Thursday, July 6, 2023

தொழில்நுட்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொழில்நுட்பம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
AUDI கார்கள் ஐந்து வாங்கிவிட்டவர்
இவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
இருபது ஊர்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டிவிட்டவர்
வாயில்லாத இவர்களுக்கு நானே குரல் என்று சொல்லிச்சொல்லியே
வாய்த்த இடங்களிலெல்லாம் நிலபுலன்கள் வாங்கிப்போட்டிருப்பவர் வகைவகையாய் அடுக்குமாடி வீடுகள் வளைத்துப்போட்டிருப்பவர்
இன்னும் பல லட்ச அசையும் அசையாச் சொத்துக்களை
- இல்லையில்லை இன்றைய சூழலில் லட்சங்கள் என்றால்
அது மதிப்பழித்தலாயிற்றே – எனவே
இன்னும் பல கோடி அசையும் அசையாச் சொத்துகளை உடைமைகொள்ளும்
சமூகத் தொலைநோக்குப் பேரவாவில் பெருங்கனவில்
நேற்றிலிருந்து பெங்குவின்களுக்கு நான் தான் பேசக் கற்றுக்கொடுத்தேன் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.....
அண்டார்ட்டிகா பிரதேசத்தில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பு
கிடைக்காமலாபோய்விடும்?

No comments:

Post a Comment