Friday, July 22, 2016

ஆரூடக்காரர்களும் ராசிபலன்களும்!

ஆரூடக்காரர்களும் ராசிபலன்களும்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)





1
யதேச்சையாய் உதிரும், அல்லது, வேண்டுமென்றே உதிர்க்கப்படும்
ஒரு பெயரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதும்
அதை வெறுமே உச்சரித்துக்கொண்டிருப்பதும்
உங்களுக்குப் போதுமானதாயிருக்கலாம்.
ஆனால் அதுதான் இறந்துகொண்டிருக்கும் இலக்கியத்தைப்
பிழைக்கவைப்பதற்கான ஒரே வழி
என்று வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
கல்லாதது கடலளவுதான். என்றாலும்
நான் மாணவப்பருவத்தைக் கடந்துவெகுதூரம் வந்தாயிற்று.
இன்னும் ஆரம்பப்பள்ளியில் இருக்கும் நீங்கள்
அனுதாபத்திற்குரியவர்.

2
நுனிப்புல்லா கடலாழமா உங்கள் அறிவின் தீட்சண்யம்?
உங்கள் மனதுக்கு நன்றாகவே தெரியும்.
மனப்பாடமாக நான்கு பெயர்களை
வரிசையாக உச்சரிப்பதல்லவே அறிவு?
ஆகாசத்தைத் தொடுவதற்கான சூத்திரமாக நீங்கள் அதை
நம்பிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை.
ஆனால் மற்றவர்களை மதிப்பழிப்பதாய்ப் பார்த்து
எள்ளிநகையாடும் முன்
உங்களை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்.
நோஞ்சான் கொம்புகளோடு சிலுப்பித் திரியும் உங்களை
ஆசானாக எப்படி வரிக்க இயலும்?

 3
யாரும் கொம்புசீவி விடலாம்,
ஆனால், முறிந்தால் வலி உங்களுக்கு மட்டுமே.
குழந்தைகூட தகப்பன்சாமியாகும்தான்.
ஆனால், ‘ப்ரோக்ராம்ட்’ குழந்தை யல்ல;
மனிதனின் ஆறாம் அறிவு
கிளியிடம் தர்க்கம் செய்யவியலுமா என்ன?

 4
திறனாய்வுக்கோலைக் குறுக்கே நீட்டிப்
பிறரைத் தடுக்கிவிழச் செய்து
கைகொட்டிச்சிரிக்கும் முன்
சூரியனின் தகுதியைக்
கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

5
அன்றாடம் ஆயிரம் நாளிதழ்கள்;
ஒவ்வொன்றிலும் ராசிபலன்கள் வெவ்வேறாய்.
அவ்வாறாய் கவிதை ஆரூடக்காரர்களும்…..
கவிதை செத்துவிட்டது என்பார் சிலர்;
செத்துக்கொண்டிருக்கிறது என்பார் சிலர்;
சாகப்போகிறது என்று சிலர் சொல்ல,
சாகக்கூடியது என்று சிலர் சொல்ல
சத்தியமாயின்னும் பிறக்கவேயில்லை என
சாதிக்கும் சிலர்.

 6
இன்னும் பிறக்காத கவிதையைப் பிழைக்கவைக்க
திறனாய்வுச் சத்துணவாய் எதையெதையோ கலந்து பிசைந்து
உண்ணத் தருவார்.
குமட்டிக்கொண்டுவரும் குழந்தைக்கு
தன்னிச்சையாய் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொள்ளும்
பிள்ளையின்   முதுகில்
பேயறை பதம் பார்க்கும்.
வலியில் சில துள்ளித் துடிக்க

சில வலிக்க வலிக்கக் கடித்துவிடும்!.



Wednesday, July 20, 2016

TRANSCIENCE (Soliloquy – 2) ‘rishi’ (Latha Ramakrishnan)

TRANSCIENCE

 (Soliloquy – 2)



‘rishi’

(Latha Ramakrishnan)


Yester night
some  words as stray fireflies and butterflies
were hovering over me, oozing glow  so rare
proving life more than a mere vanity fair
hoping that they would be seamlessly woven
into a poem.

