்துகளைஅறிவார்த்தப் பேச்சுகளாய் பதிவேற்றிவருகிறார்கள் என்பதை தனியாக தகுந்த ஆதாரங்களோடு எழுத முடியும்)

தவிர, குறிப்பிட்ட ஒரு அநியாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவென நடத்தப்படும் கூட்டங்களில் பெரும் பாலும் வேறு பல விஷயங்களையும் கோர்த்து ஒரு package deal ஆக எதிர்ப்பு காட்டுவதும்(அப்படி எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு கூட்டத்தில் கலந்துகொள்வோர் ஆளாக்கப்படுவதும்) வழக்கமாக இருக்கிறது.

எழுத்தாளர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள் என்றாலும் அதுமட்டும்தானா? அவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். நிதானமாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர முடிந்தவர்கள். சமூகத்தில் அமைதி நிலவத் தங்களாலானதைச் செய்யவேண்டி யவர்கள்.

ஒரு கட்சியில் படைப்பாளிகள் சேர்ந்தால் அதைக் கண்டனம் செய்வது, கேலி பேசுவது, அதுவே இன்னொரு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டால் அந்தப் படைப்பாளிகளை பாராட்டுவது, அல்லது கண்டுகொள்ளா மல் விடுவது எப்படி சரியாகும், தெரியவில்லை. அந்த அளவுக்கு இலட்சியார்த்த அரசியல் கட்சி நம்மிடையே இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

இது போதாதென்று பொன்பரப்பி சம்பவத்தில் நடுநிலை யாக நடந்துகொள்வதான தோரணையில் சில எழுத்தாளர் கள் வெளியிடும் வன்மம், வெறுப்பு நிறைந்த காணொளிப் பதிவுகள் தமிழகத்தில் பெரிய கலவரத்தைத் தூண்டுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இந்தக் காணொளிகள் எல்லாவற்றிலும் எதிர் தரப்பைச் சேர்ந்த பெண்கள் அத்தனை கொச்சையாக சாடப்படு கிறார்கள். இதற்காகவே இத்தகையோரை கைதுசெய்ய வேண்டும். காது கொடுத்துக் கேட்க முடியாத வசைகள். அத்தனை கொச்சையானவை.

குற்றத்திற்குத் துணைபோவதும் குற்றமே என்பார் கள். அதன்படி பார்த்தால் பெண்களை அவமதிக்கும் இத்தகைய வசைகள் அடங்கிய காணொளிகளைப் பதிவேற்றுபவர் களோடு அவர்களைப் பற்றிப் புகார் செய்யாமல் அந்தக் காணொளிகளை நியாயவான் களாகத் தங்கள் டைம்-லைனில் பகிர்பவர்களும் கண்டிக்கத்தக்கவர்களே.

பெண்ணை இழிவுபடுத்தும் அசிங்க அசிங்கமான பேச்சுகள் கொண்டதாய் இருதரப்பிலிருந்துமான காணொ ளிகளைப் பகிரும் படைப்பாளிகள்எத்தனை அசிங்க மான பேச்சு; மிகவும் கண்டிக்கத்தக்கதுஎன்று அந்தப் பதிவுக்குக் கீழே ஒரு கருத்து ரைக்கக்கூட தயாராக இல்லை. ’உள்ளதை உள்ளபடியேநமக்குக் காட்டுவ தான தோரணையில் அந்த அராஜக, சமூகத்தில் சாதிக்கலவரத்தை தீவிரமாக்கக்கூடிய காணொளிகளைப் பதிவேற்றிவிடுவது அறிவார்த்தமான செயலா? இவர்களே நாளை சமூகத்தில் பெண்ணின் இழிநிலையைக் குறித்தும் விசனமாகவும் ஆத்திரத்தோடும் பேசுவார்கள்.

யாரோ சிலர் வெளியிடும் அந்தக் காணொளிகளை எழுத்தாளர்கள் எதற்கு வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்களுடைய இந்தச் செயல்களால் பாதிக்கப்படப்போவது சாமான்ய மக்கள் தான். எந்த சாதியானாலும் பதவி, பணம் இருந்தால் அவர்களை யாரும் தாக்கப்போக மாட்டார்கள். அவர்க ளுக்கு வேண்டிய பாதுகாப்பு அரண்கள் அமைக்கப் பட்டிருக்கும், அமைக்கப்படும்.

படைப்பாளிகளுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை யிருந்தால் இந்தக் காணொளிகள் குறித்து புகார் தரவேண்டும். இந்த வன்மமும், வெறுப்பும் நிறைந்த காணொளிகள் யூ-டியூப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களி லிருந்து அகற்றப்பட ஆவன செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு தாங்களும் அவற்றையே தங்கள் டைம்-லைனில் பதிவேற்றிக் கொண்டிருந்தால் எப்படி?

சிலருடைய டைம்லைன்களில் பார்த்து அதிர்ந்து போய் அவற்றை அகற்ற முயன்று, அவை குறித்து புகாரளிக்க முயன்று முடியாததால் இதை இங்கே தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment