Tuesday, January 25, 2022

கோயிலும் தெய்வமும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கோயிலும் தெய்வமும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருக்கு சரணாலயம்
சிலருக்கு சுற்றுலாத்தலம்
சிலருக்கு சிற்றுண்டியகம்
சிலருக்கு நடைப்பயிற்சி வெளி
சிலருக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’
செயல்படும் இடம்
சிலருக்கு வம்புமடம்
சிலருக்குக் கருணைக்கடல்
சிலருக்கு தம் செல்வச்செழிப்பின்
கண்காட்சித் திடல்
சிலருக்கு சப்தநாடி
சிலருக்கு சின்ன மூளையைப் பெரிதாக்கிக்
காட்ட உதவும் பூதக்கண்ணாடி,
சிலருக்கு திருவருள்
சிலருக்கு
சீன ருஷ்ய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
உதவிப்பணத்தோடு ஆய்வுப்பட்டம் பெறுவதற்கான
அதிமுக்கியக் கருப்பொருள்.

No comments:

Post a Comment