But, half-afraid of the alien cabin
half of me already asleep, the rest drooping
I waved them away with a heavy heart.

Today I am wide awake,
waiting for those fireflies and butterflies
to bless me with their wings and shine
the boon of a poem sublime….

Much as I try, they refuse to oblige.
I remain a vauum to be filled by the
 ‘never to return’ Moment.


நிலையாமை

நேற்றிரவு
சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள்
சில வண்ணத்திப்புச்சிகள்
என் தலைக்கு மேலாய் 
வட்டமிட்டுக்கொண்டிருந்தன
அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;
வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல 
என்று நிரூபித்தபடி;
அத்தனை நேர்த்தியாய் அவை யோர் கவிதையில் 
ஊடுபாவாய் நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.... 
எனில், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்
மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும் கோலமுமாய்
கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.

இன்றுநான் முழுவிழிப்பில்
காத்துக்கொண்டிருக்கிறேன்
அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.
தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர் கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.
ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை  ஏற்க மறுக்கின்றன.
வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத  தருணம் இட்டுநிரப்ப



Monday, July 18, 2016

SIGNING OFF (Soliloquy….. 1)

SIGNING OFF

(Soliloquy….. 1)

By

‘rishi’(latha Ramakrishnan)



Wonder how long you are going to be afflicted  with the question   
‘To be or Not to Be....’

Hamlet, My Honey _  
Isn’t Life so gruesomely funny?

May be it is Ophelia you deserve 
and none better…
Reserve some of your soliloquies 
for future Shakespeare.

Subjectively objective, objectively subjective –
Oh, come on, cut short those clichés….
Do put on your mask, carry a flask
with a cup of hot coffee, occasionally munch a toffee….

Hamlet, My Friend, Philosopher and Guide –
How deftly you carry both Dr.Jeckyl and Mr.Hyde?
After all Life is a Stage, they say
Go, get ready for the next play…..

Attachment, detachment, attached detachment 
– My foot
Where is the need for Verbiage, Rhetoric? 
Go shoot and loot           
If not with gun,  
with ‘mightier than the sword’ pen.

Go, pursue Ophelia the fool, exercising your brand 
‘method in madness…’
as you go on you might learn that she too has 
some hidden design….

Walking left, right, about-turn  
- say, what do you gain?

‘Thinking makes it heaven or hell’
-True Hamlet, but please don’t tell   “Ding dong bell”.

Well…. with or without water
Yester year or ever after
Whatever be the case   the atoms….(pause)….

Sleep overpowering Me the vulnerable
No more ‘disabled’ but differently-abled’

Rhyme and reason  playing treason
Is Poetry a Season?
an extended limb or soul?
Angel or Monster on the whole?

With or without W -  W is in fact double V  _
and, there lies the woeful irony!






Sunday, July 10, 2016

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

கவிதை




 ‘ரிஷி’

முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி.
முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன்.
சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்…
சற்றே மூச்சுத்திணறுகிறது.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான்
‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும்.
தவறாக நினைத்துவிடவேண்டாம்.


அதுசரி, நட்பென்றாலே பரஸ்பரம் தானே?
இதில் என்ன தனியாய் ‘mutual friend’? - சாதா தோசை மசாலா தோசை கணக்காய்…
ஏதும் புரியவில்லை.
Mutual friend, actual friend ஆகிவிடமுடியுமா ?
Actualக்கும்  Factualக்கும் இடைத்தூரம் என்ன?
தொலைவா, விரிவா, பள்ளமா, அகழியா?
மனம் அதன் போக்கில் தனியாவர்த்தனத்தில் லயித்தபடி…..


