Thursday, June 9, 2022

சொல்லத் தோன்றும் சில…… லதா ராமகிருஷ்ணன்

 

சொல்லத் தோன்றும் சில……

 

லதா ராமகிருஷ்ணன்

ஆங்கில நாளிதழிலும் தமிழ் நாளிதழிலுமாய் தினமும் ஒன்றிரண்டு செய்திகள் மனதின் அமை தியை முறித்துப் போடத் தவறுவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி. 14 வயது டைய பள்ளிச் சிறுவர்கள் மூவரோ நால்வரோ அவர்களுடைய வகுப்புத் தோழி ஒருத்தியோடு அவளுடைய வீட்டில் ஒன்றாகப் படிப்பது வழக்க மாம். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை நிமித்தம் வெளியே போயிருக்க அந்தப் பெண் ணின் தங்கையை வெளியே போய் விளையாடச் சொல்லியிருக்கிறார்கள் சிறுவர்கள். சிறிது நேரங் கழித்து வீடு வந்தவள் மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பார்த்தால் வகுப்புத் தோழியை நிர்வாணமாக்கி கைகளை யும் கண்களையும் கட்டி நீலப்படம்போல் வீட்டில் நடத்திப் பார்க்க முயற்சி நடந்துகொண்டிருந்த தாம்.

அழுதுகொண்டே தங்கையிடம் வீட்டாரிடம் தெரி விக்க வேண்டாமென அக்கா சொல்லியிருக்கி றாள். சில நாட்களில் அக்காவுக்கும் தங்கைக் கும் ஏதோ சண்டை வர தங்கை அம்மாவிடம் நடந்த தைச் சொல்லிவிட்டாள்.

அவளுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தர அந்தப் பையன்கள் கூர்நோக்குப் பள்ளிக் கும் அந்தப் பெண் சீர்திருத்த இல்லத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. CBSC PLUS 2 மாணவர்கள் இருவர். பெரிய விரோதமெல்லாம் கிடையாது. ஒருவனின் உடற் பருமனையும் அவனுடைய மார்புப் பகுதியையும் மற்றவன் கிண்டல் செய்துகொண்டேயிருப்பா னாம். பருமனாயிருக்கும் பையனை தேவையில் லாமல் அங்கே யிங்கே தொட்டு கேலி செய்வா னாம். அது BODY SHAMING ஆகவும் இருந் திருக்கலாம். ஓரினப்புணர்ச்சிக்கான அழைப்பாக வும் இருக்கலாம். பருமனாயுள்ள பையன் அது குறித்து பள்ளியிலும் புகார் செய்து பள்ளியிலும் அந்த இன்னொரு மாணவனைக் கண்டித்திருக்கி றார்கள். சமீபத்தில் அந்த பருமனான பையன் மற்றவனை நட்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தயாராகக் கொண்டுசென்றிருந்த கத்தி யால் குத்தியிருக்கிறான். அந்தப் பையன் இறந்து விட்டான்.

விவரமறிந்து, கொன்றவனின் பெற்றோர் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு எதனால் அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறான் அந்த மாணவன். அவனும் இப்போது கூர்நோக்கு இல்லத்தில்.

 சின்னக்குழந்தைகள் மீதான கவனமும், அக்கறை யும் வளரிளம்பருவத்தினர் மீதான அக்கறையும் இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் பன் மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ப தையே இத்தகைய செய்திகள் புலப்படுத்துகின் றன.

குழந்தைகளும் வளரிளம்பருவத்தினரும் பெற் றோர், ஆசிரியர்களின் பொறுப்பு என்ற பார்வை சரியல்ல. ஒட்டுமொத்த சமூகமும் இதற்கான பொறுப்பேற்க வேண்டும். இப்படி யொரு செய்தி யைப் படித்ததுமே சிலர் அதற்கு சாதிச்சாயம் பூசிப் பார்க்க முற்படுவதும் இந்தக் காலத்துப் பிள்ளை களே இப்படித்தான் என்று எல்லோரை யும் ஒரு மொந்தையாக்கி அங்கலாய்ப்பதும், பிரச்சனைக் குத் தீர்வாகாது.

 

No comments:

Post a Comment