Thursday, May 2, 2019

கவிதையும் வாசிப்பும் -5 கவிஞர் தர்மினியின் ஒரு கவிதையை முன்னிறுத்தி.......


கவிதையும்  வாசிப்பும் -5
கவிஞர் தர்மினியின் ஒரு கவிதையை முன்னிறுத்தி.......
லதா ராமகிருஷ்ணன்
(*மறுத்தோடி இணைய இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை)

கவிஞர்  தர்மினி

பிறந்த இடம் இலங்கை (அல்லைப்பிட்டிதற்போதைய வாழ்விடம்:  ஃபிரான்ஸ்90களிலிருந்து கவிதைகளை எழுதிவருபவர்.வெளியாகிய கவிதைத் தொகுப்புகள்:சாவுகளால் பிரபலமான ஊர் ( 2010)இருள்மிதக்கும் பொய்கை ( 2016) 



வானம் நெருப்பைப் பொழிந்தததைப் போலவே
நீரையும் பொழிகிறது.
நோவாவின் படகில் தப்பித்த ஜீவராசிகள் 
உலகைப் புதிதாக்கினர் என்றான் 
இனி நீரால் உலகை அழிக்கமாட்டேன் என்றவன்.
நோவா விட்ட காகம் திரும்புமா? திரும்பாதா?
வீடுகள் அழிவு
உணவு,மின்சாரமில்லை
வீதிகள் மூடி
அயலவருக்கு அயலாரே உதவி
கொள்ளக் காசிருந்தும் விற்க யாருமில்லை
உடுத்த உடையன்றி மற்றது அற்றவர்
தப்பும் போது தவறிப்போனவர்கள்
பசித்த பிள்ளைக்கு தீர்க்க வழியில்லாத் துன்பம்
இறந்தவர்களோடு வாழுதல்
இரக்கப்பட்ட மனிதர்கள்
மருத்துவக்குழுவோடும் படகுகளோடும் 
கடலில் கப்பல் நிற்கிறது
வானம் நெருப்பைப் பொழிந்தததைப் போலவே
நீரையும் பொழிகிறது !

ரு கவிஞரைத் தொடர்ந்து வாசித்துவரும்போது அவருடைய கவித்துவத்தின் குறிப்பிட்ட சில அம்சங்கள், போக்குகளை இனங்காண முடியும். அப்படி அடையாளங்காணவேண்டியது அவசியமா என்பதும், அப்படி அடையாளங்கண்ட அம்சங்களோடு அந்தக் கவிஞருடைய ஒவ்வொரு தனிக்கவிதையையும் அணுகவேண்டியது அவசியமா என்பதும் பொருட்படுத்தத் தக்க கேள்வியே. அதேசமயம், அந்தக் கவிஞரின் ஒரு சில கவிதைகளைப் படித்துவிட்டாலே இந்த அம்சங்கள் நமக்குப் பிடிபட்டுவிடும் என்பதும் உண்மை.

ஒரு கவிஞர் வெவ்வேறு வகையான கவிதை வகைமைகளைப் பரிட்சார்த்த ரீதியில் கையாண்டு பார்க்கலாம். பேச எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்கு ஏற்ப கவிதையாக்கத்திற்கு அவர் பிரக்ஞாபூர்வமாகவோ, தன்னையுமறியாமலேயோ ஒரு குறிப்பிட்ட வகை கவிதை நடையைத் தெரிவுசெய்துகொள்ளலாம். ஒரு வாசகராகத் தனக்கு நிறைவளிக்கும் கவிதை வகைமையையே, கவிதைநடையையே ஒரு கவிஞராக அவர் கடைப்பிடிக்க முயல்வார் என்று சொல்லலாமாதெரியவில்லை. ஆனால், வாசகராக ஒரு கவிஞருக்கு நிறைவளிக்கும் கவிதைப்போக்கையே கவிஞராகவும் அவர் கையால விழைவார், வெற்றிகரமாகக் கையாள்வார் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.