எத்தனை அன்போடு என்னை நட்பாக்கிக்கொள்ள முன்வந்திருக்கிறீர்கள்!
எந்தரோ மகானுபாவுலு – அந்திரிக்கு வந்தனம்’
(சுந்தரத் தெலுங்கிலும் பாட்டிசைப்போம்; சமஸ்கிருதம் செத்த மொழியெனில், சாகுந்தலம்?)
நிற்க, சில முன்நிபந்தனைகளோடு கூடிய எதிர்பர்ர்ப்புடையவர்களுக்காய்
இந்த எளிய சுயவிவரக்குறிப்பு.
எனக்கு ‘மோடி’யைப் பிடிக்கும்; மாதொருபாகன் புதினம் பிடிக்காது;
‘One Part Woman’ என்ற அதன் ஆங்கிலத் தலைப்பு ஆபாசத்தின் உச்சம்.
எச்சம் போட்டுச் செல்லும் காக்காயை விரட்டுவதா, அல்லது
தலையைத் துடைத்துக்கொள்வதா
எதைச் செய்ய முதலில் என்ற கேள்வியே எப்போதும் மிச்சமாகும்.
மனப்பிறழ்வில்லை என்றாலும் மணிக்கணக்காய் என்னோடு மட்டுமே
பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கும்.
பிறப்பெனும் விபத்தால் முற்படுத்தப்பட்ட சாதியினள்.
(அதனால் ஆணவக்கொலையை ஆதரிப்பவள் என்று அர்த்தமல்ல)
SBIயில் தற்போதைய சேமிப்பு 80 ரூபாய்.


குணம்நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மனங்கொண்ட நட்பை
அவர்தம் ஒரு சொல்லுக்காய், செயலுக்காய் பல்லுமேல ஒண்ணுபோட்டு
கழுதைமேல் ஏற்றிவிடல் இயலாத காரியம்.
(நானே கரும்புள்ளி குத்தி அத்துவிட்டுவிட நேரலாம். அது வேறு விஷயம்)
சாதியின் பெயரால் ஒரு சககவியைச் சிறுமைப்படுத்தவோ
அவர்  கவித்துவத்தைச்  சேற்றில் துவைத்தெடுக்கவோ
ஒருபோதும் ஒப்பாது  என் மனம்.
உன்னதமாக உணரும் ஒவ்வொரு கவிதையும் எனக்கோர் புனிதப்பயணம்.
எழுதியவர் கடவுள். தூணிலும்  இருப்பார் -  துரும்பிலும் இருப்பார்.
உள் கடந்து உள் கடந்து  உன்மத்தக் கள்வெறியில்
என்னிடமிருந்து உன்னிடமிருந்து அவரிடமிருந்து எவரிடமிருந்தும்
நல்வினையாய்க் கிடைக்கும்  சொல்வளங்களைச் சேகரித்தபடியே
வாய்த்த ஒற்றையடிப்பாதையில் என் வழிச்செலவு தொடரும்.
”சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?” என்று உங்கள் நல்ல கவிதை யென்னை  
வாய்நிறைய நலம்விசாரிக்கும்போதெல்லாம்  கண்கலங்கிவிடும்.


என்மீது சகதியை வீசுபவர்களோடு ஒண்டிக்கு ஒண்டி சண்டையிடவே விரும்புகிறேன்
யாரையும் துணைக்கழைத்ததில்லை; யாரும் தோள்கொடுத்ததுமில்லை.
அதனாலென்ன பரவாயில்லை. அவ்வாறே
’நான் காய்விட்டிருப்பவரோடு நீயும் காய்விட வேண்டும்’  என்று என்னைக் கட்டாயப்படுத்தக்கூடாது நீங்கள் - சரிதானே?
மாற்றுக்கருத்தென்றாலும் மடேரென என் தலையைக் கருங்கல்லில் மோதாமல்
வாய்வார்த்தையாய் சொல்லலாமே!
சுவரிருந்தால்தான் சித்திரம் -மித்திரர்களாவதும் சாத்தியம்.
அதி கவனம் தேவை. பத்திரம்.

