Tuesday, September 19, 2023

POWERMONGERING - rishi (latha ramakrishnan)

 POWERMONGERING

rishi
(latha ramakrishnan)

Keep looking back steadfast-
Concentrate on that
too distant a past_

So that
you won’t be able to see
what all I loot from thee.

Be my echo;
Be my shadow _

Do not think on your own
Forever remain
my pawn _

Damn
the power to discern _


Be where you are
so that , I can amass for sure
more and more
allocating funds for
welfare measures _

Hear _
for all I care
mere nobody you are .

Second all that I say
always _

Don’t you dare
to come to the fore.
Beware
of consequences dire.

Keep looking back steadfast _
Concentrate on that
too distant a past.
So that
you won’t be able to see
what all I loot from thee.

சமூக ஊடகங்களினால் ஏற்படலாகும் எதிர்மறை விளைவுகள் – போப் ஃபிரான்ஸிஸ் அவர்களின் எச்சரிக்கை

 சமூக ஊடகங்களினால் ஏற்படலாகும்

எதிர்மறை விளைவுகள்
– போப் ஃபிரான்ஸிஸ் அவர்களின் எச்சரிக்கை
(தமிழில்: லதா ராமகிருஷ்ணன்)

//போப்பாண்டவர் ஃப்ரான்ஸிஸ் வாடிகனில் சமீபத்தில் தனது வாராந்திர உரையில் (அவர் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோ ருக்கு ஆற்றிய உரையென்றாலும் அவை அனைத்துப் பிரிவினருக் கும் பொருந்தும்) எடுத்துரைத்திருக்கும் கருத்துகளாக ஆகஸ்ட் 23, 2023 அன்று கூகுளில் வாசிக்கக் கிடைத்தவை, இங்கே சுருக்கமாக, எனில், முக்கிய அம்சங்கள் விடுபடாத அளவு, தமிழில் தரப்பட் டுள்ளன//
…………………………………………………………………………………………………………
போப்பாண்டவர் ஃப்ரான்ஸிஸ் வாடிகனில் சமீபத்தில் தனது வாராந்திர உரையில் (அவர் கத்தோலிக்க மதத்தைச் சார்ந் தோருக்கு ஆற்றிய உரையென்றாலும் அவை அனைத்துப் பிரிவி னருக்கும் பொருந்தும்) *சமூக ஊடகங்கள் மனித உறவுகளை வெறும் படிமுறைத் தீர்வுகளாகக் குறுக்கிவிடும் போக்கைச் சுட்டிக்காட்டி அது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார். சமூக ஊடகங்களில் ‘பிரிவினைவாதப் பிரச்சாரங்கள்’, பிரித்தாளும் சூழ்ச்சிக் குரிய போக்குகள் ஆகியவை குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம் என்று அதிகாரப்பொறுப்பிலுள்ள வர்களை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கத்தோலிக்க ஆட்சியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் போப் ஃப்ரான்ஸிஸ் அவர்கள் சமூக ஊடக வலைப்பின்னலமைப்புகளால் மக்கள் அவரவரை விட பெரிய ஒன்றின் அங்கம் என்பதை உணர்ந்துகொள்ள உதவ முடியும் என்று கூறியுள்ளார்.
சொல்லப்போனால், இதுவே பல சமூக ஊடக மேடைகள் முன்வைக்கும் குறிக் கோளாக இருக்கிறது. இவ்வழியிலான தொடர்களின் மூலம் பல நல்லன நடைபெறு கின்றன என்பதும் உண்மையே”, என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“ஆனாலும், இந்த சமூக ஊடக வெளிகளில் இயங்குவதில் கவனமாயிருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், வருந்தத்தக்க அளவில் இந்த சமூக ஊடகவெளியில் தொழில்நுட்பங்களின் விளைவாக ஏற்படும் அ- மனிதப் போக்குகள் பல உள்ளன. வேண்டுமென்றே சக மனிதர்க ளைப் பற்றி பொய்யான தகவல் களைப் பரப்புவது, பொய் யான செய்திகளைத் தருவது, வெறுப் பையும், பிரிவினை யையும் வளர்ப்பது என்று பலவற்றை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லமுடியும்” என்று குறிப்பிட்டுள்ள போப் ஃபிரான்ஸிஸ் அவர்கள் ‘ஒரு சார்பான பிரச்சாரங்களை யும், மனித உறவுகள் வெறும் ’படிமுறைத் தீர்வுகளாகக் குறுக்கப் பட்டுவிடும் போக்கைக் கண்டனம் செய்துள்ளார்.
சமூக ஊடக வலைப்பின்னலமைப்புகளினால் விளையும் இன்னொரு அவலநிலை, இவை மனிதர்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் ஒரு போலி யான பந்தத்தை, அத்தகைய உணர்வை ஏற்படுத்துகிறது. இது அவர்களை தனிமைப் படுத்தப்படலுக்கும், தனிமை யுணர்வுக்கும் இட்டுச்செல்லக் கூடியது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இளைய தலைமுறையினரில் நான்கில் ஒருவர் இணையம் வழியாக மற்றவர்களுக்குத் தொல்லையளிப்பதாக புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பகத்தன்மை வாய்ந்த எதிர்கொள்ளல் – ஒருவரை யொருவர் மதித்து நடத்தல், நாம் ஒருவருடைய கருத்து களோடு எத்தனை தீவிரமாக முரண்பட்டாலும் ஒருவர் சொல்வதை மற்றவர் கவன மாகக் செவிமடுத்தல் ஆகிய பண்புநலன்களே சமூக ஊடகங்களி னால் ஏற்படும் அபா யங்களுக்கான தீர்வும் நிவாரணமும் என்று போப் பிரான்ஸிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
........................................................................................................................................
Pope warns of social media perils: relationships reduced to algorithms, partisan propaganda, hatred
........................................................
Pope Francis attends his weekly general audience in the Pope Paul VI hall at the Vatican, Wednesday, Aug. 23, 2023. Pope Francis in a speech to Catholic lawmakers has warned against social media reducing human relationships to “mere algorithms” and urged lawmakers to be vigilant against “partisan” propaganda and divisiveness on social media. In his speech on Saturday, Aug. 26, 2023 he said social media networks can help people realize they are part of something larger than themselves. (AP Photo/Andrew Medichini, File)
Photos
ROME (AP) — Pope Francis on Saturday warned against the danger of reducing human relationships to “mere algorithms” and urged lawmakers to be vigilant against “partisan” propaganda and divisiveness on social media.
In a speech to participants of the International Catholic Legislators Network, who were holding their annual conference in the Rome area, Francis noted that social media networks can be a way to help people realize they are part of something larger than themselves.
“Indeed, that is the stated aim of many social media platforms, and certainly much good takes place through these means of communication,” Francis said.
Still, the pontiff said, vigilance was needed, “for sadly many dehumanizing trends resulting from technocracy are found on these media.” He cited the deliberate spread of false information about people, fake news and the promotion of hatred and division. Francis further decried what he called “partisan propaganda and the reduction of human relationships to mere algorithms.”
Another peril on social media networks is “a false sense of belonging, especially among young people, that can lead to isolation and loneliness,” he said.
“statistics show that among young people one in four is involved in episodes of cyberbullying.”
As a remedy, Francis advocated a “culture of authentic encounter, which involves a radical call to respect and to listen to one another, including those with whom we may strongly disagree.”