ஒரு வாசகராக கவிஞர் தர்மினிக்குப் பிடித்த கவிதைநடை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவருடைய கவிதைகளை வாசிக்கும் வாசகராக அவருடைய கவிதையில் எனக்குப் பிடிபடுவது underplay of emotions. வலியோ பரவசமோஅவர் கவிதைகள் அவற்றை உரத்த குரலில் வெளிப்படுத்துவதில்லை. கவிதைகளில் மிகையுணர்ச்சி, அலங்கார வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றை ஒரு கவிஞராக அவர் பிரக்ஞாபூர்வமாகவே தவிர்ப்பதாகத் தோன்றுகிறது. இதை நவீன தமிழ்க்கவிதையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகக் கூடக் கூற முடியும் என்றாலும் தற்காலத் தமிழ்க் கவிதைகள் எல்லாவற்றிலுமே இந்த அம்சம் செறிவாக இடம்பெற்றிருக்கிறது என்று சொல்லமுடியாது.

கவிதையில் எந்தவொரு விஷயத்தையும் அகல்விரிவாக நீட்டி விரித்துப் பேசும்போது அது உரைநடையாகிவிடும்; கதைசொல்லலாகிவிடும் (சமயங்களில் வறண்ட உரைநடையாகிவிடும், அலுப்பூட்டும் கதைசொல்லலாகிவிடும்) அபாயத்திற்குள்ளாகிறது. அதேபோல்தான், படிமம், குறியீடு, உவமான உவமேயம் எல்லாம் மிகவும் கவனமான தேர்வும் இடம்பொருத்தலுமாக அமைவதும் ஒரு கவிதை அடர்செறிவாக அமைய முக்கியக் காரணமாகிறது.

மாஜிக்கல் ரியலிஸம் சம்பந்தமாகப் படித்த போர்ஹேயின் வாசகம் என்று நினைவுஒரு கதையில் ஒரு magical அம்சம் மட்டுமே இடம்பெறவேண்டும் என்றும் மற்ற எல்லாமும் நிஜ வாழ்க்கையின் அம்சங்களாகவே இருக்கவேண்டும் என்றும் அப்போதுதான் அந்த  magic கதையை செறிவாக்கும் என்றும் எடுத்துரைக்கும் வாசகம் அது. அவ்வாறே ஒரு கவிதையில் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை படிமம், குறியீடு என்று வந்துகொண்டே யிருந்தால் அவை கவிதையை வலுப்படுத்தும் என்ற நினைப்பில் அப்படி நிறைய உவமான, உவமேயங்களை, படிமங்கள், குறியீடுகளைப் பயன்படுத்துவதுண்டு. அப்படிச் செய்வது பல நேரங்களில் வாசகரைக் குழப்பி கவிதையோடு ஒன்றவிடாமல் செய்துவிடுவதாக அமைந்துவிடும்.

மேலே தரப்பட்டுள்ள கவிஞர் தர்மினியின் கவிதையின் ஆரம்பவரிகள் இவை:

வானம் நெருப்பைப் பொழிந்தததைப் போலவே
நீரையும் பொழிகிறது.
நோவாவின் படகில் தப்பித்த ஜீவராசிகள் 
உலகைப் புதிதாக்கினர் என்றான் 
இனி நீரால் உலகை அழிக்கமாட்டேன் என்றவன்.
நோவா விட்ட காகம் திரும்புமா? திரும்பாதா?

அடுத்துவரும் வரிகளை உரைநடையிலிருந்து கவிதையாக்கும், இந்தக் கவிதையை  அடர்செறிவான கவிதையாக்கும் வரிகள் இவை. தர்மினி புலம்பெயர்ந்த தமிழ்க்கவிஞர். அவர் கவிதைகளில் ஈழப்போராட்டங்கள், உக்கிரமான போர், பல்லாயிரக்கணக்கான உயிர்களின் மரணம், உறவுகளின் பிரிவு, இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பாதிப்புகள், அகபுற இழப்புகள், புலம் பெயர்ந்த நிலத்தில் மூச்சுத்திணறவைக்கும் அந்நியமாதல் உணர்வு, இத்தகைய எல்லா பாதிப்புகளிலும், இழப்புகளிலும் பெண்ணினம் தாங்கவேண்டியிருக்கும் கூடுதல் ரணங்கள், எல்லாவற்றையும் கடந்துபோகும் காலம், காலமும் வாழ்க்கையும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்திருக்கும் நிலை, உலகாயுத வாழ்வோடு நாம் வாழும் மனரீதியான இணைவாழ்க்கை, இரண்டும் ஒன்றையொன்று இட்டுநிரப்பும், ஒன்றுக்கொன்று வளம் சேர்க்கும் தருணங்களும் உண்டு; ஒன்றையொன்று மூச்சுத்திணறவைக்கும், மோதிச்சாய்க்கும் தருணங்களும் உண்டு.

