Thursday, June 7, 2012

BOONS, BLESSINGS AND THE BESTOWER


BOONS, BLESSINGS AND THE BESTOWER

by rishi


[English rendering of the 
THAMIZH poem 

VARAMARULL VAZHIMURAIGAL [1]

Translated by the poet] 

with the original poem


வரமருள்  வழிமுறைகள் சில: 

















BRIEFING 1

When Her[His]  Excellency, wielder of pen most powerful, 
pushing aside the person who was to talk before, 
so elegantly[ being the euphemism for arrogance] rose , 
with ever-swelling great expectations of hearing 
the lilting symphony of the waves,
the soft fluttering of the wings, 
the roar of thunder, 
shower of flowers 
deadly noise of earthquake, 
the sound of boulders and rocks rolling down, 
deluge and 
the birth of a new world 
many would have sharpened their ears 
and listened intently 
and some would have believed 
that they did hear them all 
and some others would have looked down 
wondering whether Her[His] feet were touching 
the ground 
or that He[She] was in fact an angel, 
astonished and spell-bound_
the person went on harping on the point 
that She[He] as a rule never attend any meeting 
and yet He[She] had chosen to come, 
that She[He] as a rule could n’t find time for such meeting 
and yet He[She] had chosen to attend 
and on and on 
with the explicit implication being
 ‘taking pity on 
 He[She] went on and on
 in this vain the pain of it 
proving indescribable
 leaving me wondering 
whether it could have been taken as a great boon 
given all too mercifully 
or that it could indeed have pricked and stung 
or that it too could have been [mis]construed as poetic lines
 between lines 
of course yesterday today and tomorrow
 there are those 
ready to interpret them as highly poetic 
utter nonsense
 the way some or many of those wondered 
whether that which oozed out of the mouth
 that kept on blabbering 
was honey or ghee or sacred water, 
oh, branding your ancestors my parents 
your taste my intelligence 
his choice her concern 
and so on and so forth 
not leaving anything unscathed 
attacking them all as with a calculative precision
 set out to slice the heads seen all around 
such as the one with curly hair and the one 
with no hair 
the head seen and unseen 
lovely head ugly head tonsured head, 
that which had undergone surgery 
the head born, unborn still-born 
head neatly combed and head with hair entangled 
so heads infinite were squeezed and smashed 
demolished destroyed 
all their distinct identities erased and wiped out 
and all squeezed into one big ball of mass
 and the bodies felled and made into 
invisible corpse 
and then
 with the joy and satisfaction of having 
Her[His] place safe and secure
 as a palanquin floating on earth did He[She]
 sway and move ahead 
leaving the hall 
heading towards the 
massive auditorium well air-conditioned 
where the preview of a movie 
funded or produced or sponsored 
by a multi-national corporate sector
 was to be held,
where ascending the dais 
She[He] went to the seat assigned at the corner
 sure to remain there till the very end 
with no intention of leaving in the middle.

வரமருள்  வழிமுறைகள் சில:
 [1]

பெருந்தகை யவர் அருமருந் தெழுத்தாளர்
தனக்கு முன்பாகப் பேச வேண்டியவரை மனிதநேயத்தோடு 
மிக லாவகமாகப்பின்னுக்குத் தள்ளிவிட்டுப்
பேசஎழுந்தபோது 
அலைகளின் சலசலப்பும் சிறகுகளின்  மென்  படபடப்பும்  
இடி முழக்கமும்  பூமாரிப் பொழிவும்  
நிலநடுக்கமும் பாறைச்சரிவும் பிரளயமும் 
புது  உலகப் புறப்பாடும்
கேட்கக் கிடைக்கிறதோ என்று 
சிலர் செவிகளைக்   கூர்மையாக்கிக் கொள்ள  
சிலர்  கேட்ட தாகவே  நம்பத் தொடங்க
இன்னும் சிலர் அந்தப் பாதங்கள் தரையில் பதிந்துள்ளனவா 
அல்லது அவர்  உண்மையில் தேவதையே தானோ வென  
திகைப்பும் பிரமிப்பும் சேரக்  குனிந்துபார்க்க
நேரமில்லை  என்றாலும் வந்தேன் 
எந்தக் கூட்டத்திற்கும் போவதில்லை  என்றாலும்வந்தேன் 
என்றாலும் என்றாலும் என்றாலும்
என்று அடுக்கிக் கொண்டே போனதில் சுரந்திருந்த 
போனால்  போகட்டும்  என்று’ 
பேரருள் பாலிப்பாய்புரிந்து கொள்ளப்பட்டிருக்குமோ  
அல்லது சுட்டிருக்குமோ சுளீரென  
யாமறியோம் பராபரமே
அன்றி அதையும் கவித்துவ வரியாகப்
பரவசங் கொள்வோர் என்றும் உளர் தானோ ஏனோ
என்றும் உளறிக்கொண்டிருக்கும் வாயிலிருந்து ஒழுகுவது
 தேனோ நெய்யோ  தீர்த்தம் தானோவென
சிலர் மயங்க
சிலர் மருள
உன்  முன் னோர் என் முன்னோர் அவர் முன்னோர் 
இவர் முன்னோர்
உன்  ரசனை என் அறிவு அவர் தெரிவு இவர் பரிவு 
எல்லாமே 
வெத்துவேட்டுபித்தலாட்டம் நச்சுப்பாம்பு  நாராசம்  என
மிச்சம் மீதி வைக்காமல் ஒரு கச்சிதக் கணக்கோடு
கண்ட தலை விண்ட தலை கண்கொள்ளாத் தலை 
விள்ளவியவியலாத் தலை
சொட்டைத்  தலை மொட்டைத் தலை
 அறுவைச் சிகிச்சைக்கு ஆளான  தலை
பிறந்த பிறவா இறந்த இறவா வாரிய வாரா 
இன்னும் ஏராளம் ஏராளம்  தலை களை யெல்லாம்
தனி அடை யாளங்களை அழித்துக் கூழாக்கி 
வெட்டிச்சாய்த்துக் காணாப் பொணமாக்கிய பின் 
தன் இடம் உறுதிப்பட்டுவிட்ட திருப்தியோடு 
தரையில்  மிதக்கும் பல்லக்கே போன்ற அசைவுடன் 
புறப்பட்டுச்சென்றவர்
பன்னாட்டுப் பெருமுதலாளி தயாரிக்கும் 
திரைப்பட விழா வொன்றின்  
குளிரூட்டப் பட்ட பேரரங்கிற்குள் நுழைந்து 
மேடையேறிப்பொருந்தி அமர்ந்துகொண்டார்  
கட்டாயம்  இடையில் கிளம்பிப் போகமாட்டார்
 இறுதிவரை அங்கேயே தான் இருப்பார். 






No comments:

Post a Comment