சிந்தனை செய் மனமே……. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சிந்தனை செய் மனமே…….

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


இல்லாத எதிரியை சொல்லால் உருவாக்கித் தந்தவர்

தன்னைச் சுற்றியுள்ள எல்லோர் கைகளிலும்
அட்டைக்கத்திகளைத் திணித்து
அவை உண்மைக்கத்திகளாகும் சாத்தியப்பாடுகளை
பொங்கும் உவகையோடு எண்ணிப்பார்த்தபடி
உண்ணத் தொடங்குகிறார்
தங்கத்தட்டில்.

ஆகுபெயர் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஆகுபெயர்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


அந்த ஊரே ’ஒரு மாதிரி’ என்றவர்
ஊரைத்தான் சொன்னேன் அங்கிருப்போரையல்ல
வெனச் சொன்னதைக் கேட்டு
’கூறுகெட்ட பதர்’ என்று
பதிலுக்கு ஊர் கூற
சீறியெழுந்தாரைப் பார்த்து
பதரைத்தானே சொன்னேன்
என்று பட்டெனக் கேட்டது ஊர்.

மறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மறுபக்கம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பார்
வடிகலனில் பொடிகற்களைக் கலந்தபடி;
ஒற்றை நாசித்துவாரம் மட்டுமே உள்ளதென்பார்
பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தபடி;
கருத்துரிமைக்காய் குரல் கொடுப்பார்
கனகம்மாவின் பார்வையைக் கொடும்பாவி எரித்தபடி;
பெண்முன்னேற்றப் பதக்கங்களைத் தந்திருப்பார்
தத்தம் சானல்களில் அவளைத் துகிலுரிந்தபடி;
வீணாப் போனவர்கள் எண்ணிக்கை
எக்கச்சக்கமாகிவிட்டதிப்படி
யென்று(ம்)
அங்கலாய்த்தபடி
காணாப்பொணமாக்கிவிட்டுக்
கண்ணீரஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியபடி;
ஒற்றை விடைக்கேற்ற ஓராயிரம் கேள்விகள்
கற்றுத்தரப்பட்டுக்கொண்டிருப்பது எப்படி
யெப்படி
தப்படி
அப்படி
யிப்படி
படி படி படி நாளும் படி மேலும் படி
கற்கக் கசடறக் கற்றபின் அதற்குத் தக நில்லாமல் எப்படி?
காணாமல்போன ‘கற்பவை’யைத் தேடி
திக்குத்தெரியாத காட்டில் ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி….
இந்த நாளும் ஆடியடங்குகிறது
’அட சர்தான் போடி’ என்றபடி

ஊர்ப்பஞ்சாயத்து - ஊர்விலக்கம் _ லதா ராமகிருஷ்ணன்

ஊர்ப்பஞ்சாயத்து - ஊர்விலக்கம்

_ லதா ராமகிருஷ்ணன்


.................................................................................

அண்மையில் ஜூனியர் விகடனில் வந்த செய்தி இது.

தமிழகத்தில் சேலம் மாவட்ட கொளத்தூரைச் சேர்ந்த ஊர்ப்பஞ்சாயத்தில் கலப்புமணம் செய்தவர்களை ஊர்விலக்கம் செய்கிறார்கள்,
பெண்ணுக்கு கைம்பெண் என்ற பொருளைக் குறிக்கும் ‘மயிலு’ என்ற பட்டம் கட்டுகிறார்கள், ஊர்க்குத்தம் என்று பஞ்சாயத்து பகுத்தால் அதற்காக அம்மணமாய் பஞ்சா யத்தார் காலில் விழ வேண்டுமாம்.
பெற்றோர்களின் சம்மதத்துடன் நடந்திருக்கும் கலப்புத் திருமணத்திற்காக சம்பந்தப்பட்ட குடும்பத்தை ஊர் விலக்கம் செய்திருக்கிறார்களாம்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ‘ஊர் வழக் கத்தை மீறி உங்களால் வாழ முடியுமா’ என்று கேட்கிறார் களாம் காவல் அதிகாரிகள்.