அறவுரைக்கத் தொடங்கிவிட்டேனோ நானும்?
’அடச் சே’ என்று தோன்றினால் Unfriend செய்துவிடுங்கள் friendஆகும் முன்பாகவே!

இறுதியாய் ஒரேயொரு வேண்டுகோள்
முகநூல்  வெளியின் உள்ளோ, வெளியிலோ நட்பினராவோமெனில்
பின்னொரு காலை ‘
ஏதேனுமொருநாள் நான் உங்களை அலைபேசியில் அழைக்க நேர்ந்தால் _
Familiarity breeds contempt’ என்ற உறுதியான சுருக்குக் கயிறு இறுக்கினாலும்
இருவர்க்கிடையேயான ஹாட்-லைன் என்று நான் மனதார நம்பும் கைப்பேசியை
அருகிலிருப்பவர் கையில்  கொடுத்து பதிலளிக்கச் செய்து
என்னை அவமதித்துவிடாதீர்கள்.
ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகிறேனே என்று விருப்பம் தெரிவித்தால்
காதுகேளாததாய் பாவனை செய்து என்னை அசிங்கப்படுத்திவிடாதிர்கள்.




*








Friday, July 8, 2016

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

மாதொருபாகன் குறித்து
சொல்லத் தோன்றும் சில….
லதா ராமகிருஷ்ணன்
(ஜனவரி 2015பதிவு இணைய இதழில் வெளியாகியுள்ளது)



மாதொருபாகன் கதையைப் பதி விறக்கம் செய்து வாசித்தேன்.

எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

அதேசமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக, புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக் கொள்ள முடியாதா?

இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும். 

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத்தா ன் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோவொரு விஷயம் அவரை அலைக்கழித் திருக்கிறது என்று தோன்றுகிறது. 

கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்ப தற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை.  [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலி செய்யப்படு கிறார்கள். என்றாலும்].

சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழி பெயர்த்திருப்பது தான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ்மொழிபெயர்ப்பான மாதொருபாகனை ஆண்மையும் பெண்மையும் சரிசம விகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும். 

உலகத் தரமான கதையைப் படித்து முடிக்கும்போது ஏற்படக்கூடிய catharsis உணர்வு இந்தக் கதையைப் படித்தபோது கிடைக்கவில்லை. 

நாலு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட போது இந்த எதிர்ப்பு எழவில்லையே, இது ‘இந்துத்வா’ சதி என்பதெல்லாம் பிரச்னையை திசை திருப்பும் செயல். உண்மையான ஊரின் பெயரும், குறிப்பிட்ட சாதியின் பெயரும் கதையில் இடம்பெறுவது தான் உண்மையான பிரச்னை. இந்து நாளிதழுக்கும் இந்துமத எதிர்ப்பாளர் ளுக்கும்  இந்தப் படைப்புக்கான உள்ளூர் எதிர்ப்பு தங்களு டைய மோடி அரசு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்புக்கான தக்கதோர் வாய்ப்பாகியிருக்கிறது.

பெண் கணவனைத் தவிர வேறொருவரோடு படுக்கிறாள் என்பதை செரித்துக்கொள்ள முடியாத ஆணின் மேலாதிக்க மனப்பான்மையைத் தான் இந்த கதைக்கான எதிர்ப்பு காட்டு வதாக டெக்கான் க்ரானிக்கிளில் கவிஞர் சல்மா கூறியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது ஒருவித clicheத்தனமான வாதம். இதே வாதத்தை மனைவி திருவிழாவுக்குப் போய்விட்டாள் என்ற விஷயம் தெரிந்ததும் கதாநாயகன் காளி பரிதவித்துப் போவதாகச் சித்தரிக்கும் ககதாசிரியர் மேலும் ஏற்றிவைக்க முடியும். 

