Tuesday, November 8, 2022

நல்லுள்ளமும் நானும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நல்லுள்ளமும் நானும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மந்திரமாகும் சொல் மனதுள் செல்லச்செல்ல
கனத்துப் படிந்திருக்கும் அழுக்குப் படலமழிந்து
சுந்தரமாகும் உள்.
சுதந்திரம் கள்ளமில்லாப்
பேருவகை கொள்வதாம்.
தாறுமாறாய் இறுகியுள பாசிபடர் பாறைகள்
ஊறிய நீரில் நெகிழ்வதொரு
வந்தனையாய்
அந்தரத்தொலித்த அருள்வாக்காயவ்
வொரு சொல்
’எந்தரோ மகானுபாவுலு’வுக்கு எனைச்
சொந்தக்காரியாக்க,
உள்ளுறை யாங்கார
நிந்தனைகள் நீங்க,
இத்தருணம் மின்னும் இன்னுமின்னும்
பத்தரைமாற்றுத் துலக்கம் நாடும்
நல்லுள்ளம் நானாக
காடாறு மாதம் நாடாறு மாதம்
காடு நாடாகும் நாடு காடாகும்
ஆறாக் காட்சிமயக்கம் கவினுறு வாழ்வாக
*கவி பிரம்மராஜனின்
’வெல்லும் வெல்லுமென நிற்கிறேன்
என் சொல்லும் சொல்’
புவிமிசை இன்று மென்றும்
தீராக் கவிதையாக….

.....................................................................................................
*கவிஞர் பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் (1988) தொகுப் பில் இடம்பெறும் சொல்லும் சொல் என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் இறுதிவரி கள் இவை. 'என்னுடைய சொல்லும் சொல், 'என்ன சொல்லலாகும் சொல் என ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியத்தைக் கொண்டி ருப்பது. கவிஞர் பிரம்மராஜனை ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டும் அங்கீ கரித்து அவருடைய கவிதை களைப் புறந்தள்ளுபவர்களும், காலாவதியான கவிஞர் என்று அவரைப் பழித்துரைப்பவர்களும் பரிதாபத்திற்குரியவர்களே.

No comments:

Post a Comment