படிக்கப் படிக்க தலை சுற்றியது; சூடேறியது.
இந்திய அரசியல் சாஸனப்படியான ஆட்சி நடக்கும் நாட் டில், நாட்டைச் சேர்ந்த மாநிலத்தில், அதுவும் மற் றெல்லா மாநிலங்களை விடவும் பகுத்தறிவில் சிறந்து விளங்குவதாகச் சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்படியொரு நிகழ்வு (இது விதிவிலக்கல்ல, வழக்கமாக நடைபெறுவது என்கிறார்கள்.
சட்டத்திற்குப் புறம்பான இந்த ஊர்ப்பஞ்சாயத்து நடை முறையை எதிர்க்கவும், ஒழிக்கவும் தற்போதைய அரசு முந்தைய அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக் கின்றன?
உண்மையாகவே எடுத்திருந்தால் இந்த நடைமுறைகள் இன்னமும் ஏன் கிராமப்புறங்களில் வழக்கத்திலிருக் கின்றன?
திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பெரும் பாலானவற்றில் புகை பிடிக்கும் காட்சிகள், மதுவருந்தும் காட்சிகள் தவறாமல் இடம்பெறுகின்றன. கூடவே அதன் கீழே ’இக்கிணியூண்டு’ எழுத்துகளில் ‘குடி குடியைக் கெடுக்கும்’ போன்ற வாசகங்கள் மின்னல் வேகத்தில் ஓடிமறைகின்றன.
கோயில்களில் கொலை செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவது, தடபுடலாக சீர் செனத்தி செய்வது, இந்துமதம் என்றாலே மூட நம்பிக்கைகள், முரட்டுத்தனமான சடங்கு சம்பிரதாயங்கள் என்றவிதமாய் காட்சிகளை அமைப்பது என்று வண்ணமயமாய் காட்சிகள் இடம்பெறு கின்றன.
ஊர்ப்பஞ்சாயத்து முறையை , கட்டப்பஞ் சாயத்து முறையை விலாவாரியாகக் காட்டாத மெகாத்தொடர் களே இல்லையெனலாம்.
இத்தகைய காட்சிகளை யெல்லாம் வெகு தாராளமாக அனுமதிப்பது எப்படி? இவை பார்வையாளர்கள் மனங்க ளில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும்?
திரைப்படமோ, தொலைக்காட்சித்தொடரோ கருநிறப் பெண்கள், தேன்வண்ணப் பெண்கள் வெகு அரிதாகவே இயல்பான கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள்.
மாவு அப்பிய வெண்முகங்களும், மேனிகளாகவுமே பெண்களைக் காட்டவேண்டிய அவசியமென்ன?
அப்படியே கருநிறப் பெண்கள் இடம்பெற்றாலும் அவர்க ளுடைய கருநிறத்திற்காக அவர்கள் கேவலப்படுத்தப் படுவதாக, கண்ணீர்விட்டழுவதாகவே பெரும்பாலும் இருப்பார்கள். பகுத்தறிவுப் பாசறைகளிலிருந்து வெளிவரும் பிரம்மாண்டப் படங்களிலும் இதுவே வாடிக்கை.
உண்மையாகவே சமூக சீர்திருத்த நோக்கமும் இலக்கும் இருப்பின் அரசுகள் ‘எண்டெர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் இத்தகைய மக்கள் விரோதப் படைப்பம் சங்களை எப்படி அனுமதிக்கலாம்?
இதுவா FREEDOM OF EXPRESSION?
கிராமங்களில் இன்னும் ஊர்ப்பஞ்சாயத்துமுறையை, அந்த அமைப்பு தரும் தண்டனைகளை அனுமதித்துக் கொண்டிருப்பது அரசுக்கு அழகா?
சமூகப் பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு. அரசுக்கு அதிகம் உண்டு. Disclaimer, BlameGame உத்திக ளைக் கையாண்டு தம்மை தமக்கான சமூகப்பொறுப்பிலி ருந்து விலக்கிக்கொள்ள முயற்சித்தல் முறையல்ல.