இங்கே கவிதை விரித்துக்காட்டும் இயங்கியல் நிலை எத்தகையது! முழுமுற்றானதொரு கையறுநிலை மிக இறுக்கமாக, மிகக் குறைந்த வார்த்தைகளோடு, வெறுமையான என்று சொல்லத்தக்கதொரு உள்ளடங்கிய குரலில் இங்கே முன்னிறுத்தப்படும் காட்சிகள் வாசிக்கும் மனதை உறையவைக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

வீடுகள் அழிவு
உணவு,மின்சாரமில்லை
வீதிகள் மூடி
அயலவருக்கு அயலாரே உதவி
கொள்ளக் காசிருந்தும் விற்க யாருமில்லை
உடுத்த உடையன்றி மற்றது அற்றவர்
தப்பும் போது தவறிப்போனவர்கள்
பசித்த பிள்ளைக்கு தீர்க்க வழியில்லாத் துன்பம்
இறந்தவர்களோடு வாழுதல்

/கொள்ளக் காசிருந்தும் விற்க யாருமில்லை/ , / உடுத்த உடையின்றி மற்றது அற்றவர்/, / தப்பும்போது தவறிப்போனவர்கள்/ , /பசித்த பிள்ளைக்கு தீர்க்க வழியில்லாத் துன்பம்/, /இறந்தவர்களோடு வாழுதல்/

தப்பும்போது தவறிப்போனவர்கள்வழிதவறி காணாமல், பிரிந்துபோய்விட்டவர்கள், தப்பும் முயற்சியில் இறந்துவிட்டவர்கள்பிள்ளைக்கு பசிதீர்க்க முடியாத துன்பம் பிள்ளைக்கு மட்டுமா, அது யார் பொறுப்பில் உள்ளதோதாயோ, தகப்பனோ, மாமனோ, பாட்டியோஅந்த நபருக்கு அது எத்தனை பெரிய துன்பம்….. ‘இறந்தவர்களோடு வாழுதல்பிணங்கள் அருகிலிருக்க அங்கேயே உயிர்த்திருத்தல், நடந்த கொடூரங்களைப் பார்த்துப் பார்த்து சவமாகிவிட்டவர்களோடு வாழ்தல்இவையெல்லாம் ஆறா ரணங்களல்லவா?

அடங்கிய குரலில் இவை வெளிப்படும் விதமே எழுதும்போது கவியின் மனம் வடித்த உதிரத்தை, அவர் விழிகளிலிருந்து கசிந்திருக்கக்கூடிய அல்லது வழிந்திருக்கக்கூடிய கண்ணீரை வாசிப்போர் கண்களுக்கும் கொண்டுவந்து சேர்க்கிறது.

இந்தக் கவிதையில் எங்குமேஒரு மானுட துயரத்தை நான் எப்படி எழுதுகிறேன் பார்என்ற சுயதம்பட்டக் குரலைக் கேட்கமுடியவில்லை. இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், தான் நேரில் கண்ட, நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மானுடத்துயரை, போரின் பாதிப்புகளை அவர் தன் எழுத்தில் சுய ஆதாயத்திற்காகக்கடைவிரிக்கவில்லை. தம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளில் அப்படிக்குளிர்காயும்படைப்பாளிகள் உண்டுதானே. அது அவர்களுடைய செயல்பாடுகளில் அம்பலமாகிவிடும்; இல்லையென்றால் அவர்களது கவிதைகளே அம்பலமாக்கிவிடும்.