கதை நாயகி பொன்னாவை வறடி என்னும்போது அவள் வலித்தழுகிறாள். ஆனால் அவள் ‘வெள்ளைச்சீலைக்காரி’ என்று சக-பெண்ணை ஆங்காரமாக ஏசுகிறாள். காளியின் சித்தப்பா பாத்திரம் - காளியால் மதிக்கப்படுபவரும், கதாசிரி யரால் சமூகப் பொய்மைகளுக்கு எதிர் நிலையில் காண்பிக்கப் படுபவருமாகிய மனிதர் தான் கூட்டிக்கொண்டு வந்த வெள்ளைச் சீலைக்காரி தாலி கேட்கிறாள் என்பதை கேலி பேசி அவளைத் துரத்திவிட்டதாகக் காளியிடம் தெரிவிக்கிறார். 

அத்தனை அந்நியோன்யமான காளி-பொன்னா தம்பதி தாழ்த்தப்பட்டவர்களுடைய குழந்தையை தத்து எடுத்துக் கொள்வது குறித்து அவர்கள் சாதி வழக்கப்படியேதான் தயக்கங் காட்டுகிறார்கள். 

இது சரி, தவறு என்று ஆசிரியர் கூற்றாக எதுவுமே வருவ தில்லை. கதையில் ஆசிரியர் தன்னைத் துருத்திக்கொண்டு வெளிப்படுத்தக்கூடாது என் பது உண்மைதான். ஆனால், குழந்தையில்லாத பெண்ணைக் கேவலம் செய்யலாகாது என்பதைச் சொல்ல விழையும் ஆசிரியர் மற்ற தரப்பி னரையும் காயப்படுத்தலாகாது என்பதைக் கதாபாத்திரங்கள் மூலமாவது, அல்லது ஆசிரியர் கூற்றாகவாவது புலப்படுத்தி யிருக்க வேண்டாமா? கதை சொல்லப்பட்ட விதம் யதார்த்தபாணி நடையில் தான் என்பதால் வரியிடை வரிகளில் அது சொல்லப்பட்டிருக்க இடமில்லை.

’அந்த நாளில்’ எல்லோரும் சாமி என்று சொன்னாலும், அங்கே பெண் கிடைக்காதா என்று சுற்றுபவர்களும் உண்டு என்பதையும், பொன்னா வின் அண்ணனுமே அப்படிப் போனதுண்டு என்றும் கதை கூறுகிறது. அப்படியெனில், அந்த சடங்கின் அனர்த்தம், போலித்தனம் முழுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. ஆனால் ஆசிரியர் பொன்னா தனக்கான சாமி யைத் தேர்ந்தெடுத்துப் போவதாய் நயம்படக் கூறுகிறார். 

கதையில் நுட்பமாகச் சொல்லப்பட்ட இடமாக எனக்குப் புலப்படுவது, தனக்கான சாமியைத் தேடும் போக்கில் பொன்னா இளவயதில் தன் நேசத்திற்குரியவனாக இருந்தவனை நினைவு கூர்வதுதான்.

இன்று செய்தித்தாளில் சங்கரின் ‘ஐ’ படத்தில் திருநங்கை களை இழிவு படுத்தியிருப்பதாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி படித்தேன். இது அவர்களின் உரிமைதானல்லவா? 

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஊனமுற்றவர்களும் விளிம்புநிலை மனிதர்களும் எப்படி யெல்லாம் மதிப்பழிக்கப்படுகிறார்கள் என்று நாம் நன்கறிவோம்.வலியுணரா மனிதர்கள் செய்யும் அதே தவறை வலியுணரும் மனிதர்களும் செய்யலாமா என்ற கேள்வி எழுவ தைத் தவிர்க்க முடியவில்லை.

புத்தகக் கண்காட்சியில் சிற்றரங்கக் கூட்டத்தில் இந்தக் கதை குறித்த தனது எதிர்க்கருத்தை முன்வைத்தமைக்காக எழுத்தாளர் சாருநிவேதி தாவைத் தாக்கத் தயாராய் சில பேர் வந்ததும், அவரைக் கருத்துரைக்க விடாமல் தடுத்ததும் கண்டனத்திற்குரியது.