தினம் நிகழும் கவியின் சாவு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தினம் நிகழும் கவியின் சாவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத்
தின்னும்போதும்
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும்
அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ
சிறு கவிதையொன்றில்
குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு
தரச்சென்றவனை
ஒரு கையில் கடப்பாரையும்
மறு கைநிறைய ஈரச்சாணியும் ஏந்தி
வழிமறித்த வாசக - திறனாய்வாளர் சிலர்
கண்ணனை மறைமுகமாய் புகழ்ந்தேத்தும் நீ
கொடூர நீச மோச நாச வேச தாரி
யென் றேச, பழி தூற்ற
ஏதும் பேசாமல் காற்றுவெளியிடைக் கண்ணன் மனநிலையைக் கண்டுவர
தன்வழியே காலெட்டிப்போட்ட கவி
தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்:
’கிட்டும் வாசகப் பிரதிகள் வரம் மட்டுமல்ல...
கட்டுடைத்தலில் தட்டுப்படுவது
படைப்பாளியின் அடையாளம் மட்டுமல்ல’.

பாரதியார் கவிதையில் கிடைக்கும் வாசகப்பிரதிகள் -2

பாரதியார் கவிதையில் கிடைக்கும் வாசகப்பிரதிகள் -2


பாரதியாரின் இந்தக் கவிதையில் ஆரம்பம் முதல் இறுதிவரை யான கவிதைவரிகள் இணைந்தே கவிதை முழுமையடைகி றது என்று படுகிறது.

இருந்தாலும் கவிதையில் இடம்பெறும் ’சிவசக்தி’யின் பல்பரி மாணங்களே கவிதையைக் கவிதையாக்குகிறது என்று தோன்றுகிறது.

ஒரு கவியாய் பாரதியார் ‘சிவசக்தி’ என்ற சொல்லை ஒற்றைப் பரிமாண அர்த்தத்தில் கையாண்டிருப்பார் என்று தோன்ற வில்லை.

