Thursday, June 20, 2024

மெய்ப்பொருள் காண்பதறிவு - லதா ராமகிருஷ்ணன்

 மெய்ப்பொருள் காண்பதறிவு

லதா ராமகிருஷ்ணன்

............................................................................
இளக்காரச்சிரிப்போடு எத்தனை இழித்துப்பேசினாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக திரு.அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் அரைநிக்கர் போட்ட ‘லூஸு’ப்பையனாகத் திரும்பத்திரும்ப இந்த அரசியல்வாதியைச் சித்தரித்துத் தன் அரசியல் கடமையை செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தாலும் அரசியல் சார்ந்தும், சாராமலுமாய் எத்த னையோ விஷயங்களைப் பற்றி அவர் ஆற்றிவரும் ஆழமான உரைகள், கண்ணியமாக அவர் தனது எதிர்க்கருத்துகளை வெளியிடும் முறை, ஆதாரபூர்வமாகத் தன் குற்றச்சாட் டுகளை முன்வைப்பது, தமிழகத்தையே தாங்கள்தான் குத்தகை எடுத்திருப்பதான பாவனையில் பேசாதது, முக்கியமாக எதிர்தரப்பு அரசியல்வாதி களைப் பற்றிப் பேசும்போது முகத்தில் இளக்காரச் சிரிப்பு இல்லாதது போன்றவை பல வருடங்களாகக் காணக் கிடைக்காத ஆக்கபூர்வமான விஷயங்களாகவே இருக்கின்றன.

சமீபநாட்களாக தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை என்ற விஷயம் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அதையொட்டி திரு.அண்ணாமலை வெளியிட்டிருக்கும் காணொளிப்பதிவு லிங்க் இங்கே பகிரப்படுகிறது.

https://youtu.be/orzMtaYlqaQ?si=u89kGqmEEnMC4maC

இளந்தலைமுறையினரை மிகவும் பாதிக்கும் சமூக சீர்கேடு போதைப்பொருள் விற்பனை. எனவே, கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்தை மக்களாகிய நாம் அணுக வேண்டும். அணுகுவோம் என்பது என் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.

No comments:

Post a Comment