மாதொருபாகனை முன்வைத்து
மேலும் சில கருத்துப்பகிர்வுகள்
_ லதா ராமகிருஷ்ணன்

  ஒரு எழுத்தாளர் ஏன் இந்தக் கதைக்கரு வைத் தெரிவு செய்து கொண்டார், ஏன் அந்தக் கதைக் கருவைத் தெரிவு செய்து கொள்ள வில்லை; ஏன் இந்தக் கதைக் கருவை இப்படிக் கையாளவி ல்லை, ஏன் அந்தக் கதைக் கருவை அப்படிக் கையாண் டார் என்று கேட்பதெல்லாம் ஒரு வகையில் அபத்தம்தான். அதே சமயம் _

 ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வ தற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும் போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்து மூலம் நேர்த்தி யாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.


தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப் பது சில அறிவுசாலி களின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூக மாற்றத்திற்கான முன்முனைப்பை மெய் யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உரு வாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்த மாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகுமுறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப்படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.


இந்த அடிப்படையில் மாதொருபாகன் புதினத்தை அணுகும் போது, அந்தப் படைப்பு எடுத்துக் காட்ட முனையும், எடுத்து ரைக்க விரும்பும், மையக் கருத்து என்ன? குழந்தையில்லாத தம்பதியர் சமூகத்தில் எதிர்கொள்ளும் மதிப்பழிப்பா? கடவுள் மதம் என்ற பெயரால் மனிதர்கள் மீது என்னவெல்லாம் கட்டு திட்டங்கள், கட்டாயங்கள் காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன என்பதா? இந்த இரண்டும் தான் பிரதானமாக கருத்தோட்டங்களாக கதையில் புலப்படுகின்றன. ஆனால், இரண்டையுமே கையாண்ட விதத்தில் ஏதோவொரு போதா மையை உணர முடிகிறது.


INDIAN FOUNDAITON FOR THE ARTS, BANGALORE  என்ற அமைப்பின் நிதியுதவி (ரூ 3,28,500) பெற்று இரண்டு வருடங்கள் ஆய்வு மேற் கொண்டு இந்த நூலை ஆசிரியர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்த மையத்தின் MISSION ‘is to enrich the Arts in India by providing support to innovati ve projects’ என்று தரப்பட்டிருக்கிறது. கதாசிரியரின் ஆய்வு குறித்து பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.


For research towards the writing of a novelized history of Thiruchenkode in Namakkal district, Tamil Nadu. A town with an ancient history. Thiruchenkode is today marked by its hill temple dedicated to Murugan and Ardhanaarees wara but is also known for its vibrant modern industry. In the course of writing a historical account of Thiruchenkode the author will document references to the town in litera ture, analyze the town’s design and study its ritual and reli gious life.


மேற்குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் அந்த ‘அர்த்த நாரீஸ்வரர்’ கோயில் சடங்கே உச்சக் கட்டமாக ஆசிரியர் முடித்துக்கொண்டுவிட்டதுதான் [அந்தச் சடங்கையும் அவர் முழுவீச்சாக எதிர்க்கவில்லை] உண்மையிலேயே வருத்தத் திற்குரிய விஷயம். தரப்பட்ட வரைச்சட்டகத்திற்குள்ளாக ஊர் குறித்த, அதன் வரலாறு குறித்த, மக்கள் குறித்த, அவர் களின் வாழ்நிலைமை சாதிப் பிரிவினை, குறித்த எத்தனை யோ விஷயங்களை, அவற்றின் அடிப்படையிலான ஆக்க பூர்வமான கருத்துகளைப் பேசியிருக்க முடியும். ஊரின் நில வளம், இயற்கைக்காட்சிகள் குறித்து விவரிக்கும் அளவு கூட ஆசிரியர் வேறு முக்கியமான விஷயங்களை – கோயில் சார் அந்த நம்பிக்கை தவிர்த்து, விரிவாக, in all seriousness,  பேசத் தலைப்படவில்லை.