ஒரு வாசகராக நாம் அந்த வார்த்தையை எப்படி உள்வாங் குகிறோம் என்பதே நம் வாசகப்பிரதியாகிறது என்று தோன்று கிறது.


நல்லதோர் வீணை
மகாகவி பாரதியார்.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

ஏழை வாக்காளரின் எளிய மடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏழை வாக்காளரின் எளிய மடல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பெருந்தனம் வரவாக்கிக்கொள்ளலே
முழுநேர வேலையெனப்
பழகாமல்
தினந்தினம் வறுமையிலுழன்று
வதனம் பொலிவிழந்து
வாய்த்த மனம் கன்றி
யழியும்
வழியறு மக்களை
மெய்யாய் ஆதரித்துப் புரந்து காத்தலே
ஆட்சிக்கழகெனப்
புரிந்தவ் வழி யேகி
அனாதரட்சகராய்
மடியில் கனமின்றி
மணக்கும் சந்தனமாய்
மக்கள் பணியாற்றக்கூடும்
ஆன்றோர் சான்றோர்
அரசியல்வாதிகளுக்கெல்லாம்
அடியாழ மனமிருந்து
அனேகனேக வந்தனம்.

மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிப்பதா?

மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிப்பதா? 

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) அ.ராசாவின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன

டைம்ஸ் ஆஃப் இண்டியா, செப்டெம்பர் 9, 2023.
[DISABILITY RIGHTS BODIES PROTEST AGAINST A.RAJA’S STATEMENT]
Times of India, Saturday 9, 2023
........................................................................................................................................

சனாதன தர்மத்தை எய்ட்ஸ்(HIV), தொழுநோய் (LEPROSY) ஆகியவற்றுடன் ஒப்பிட்டு திமுகவைச் சேர்ந்த முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ராஜா பேசியதற்கு மாற்றுத்திறனா ளிகள் உரிமை அமைப்புகள் (DISBAILITY RIGHTS ORGANIZATIONS) கண்டனம் தெரிவித்துள்ளன.
THE LEPROSY MISSION OF INDIA இது குறித்து சம்பந்தப்பட்ட திமுக தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனது கூற்றை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும், அவருடைய கூற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாகும் பாதிப்புக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டு மென்றும் கோரப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிதத்தில் மற்ற உடற்குறபாடுடைய மாற்றுத்திறனாளி களுக்கான அமைப்புகளோடு தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்காக இயங்கிவரும் ASSOCIATION OF PEOPLE AFFECTED BY LEPROSY (APAL)யும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘உடற்குறைபாடுகளுடையவர் களுக்கான அதிகார-உரிமை அளித்தல் தொடர்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் DEPARTMENT OF EMPOWER MENT OF PERSONS WITH DISABILITY என்ற துறையின் தலை வருக்குக் கடிதமெழுதவும் திட்டமிட்டிருக்கிறார் கள்.