அந்தப் பேரழிவைப் பேசும் கவிதை நோவாவை உள்ளடக்கியிருப்பது எதற்காக என்ற கேள்விக்குத் தேர்ந்த வாசகர்களுக்கு பதில் கிடைத்துவிடும். நோவா என்ற தொன்மம் தெரிந்தவர்களால் இந்தக் கவிதையில் நோவாவின் படகும், காகமும், நோவாவின் கூற்றும் இடம்பெறுவதன் மூலம் கூடுதலான அர்த்தங்களைப் பெறமுடியும். நோவா குறித்து விக்கிபீடியா கூறுவது இது:

Noah's Ark (Hebrew: תיבת נח; Biblical Hebrew: Tevat Noa)[Notes 1] is the vessel in the Genesis flood narrative (Genesis chapters 6–9) through which God spares Noah, his family, and examples of all the world's animals from a world-engulfing flood.[1] The story in Genesis is repeated, with variations, in the Quran, where the ark appears as Safina  (Arabic: سفينة نوح "Noah's boat").

The story of the flood closely parallels the story of the creation: a cycle of creation, un-creation, and re-creation, in which the ark plays a pivotal role.[25] The universe as conceived by the ancient Hebrews comprised a flat disk-shaped habitable earth with the heavens above and Sheol, the underworld of the dead, below.[26] These three were surrounded by a watery "ocean" of chaos, protected by the firmament, a transparent but solid dome resting on the mountains which ringed the earth.[26] Noah's three-deck ark represents this three-level Hebrew cosmos in miniature: the heavens, the earth, and the waters beneath.[27] In Genesis 1, God created the three-level world as a space in the midst of the waters for humanity; in Genesis 6–8 (the flood narrative) he fills that space with waters again, saving only Noah, his family and the animals with him in the ark.[25]

In Genesis 8:6-7 we read, “At the end of forty days Noah opened the window of the ark that he had made and sent forth a raven. It went to and fro until the waters were dried up from the earth.” The “40 days” here is after the tops of the mountains were visible (verse 5), over seven months after the flood began. A raven was released and apparently never returned. No reason is provided regarding why a raven was selected rather than another bird. However, a raven can eat carrion and would feed off dead animals in the water. A dove, on the other hand, would return to its point of origin if no land was found.

Noah sent a dove in
 Genesis 8:8-9: “Then he sent forth a dove from him, to see if the waters had subsided from the face of the ground. But the dove found no place to set her foot, and she returned to him to the ark, for the waters were still on the face of the whole earth. So he put out his hand and took her and brought her into the ark with him.” The dove returned with no indication that a place had been found to alight.

/வானம் நெருப்பைப் பொழிந்தததைப் போலவே / நீரையும் பொழிகிறது./ என்ற கூற்றும்,
/நோவாவின் படகில் தப்பித்த ஜீவராசிகள் / உலகைப் புதிதாக்கினர் என்றான் 
இனி நீரால் உலகை அழிக்கமாட்டேன் என்றவன்/ என்ற கூற்றும் குறிப்பாக தன் நாடு, மக்கள் குறித்தும், பொதுவான அளவில் மானுடம் உய்யவுமான  எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். அடுத்த வரி, என்னளவில் கவிதையின் முத்தாய்ப்பு வரியாகக் கொள்ளத்தக்கது:

நோவா விட்ட காகம் திரும்புமா ? திரும்பாதா?

ஊழிப்பிரளயத்தின் பின் நோவா முதலில் அண்டங்காக்கையை பறக்கவிட்டதாகவும், பின் புறாவைப் பறக்கவிட்டதாகவும், அண்டங்காக்கை வெள்ளம் முழுவதுமாக வடியும் வரை அப்படியும் இப்படியுமாகப் பறந்ததாகவும், அது திரும்பவில்லை எனவும், பொதுவாக அந்த வகை காகம் இறந்த உடலங்களைத் தின்பது எனவும் விக்கிபீடியாவில் விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், இந்தத் தொன்மம் பற்றி அதிகம் தெரிந்தவர்களால் இந்தக் கவிதையின் குறிப்புணர்த்தலை மேலும் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.  ஒரு கவிதை வாசகரிடம் தாக்கம் ஏற்படுத்தும்போது அந்த வாசகர் அந்தக் கவிதையில் இடம்பெறும் வார்த்தைகள், படிமங்கள், குறியீடுகளுக்கான அர்த்த சாத்தியப்பாடுகளை நோக்கிச் செல்லத் தொடங்குகிறார்.

