Friday, December 29, 2023

RAIN BEYOND AND OTHER POEMS By RISHI (Latha Ramakrishnan)

 RAIN BEYOND AND OTHER POEMS

By
RISHI (Latha Ramakrishnan)
Published by PUDHUPUNAL PUBLICATIONS


2016 அல்லது 2017இல் இந்த கவிதைத்தொகுப்பின் முதல் பதிப்பை என் அநாமிகா ஆல்ஃப்ஃபெட்ஸ் மூலம் வெளியிட் டேன். நான் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் 55 இடம்பெறும் தொகுப்பு இது.

இப்போது படிக்கும்போது கவிதை உருவான சூழமை வுகள், உள்தளும்பல்களை அறுதியிட்டுச் சொல்லமுடிய வில்லை. (இது உண்மையான உண்மையில்லை என்றும் உள்ளுணர் வுக்குத் தோன்றுகிறது!). DOWN MEMORY LANE எனப்படும் நினைவுப்பாதையிலான மீள்பயணம் சமயங்களில் மிகவும் களைப்பாகவும், கையறுநிலையிலிருப்ப தாகவும் உணரவைக்கும்.

இந்தத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு இப்போது புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது. தோழர்கள் ரவிச்சந் திரன் - சாந்திக்கு என் மனமார்ந்த நன்றி.

அட்டையின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் இருக்கும் ஓவியங்கள் என் தம்பியின் மகன் வரைந்தவை.
கைக்காசை செலவழித்துப் புத்தகம் வெளியிடுவதிலான பண நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு நான் கைபோன போக் கில் கற்றுக்கொண்ட அட்டை வடிவ மைப்பும், பக்கங்களின் வடிவமைப்பும் இந்தத் தொகுப்பில் பயன்பட்டிருப்பது நிறைவாக இருக்கிறது.



All reactions:
Sri N Srivatsa, Ragavapriyan Thejeswi and 13 others

No comments:

Post a Comment