Thursday, August 30, 2018

எறிகுண்டுகளும் ஏவுகணைகளும் - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


எறிகுண்டுகளும் ஏவுகணைகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எல்லோரும் வரிசையில் காத்திருக்கிறார்கள்
ஒரே விஷயத்தைப் பற்றிக் கருத்துரைக்க…..
ஒரே மாதிரிக் கருத்துரைக்க……..

குறி பார்த்துத் தாக்கப்படுபவர்கள்
சகிப்புத்தன்மையோடு இருக்கவேண்டியதன்
அவசியத்தை விரித்துரைக்க………

ஒரு கை அல்லது ஒரு கால் போனால்
அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்கவேண்டியதன்
இன்றியமையாமையை எடுத்துரைக்க…….

அவர்களுடைய பொய்களை 
அப்படியே ஏற்றுக்கொண்டுவழிமொழியாதவர்களை
இடித்துரைக்க......

விறுவிறுவென வீரநடை பழகி
குரலை சரி செய்தபடி சிலர்;

விரலை ஈட்டியாய் சரேலென
எதிரில் இல்லாத முகத்துக்கு நேராய்
குற்றஞ்சாட்டுவதாய் நீட்டியபடி சிலர்;

சிலர் கைகளில்மைக் இருக்கிறது;

சிலர் கைகளில் கற்கள் இருக்கின்றன;
சிலர் முதுகுக்குப் பின் வீச்சரிவாள்
ஒளிந்துகொண்டிருக்கிறது…….

வரிசையில் நீ முந்தி நான் பிந்தியா
என்ற கடுஞ்சினத்தோடு
ஒரே சமயத்தில் அனைவருமாய்
ஓங்கிக்குரலெடுத்துக்கூவித் தாவும்போது
உங்கள் குழந்தைகள் மிதிபட்டால்
அதைத் தாங்கிக்கொண்டாகவேண்டும்;

பிச்சுவாக்கத்தி உங்கள் கழுத்தில்
கச்சிதமாய் நுழைக்கப்படலாம்
அதன் முனையில் நச்சு தடவப்படவில்லை
என்பதை
ஏன் பாராட்ட மனமில்லை உங்களுக்கு?

மிச்சம் மீதியில்லாமல்கெட்டவார்த்தைகள்
உங்கள் மேல்
எச்சிலைலைகளாகக் கொட்டப்படலாம்.
குப்பைத்தொட்டியாக்கப்படாததற்காய்
நன்றி சொல்ல ஏன்
தப்பித்தவறிக்கூட விரும்பவில்லை நீங்கள்?

வாளால் உங்கள் தலைகளையெல்லாம்
சீவியெறியும்போதும்
வாளாவிருந்தால் மேலோர் நீங்கள்;
வாயைத் திறந்தாலோ 
வெட்டிவிடுவோம் வெட்டி……
பேசிப்பாருங்கள்.

பட்டிதொட்டிகளிலெல்லாம்
இற்றுவிழலாகும் உடலங்களை
எண்ணியெண்ணிக்
கள்வெறி கொண்டு
சற்றும் குறையாத வன்மத்தோடு
சரசரவென்று எழுதிக்கொண்டே
விறுவிறுவென 
ஈட்டியெறிந்துகொண்டிருக்கும் கைகள்.....

அறிவுக்கண் திறந்தே 
அனைத்தும் செய்யப்படுவதுண்டு.

_ pricking, poking, piercing, 

peeling off the skin

pummeling the bones …..


Passionately measuring in litres 


the blood gushing forth……


Being in safe zones


Bulldozing hapless ones _


In more ways


these days _


Pen is not just mightier than the sword_


IT IS THE SWORD.

VIOLENCE IS THE WORD.



No comments:

Post a Comment