2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உடற்குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டி ருக்கும் 21 வகையான உடற்குறைகளில் தொழுநோயிலிருந்து மீண்ட நபர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு (NATIONAL PLAT FORM FOR DISABLED PERSONS மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்படுத்தலுக்கான தேசிய மையம் [NATIONAL CENTRE FOR PROMOTION OF EMPLOYMENT FOR DISABLED PEOPLE (NCPEDP)] போன்ற அமைப்பு களை நடத்திவரும் சமூகநலச் செயல் பாட்டாளர்கள் திரு. ஏ.ராஜாவின் பேச்சு குறித்து ஆட்சேபணை யும் கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட திமுக தலைவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் நிகிதா ஸாரா, THE LEPROSY MISSION TESTன் COMMUNICATION AND ADVOCACY பிரிவின் தலைவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கும் மக்கள் பிரதி நிதிகள் தொழுநோய் போன்ற உடல்நலன் சார்ந்த விஷயங் களைப் பற்றிப் பேசும்போது மிகவும் கவனத் தோடும், பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது”, என்று குறிப்பிட்டுள்ளார்.
”தலைவர்களின் வார்த்தைகளும், கண்ணோட்டங்களும் பொது மக்களின் பார்வையிலும் நடத்தையிலும் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தும்” என்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பின் (NATIONAL PLATOFROM FOR THE RIGHTS OF THE DISABLED) பொதுச் செயலர் திரு. முரளி தரன, “முன்னாள் மத்திய அரசின் அமைச்சராக இருந்த வரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பின ராக இருப்பவருமான ஒருவர் இப்படிப் பேசியிருப்பது மிகவும் வருந்தத் தக்கது. எய்ட்ஸ், தொழுநொய் போன்ற உடல்நலன் சார் ந்லைமைகளை இவ்வாறு மதிப்பழிக்கும் தொனியில் பேசி யிருப்பது மன்னிக்க முடியாதது”, என்று கூறியுள்ளார்.
NATIONAL CENTRE FOR PROMOTION OF EMPLOYMENT FOR DISABLED PEOPLE [NCPEDP)]யின் நிர்வாக இயக்குனரான திரு. அர்மான் அலி “தொழுநோயானது, மற்ற எந்த உடற்சார் நிலைமைகளைப் போலவே, சமூகப்புறக் கணிப்புக்கானதாய் பேசப்படலாகாது. தனிநபர்களை மதிப்பழிக்கும் வழியாகப் பயன்படுத்தப்படலாகாது. இம்மாதிரி மொழிப் பயன்பாட்டை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். இத்தகைய பேச்சு தொழுநொயால் பாதிக்கப்பட்ட வர்களைப் புண்படுத்துவதோடு மட்டு மல்லாமல் இந்த நோய் ஒருவருக்கு இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து குணப் படுத்தும் முயற்சிகளை மேம் படுத்துவதற்கும் முட்டுக்கட்டையாகிறது”, என்று அழுத்தமாய் எடுத்துரைத்திருக்கிறார்.

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)

கண்டதைச் சொல்லுகிறேன்…… ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கண்டதைச் சொல்லுகிறேன்……

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சாலையோரமாய் ஒரு ஆளைச் சுற்றி நின்று
தர்ம அடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்
சிலபலர்.
கோட்டுசூட்டு போட்டவர்களும் கரைவேட்டிகட்டியவர்களும்
நாட்டமைக்காரர்களாய் தீர்ப்பளித்துக்
கொண் டிருந்தார்கள்.
காலெட்டி நடைபோட்டுக்கொண்டிருந்
தோரெல்லாம்
கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்து
கைக்கெட்டும் தோள் அல்லது தலை
அல்லது காது அல்லது பின்மண்டை
அல்லது மேற்கை அல்லது முதுகு
அல்லது பிட்டம்
என ஆளுக்கொன்றிரண்டு அடி கொடுத்து
Photo-Shoot சமூகக்கடமையாற்றிமுடித்ததாய்
ஆசுவாசத்தோடு அப்பாலேகினார்கள்.
அட என்ன தான் செய்தான் பையன் என்று
அடித்த பின் அடுத்திருந்தவர் கேட்க _
அரைக்கணம் தடுமாறி பின்
’அதைத் திருடினான் இதைத் திருடினான்
அவரை எட்டி உதைத்தான்
இவள் கையைப் பிடித்திழுத்தான்’
என ஆளுக்கொரு காரணம் சொல்ல _
அவற்றின் உண்மைத்தன்மை நம்பகத்தன்மை
சொல்பவரின் தரம் அறம் யெதையுமே
அறியவோ சரிபார்க்கவோ விருப்பமின்றி
பொறுப்புமின்றி
சுரவேகத்தில் அவற்றை மனனம் செய்து
சேர்ந்திசையாகப் பாடியவாறே
கரகரவென்றந்தப் பையனை இழுத்துச்சென்று
அங்கிருந்த மரமொன்றில் கட்டிவைத்துப்
பின்னும் முண்டியடித்து அடிக்கத்
தொடங்கியவர்களில்
நிதி மோசடிக்காரர்கள்,
நிலக்கொள்ளைக்காரர்கள்
வரி ஏய்ப்பாளர்கள்
கையூட்டு பெறுவோர்
விஷங்கக்கும் பரப்புரைகளைக்
குரல்வளையிலிருந்து
துப்பித்துப்பியே
வீதியடைத்திருக்கும் மாடமாளிகைகளை
இப்போதும் எப்போதும்
வளைத்துப்போட்டிருப்பவர்
அன்னாரே, அன்னபிறரே
நன்னான்கு கைகளோடு
முன்னணியிலிருந்தார்கள்.