இந்தக் கவிதையில் நோவா யார்? அல்லது என்ன? பிரளயம் எது? நோவா பறக்கவிட்ட காகம் திரும்புமா? என்று? இது நாடு திரும்புதலைக் குறிக்கிறதா? ஈழத்துக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதா?

இந்தக் கவிதை யாரையும் தூற்றவில்லை; குற்றஞ்சாட்டவில்லை. ஒரு பேரழிவின் பெருந்துயரை அந்தத் துயரிலிருந்து மீள்வதற்கான எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது என்று சொல்லலாமா? ஒரு நல்ல கவிதை சொல்ல நினைப்பதையெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிடுவதில்லை. வாசக பங்கேற்பிற்கும் அது இடம் தருகிறது. ஒரு நல்ல கவிதையின் நோக்கமும், இலக்கும் வெறுப்பரசியலாக இருப்பதில்லை. அதுயாதுமாகி நின்ற காளியாய் மனதை ஆக்கிரமிக்கும், ஆட்டிப்படைக்கும் ஒரு வலியை பரிதவிப்பை, விடையறியாக் கேள்வியை, இனம் புரிந்த, புரியா பாரத்தை, ஆன்மச்சோர்வை, வாழ்வீர்ப்பை, குமிழ்த்தருண அமரத்துவத்தை, அன்பே சிவமாக வசப்படும் உள்ளங்கையுலகுகளை, ‘அத்திரிபாட்சா கொழுக்கட்டைகளை, அகங்காரம் களைந்த அம்மண எண்ணங்களைஇன்னும் என்னென்னெவெல்லாமோ அருவங்களை உருவமாக்கிக்காட்டவும், அவற்றில் கூடுவிட்டுக் கூடு பாயவுமான இடையறாத எத்தனமாய், பிரயத்தனமாய், ஒரு அதிவிழிப்புடனான உன்மத்தநிலையில் வெளிப்படுகிறது. வாசகரிடம் அதே எத்தனம்ம், பிரயத்தனம், உன்மத்தநிலையின் பரிவதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

கவிஞர் தர்மினியிடம் ஒரு தொகுப்புக்காக நான் தன்விவரக்குறிப்பு கேட்டபோது அவர் அனுப்பித்தந்ததே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ளது. அவர் தூமைஎன்ற பெண்ணியத்தை முன்னிலைப்படுத்தும் மின்னிதழைத் தன் தோழிகளோடு நிறைய வருடங்களாக நடத்திவருபவர் என்று நானறிவேன். அவர் கவிதைகள் நிறைய குறிப்பிடத்தக்க சிற்றிதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால், தன்னைப் பற்றிய ரத்தினச்சுருக்கமான விவரக்குறிப்பே போதும் என்பது அவர் எண்ணம்! இந்த ரத்தினச்சுருக்கமாகச் சொல்லும் பாங்கை அவர் கவிதைகளிலும் காண முடிகிறது.


எனக்குப் பிடித்த அவருடைய சிறு கவிதையொன்று – ’நல்ல கவிதை என்பது அதிலுள்ள வரிகளின் எண்ணிக்கைக்கு அப்பாலானதுஎன்பதை மெய்ப்பிக்கும், அவருடைய இன்னொரு சிறுகவிதை பின்வருமாறு:

காற்றின் விசுக்கலொன்று
வெற்றுக் கிண்ணத்தில் 
போதையை நிரப்பிச் செல்கிறது

ஒரு நாள்
மதுவில் ததும்பி 
வழிகின்றது பேரன்பு

இன்னொரு நாள்
மதுவில் தளும்புகின்றன
விழிகள்

ஒரு நல்ல கவிதை சொல்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதே அதிகம் என்பதைப் புலப்படுத்தும் தர்மினியின் கவிதை நிறைவான வாசிப்பனுபவம் தருகிறது.

_ நன்றி தர்மினி!
Ø   

No comments:

Post a Comment