Wednesday, May 23, 2018

நிலவரம் - நிஜமுகம்


நிலவரம் - நிஜமுகம்

விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியான சோகம் கொடிது.


அதைவிடக் கொடிது _ அது குறித்து அத்தனை ஆவேசமாக, ஆற்றாமையோடு கருத்துரைக் கும், கண்டனம் தெரிவிக்கும் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்களிலெல்லாம்  _ஜெயா ப்ளஸ், சன், கலைஞர், மதிமுகம், வெளிச்சம், சத்தியம் அன்னபிற _ எல்லா எண்டெர்டேயின்மெண்ட் நிகழ்ச்சிகளும் – குத்துப்பாட்டு, வன்முறைக்காமெடிக் காட்சிகள், பகுத்தறி வார்ந்த பேய், பாம்பு மெகா சீரியல்கள், அபத்த விளம்பரங்கள் ஒன்று விடாமல் – ஒளிபரப்பப் பட்டபடியே.


பெரிய தலைவர்கள் இறந்தால் சோகமாய் ஷெனாய்   முழுநாளும் ஒலிபரப்பப்படும். இப்போது இறந்தவர்கள் சாமான்யர்கள் என்பதால்தான் அவர்களுக்காகப் பேசும் தலைவர்களின் தொலைக்காட்சி சேனல்கள் எப்பொழுதும்போல் எண்டெர்டெயின்மெண்ட் டிலேயே குறியாக இருக்கின்றனவோ என்னவோ.


No comments:

Post a Comment