மாற்றுக்கருத்தாளர்கள் இங்கே மிகக் கொடிய ஃபாஸிஸ்ட்டுகள்!

மாற்றுக்கருத்தாளர்கள் இங்கே மிகக் கொடிய ஃபாஸிஸ்ட்டுகள்!

மரியா மாண்டிஸோரி

சர்வதேச மகளிர் தினத்தன்று எத்தனை பேர் மரியா மாண்டி ஸோரியை நினைவுகூர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாளும் நினைக்கப்படவேண்டியவர் அவர். குழந்தைகளைப் பெரியவர்கள் மதிக்கவேண்டியதன், சக உயிராக, சம உயிராக பாவிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தவர். குழந்தைகளுக்கு கல்வி என்பது, கற்றல் என்பது ஆனந்தமாக, ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எடுத்துரைத்தவர்.
குழந்தையை வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளை, தன்னம்பிக்கையை, திறன்களைக் கொண்ட முழுமனிதனாக உருவாக்குவதே கல்வியின் முதலும் முடிவுமான நோக்கமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியவர்.
அத்தகையதொரு கல்விமுறையை உருவாக்கியவர்.
//2016, டிசம்பர் 31ஆம் நாள் பதிவேற்றப்பட்டது//
//2016, டிசம்பர் 23ஆம் நாள் பதிவேற்றப்பட்ட கவிதை//
//2016, டிசம்பர் 26ஆம் நாள் பதிவேற்றியது//
படைப்பாற்றலும் PRம்....
சரிநிகர்சமானமாய்
ஆசை – பேராசை – நிராசை
பாவம் அவர்கள்,,,,,,
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அல்லது
முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள்
அறியாத
இருபதுபேர்
அல்லது
மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர்
மில்லியன்களாகத் தம்மை
பாவித்துக்கொண்டு
எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
இலக்கியம்
அரசியல்,
நடனம்,
ஓவியம்,
ராப்
இசை,
கர்நாடக இசை
ஊர்,
உறவு,
நாடு,
பிரபஞ்சம், தாராளமயம்
புரட்சி, பட்சி,
காட்சி,
விரகம்,
நரகம்,
மீட்சி
ஆட்சி
சாட்சி
அருமை
சிறுமை
பெருமை
கருமை
என்று
அவர்கள் பேசிக்கொண்டேயிருப்பதைக் கண்ட
சிறு
பறவையொன்று தாங்கமுடியாமல்
அவர்கள் மீது
எச்சமிட்டது
அவர்கள் பறவை
எச்சத்தைப் பற்றி
அகல்விரிவாகப்
பேச
ஆரம்பித்தார்கள்.