கதாசிரியராவது ஒரு கதைக்கருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன் பின்னணியில் ‘அந்தக் காலத் தைய’ கோயில் உற்சவம், அது தொடர்பான சடங்கு , நம்பிக்கை குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அவருக்கு ஆதரவு தெரி விப்பதாக  ‘கருத்துச் சுதந்திரம்’ காக்க வேண்டி 15.1.2015 தேதியிட்ட தினமணி நாளி தழில் வெளியாகியுள்ள தலையங் கம் நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே அமைந் துள்ளது. (பார்க்க : பெட்டிச் செய்தி:)



 தினமணி 15.1.2015 தேதியிட்ட நாளிதழின் தலையங்கம்
அட, பெருமாளே!
By ஆசிரியர்
First Published : 15 January 2015 01:44 AM IST

தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பிறகுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு பெரு மாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்' நாவல் புரிகிறது கோபம் வருகிறது. திருச்செங் கோட்டில் கடையடைப்பு, ஆர்.டி.ஓ.வுடன் பேச்சு வார்த்தை, காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத் தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, பழக் கவழக்கங் களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார். தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாச னம் எழுதவும் முற்பட்டிருக்கிறார்.

பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் "கண்மூடி' ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக் குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல. சமூகத்தில் இருந்த பழக்கம் தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழு வதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த் தமாடுதல் இவை யாவும், "இத்தனை நாள் இல்லா மல் எப்படி இப்போது?' என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகா ரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிட லாகாது.

மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், "இரண்டாம் இடம்' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப் படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. "நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன் தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பல வீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன். மிகத் திட காத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ...' என்று குந்தி சொல்வ தாகக் கதை செல்கிறது. 

இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமு தாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது. 

லக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்கு களை எல்லாம் விட்டுவிடு வோம். இன்று "ஃபெர்டிலிடி சென்டர்' எனப்படும் கருவூட்டு மருத்துவ மனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள். அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும் போது, "உங்கள் குடும்ப மரபீனி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனை வியை கருவுறச் செய் யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்ய லாம். உங்களுக்குச் சம்மதமா' என்பதுதான் நேர்மை யான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி. 

பல லட்சம்ரூபாய் செலவுசெய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில் கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமு றைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே, அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடி யுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?

சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல் லாத தையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்? 

எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகி விட்டது. ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன் வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்கவேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததே கூட மிகப்பெரிய தவறு. 

சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, "தணிக்கைக் குழு வால் சான்றிதழ் வழங்கப் பட்ட திரைப் படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடை யாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு' என்பது. அதுவே பெருமாள் முருகனின் "மாதொ ருபாகன்' பிரச்னைக்கும் பொருந்தும். 

சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டா லும் ஆணாதிக்க மானுடம் ஏற்க மறுக்கிறது. இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந் திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந் திருக்கும். தமிழனாய் பிறந்தது பெருமாள் முருக னின் தவறு!

              
மேற்படி தலையங்கத்துக்கு வந்த எதிர்வினை களில் ஒன்று பின்வருமாறு:     
            
yampalayam Venkateswaran
22-01-2015 | 19:36:45

தினமணிஇன் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?வாசகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட நீங்கள் விதித்திருக்கும் கட்டுபாடுகளை முத லில் நீங்கள் பின்பற்றுங்கள். எழுத்தாளர்களுக்கும் இருக்கும் உரிமை வாசகர்களுக்கு இல்லையா என்ன? நாகரீகமற்ற வாசகங்களை ஏன் நீங்கள் நீக்குகிறீர்கள். அது வாசகர்களின் எழுத்துரிமை இல்லையா?

///வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடு க்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்கு தலை, கட்டுரைகளுக்குப் பொருத்த மில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்தி ரத்துக்கு வாய்ப்ப ளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.///